தகவல்கள்

டிசம்பர் 1-15,2021

தமிழ் – கொரியா தொடர்பு

வோமர் பி. ஹல்பர்ட் என்ற ஆராய்ச்சியாளர் சி. மொழிகளுக்கும் கொரிய, ஜப்பானிய மொழிகள் இடையிலான தொடர்பு பற்றிய கருதுகோளை 10 முன்வைத்தார். சுசுமு ஓனோ (1970) கொரிய ஓப்பான். மொழிகளின் சொற்களில் திராவிட மொழிகளின் குறிப்பாகத் தமிழ்மொழியின் தொடர்பு பற்றி வெளியில் கருத்துகள் அதிர்வலைகளை ஏற்படுத்தின. 1984இல் மொர்கன் இக்ளிப்பிங்கர் கொரியா மற்றும் திராவிட மொழிகள் பற்றிய பல தரவுகளை முன்வைத்தார். இக்ளிப்பிங்கரின் இந்தக் கருத்தை மீள்வாசிப்பு செய்யவேண்டும் என்று சியோல் தேசியப் பல்கலைக்கழகப் பேராசிரியர் லீ கி மூன் 2011இல் தெரிவித்தார்.

கொரியா தமிழாய்வுத் தலைவர் ஜங் நம் கிம் “கொரிய மொழிக்கும் திராவிட மொழிகளுக்கும் இடையிலான தொடர்பு வலுவானது. ஆனால் அதை இருமொழிகளின் தோற்றம் சார்ந்த மொழி மரபுத் தொடர்பு என்று கூறமுடியாது இதுபற்றி மேலும் ஆய்வுகள் தேவை” என்கிறார்.

நெடுங்காலத்திற்கு முன்பே கொரியா, ஜப்பான் போன்ற பகுதிகளுக்குக் தமிழர்கள் புலம்பெயர்ந்ததால் இம் மொழியுறவு நேர்ந்திருக்கும் என்று சில ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இக்கருதுகோளை முன்மொழிந்த ஆய்வாளர்கள், நான், நீ, வா, அப்பா, புல், நாள் உள்ளிட்ட பல தமிழ்ச்சொற்களைக் கொரிய மொழிச் சொற்களோடு ஒப்பிடுகிறார்கள்.

(நன்றி: ஆனந்தவிகடன்)


பக்கத்து நாட்டில் பெட்ரோல்!

இந்தியாவில் ஒரு லிட்டர் பெட்ரோல் 106 ரூபாய் (சென்ற மாத நிலவரம்) என்ற அளவில் விற்பனை செய்யப்படுகிறது. அதேநேரம், பூட்டானில் ஒரு லிட்டர் பெட்ரோல் இந்திய ரூபாய் மதிப்பில் 81 ரூபாய் 30 காசுகளுக்கும்; நேபாளத்தில் 81 ரூபாய்க்கும்; வங்கதேசத்தில் 78 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல, இலங்கையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 68 ரூபாய்க்கும்; மியான்மரில் 63 ரூபாய்க்கும்; பாகிஸ்தானில் 60 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.

ஒவ்வொரு நாடும் வசூலிக்கும் வரிகள் மற்றும் அளிக்கும் மானியங்கள் இவற்றின் அடிப்படையில் நுகர்வோர் பெட்ரோலுக்கு அளிக்க வேண்டிய விலை நிர்ணயிக்கப் படுகிறது. போக்குவரத்து செலவு மற்றும் சுத்திகரிப்பு செலவும் நாட்டுக்கு நாடு வேறுபடுகிறது. என்றாலும், இந்தியாவில் பெட்ரோல் விற்கப்படும் விலைக்கும் அண்டை நாடுகளில் விற்கப்படும் விலைக்கும் பெரிய அளவில் வித்தியாசம் உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *