உணவே மருந்து : இஞ்சியின் நன்மைகள்

அக்டோபர் 16-31,2021

இஞ்சி என்பது ஒரு வகை மூலிகைக் கிழங்காகும். இது உலகம் முழுவதும் பரவலாகப் பயன்படுத்தப்படும் பொருளாகும். இஞ்சியில் பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. இது ஆன்ட்டிஃபங்கள், ஆன்ட்டி செப்டிக், ஆன்ட்டி பயோடிக் மற்றும் ஆன்ட்டி வைரல் பண்புகளைக் கொண்டுள்ளது மற்றும் இதில் ஏராளமான வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன. சில சமயங்களில், இஞ்சி ஒரு மருந்தாகவும் பயன்படுத்தப்படுகிறது.

இஞ்சியில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி,  வைட்டமின் ஈ மற்றும் பி காம்ப்ளக்ஸ் ஆகியவை உள்ளன. இதில் மெக்னீசியம், பாஸ்பரஸ், சிலிக்கான், சோடியம், இரும்பு, துத்தநாகம், கால்சியம் மற்றும் பீட்டா _ கரோட்டின் போன்ற தாதுக்களும் உள்ளன. இவை அனைத்தும் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகின்றன.

செரிமானத்தை மேம்படுத்துகிறது

(Enhances digestion):

வயிறு தொடர்பான நோய்களைத் தடுக்க இஞ்சி மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. இரைப்பைப் பிரச்சினைகளை குறைப்பதிலும், குடல் வீக்கத்திலும் இது நன்மை பயக்கிறது.

குடல் இயக்கங்களை மேம்படுத்துகிறது (Improves bowel movements):

இஞ்சி வெளியேற்ற அமைப்பின் செயல்-பாட்டை மேம்படுத்துகிறது. குடல் அசைவுகள் தொடர்பான அனைத்து கோளாறுகளுக்கும் சிகிச்சையளிகக உதவும் மருத்துவப் பண்புகள் இஞ்சியில் நிறைந்துள்ளன. இஞ்சியில் உள்ள வைட்டமின் பி6 வெளியேற்ற அமைப்புக்கு பயனுள்ளதாக அமைகிறது. இது கர்ப்பிணிப் பெண்களுக்கு நன்மை பயக்கிறது.

கீல்வாதத்தைத் தடுக்கிறது (Prevents Arthritis):

கீல்வாதத்தால் பாதிக்கப்படுபவர்கள், இஞ்சியை தவறாமல் உட்கொள்ள வேண்டும். இதில் அதிக அளவில் கால்சியம் உள்ளது. இது எலும்புகளைப் பலப்படுத்துகிறது.

இருமலைக் குறைக்கிறது (Reduces cough):

இஞ்சி கொழுப்பின் அளவைச் சீராக்குகிறது மற்றும் இரத்த அழுத்தத்தை ஒழுங்குபடுத்து-கிறது. இதன் விளைவாக, இதயம் தொடர்பான நோய்களின் அச்சுறுத்தலைக் குறைக்க முடிகிறது. இஞ்சியில் உள்ள பொட்டாசியம் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கிறது.

நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துகிறது (Controls Diabetes):

இஞ்சி உடலின் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க உதவுகிறது. இது உடலில் சரியான அளவில் இன்சுலினை உற்பத்தி செய்ய உதவுகிறது. மேலும், நீரிழிவு நோயைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது.

ஒற்றைத் தலைவலியைத் தடுக்கிறது (Prevents Migraine):

ஒற்றைத் தலைவலி வலியைக் குறைக்க இஞ்சி தேநீர் மிகவும் நன்மை பயக்கிறது. இதில் உள்ள வைட்டமின்களும், ஊட்டச்சத்து கூறுகளும் ஒற்றைத் தலைவலிக்கு நிவாரணம் அளிக்கின்றன.

சளியைத் தடுக்கிறது (Prevents Cold):

இஞ்சியில் உள்ள ஆன்டிவைரல் மற்றும் ஆன்ட்டி ஃபங்கள் பண்புகளின் காரணமாக, இது தடுமன் பிடிப்பதைத் தடுக்கிறது.

மாதவிடாய் வலியைக் கட்டுப்படுத்துகிறது (Controls Menstrual pain):

பெண்களின் மாதவிடாய் காலத்தில் உண்டாகும் வலியைக் குறைக்க இஞ்சி தேநீர் பயன்படுத்தப்படுகிறது. இஞ்சியில் உள்ள ஆன்ட்டி ஆக்ஸிடன்ட், இந்த வலிக்கு நிவாரணம் அளிக்கிறது.

புற்றுநோயைத் தடுக்கிறது (Prevents Cancer):

புற்றுநோய் மிகவும் ஆபத்தான நோயாகும். இஞ்சி புற்றுநோய் செல்களை நீக்கி புற்றுநோயைத் தடுக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *