தகவல்

ஜுலை 16-31,2021

கடலும் ஒலியும்

காற்றில் பரவுவதைவிட அய்ந்து மடங்கு அதிக வேகத்துடன் கடல்நீரில் பரவுகின்றன ஒலி அலைகள். இரை பிடிக்க, வசிப்பிடத்துக்கு வந்து சேர, தனக்கான இடத்தை வரையறுக்க, இணை தேட, எச்சரிக்க, எதிரிகளைத் தாக்க எனப் பல்வேறு காரணங்களுக்காக ஒலி அலைகளைப் பயன்படுத்துகின்றன கடல்வாழ் உயிரினங்கள்.

கிட்டத்தட்ட 20,000 மீன் இனங்களால் நன்றாகக் கேட்க முடியும், 800 மீன் இனங்கள் ஓசையை உருவாக்கும் ஆற்றல் படைத்தவை. பல மீன் இனங்களின் ஒலிகள் பாடல் இசைப்பது போன்று உள்ளன. மிட்ஷிப்மன் என்ற மீன் மிக அழகாக இசை ஒலி எழுப்பி தன் இணையைக் கவரும்.

‘ஃபைண்டிங் நீமோ’ திரைப்படத்தில் ஒரு மீன் வரும். இது ஒரு கோமாளி மீன் (Clown fish). இதன் முட்டையிலிருந்து வெளியில் வரும் லார்வா, முதலில் ஆழ்கடல் பரப்பில்தான் சுற்றிக் கொண்டிருக்கும். லார்வாவிலிருந்து மீனாக உருமாறும் பருவம் வரும்போது, தன் தாய்வீடான பவளத்திட்டு எங்கே இருக்கிறது என்பதை சத்தங்களால்தான் தேடிக் கண்டுபிடிக்கும். ஒரு பவளத்திட்டு என்பது சந்தடியும் இரைச்சலும் நிறைந்த ஞாயிற்றுக்கிழமை சந்தை போன்றது. அந்த மிகை ஒலியைப் பின்தொடர்ந்து செல்லும் லார்வா, ஒரு வழியாக பவளத்திட்டை அடைந்தவுடன் தன் வாழ்க்கைப் பயணத்தை ஆரம்பிக்கும்.


 விண்வெளியில் உருவாகும் உணவு விடுதி!

அமெரிக்காவின் ஆர்பிட்டல் அசெம்பிளி கார்ப்பரேஷன் நிறுவனத்தின் சார்பில் விண்வெளியில் கட்டப்பட்டு வரும் வோயேஜர் நிலையத்தின் உணவு விடுதி கட்டுமானப் பணிகள் வரும் 2025ஆம் ஆண்டில் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த உணவு விடுதியில் தங்கும் அறைகள், திரை அரங்கு, பார், மசாஜ் கிளப் என ஏராளமான வசதிகள் உள்ளன. ஒரே நேரத்தில் 400 பேர் வரை தங்கும் வசதி கொண்ட இந்த உணவகத்தின் கட்டுமானப் பணிகள் விரைவாக நடந்து வருகின்றன. ஒரு கப்பலில் நீங்கள் பார்க்க விரும்பும் அனைத்தும், ஆனால் இது ஒவ்வொரு 90 நிமிடங்களுக்கும் உலகைச் சுற்றும் வகையில் இருக்கும். பணிகள் நிறைவுற்ற பின், இது அமெரிக்க விண்வெளி ஆய்வு மய்யமான நாசாவிடம் விற்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.

 


 

 வியக்க வைக்கும் விதிமீறல் தண்டனைகள்

வயதான பெற்றோரை அடிக்கடி போய்ப் பார்த்துவர முடியவில்லை என்ற வருத்தம் பலருக்கு இருக்கும். வேண்டுமென்றே புறக்கணிக்கிறவர்களும் இருக்கிறார்கள். சீனாவில் 60 வயதுக்கு மேற்பட்ட பெற்றோர்கள் வேறு இடங்களில் தனியாக இருக்கும் நிலையில் அவர்களை, உரிய காரணமின்றி அடிக்கடி சென்று பார்க்கவில்லை என்றால் அபராதம் விதிக்கப்படும். இதற்காக 2013இல் ‘வயதானோர் உரிமைகள் மற்றும் நலன்கள் பாதுகாப்பு சட்டம்’ கொண்டுவரப்பட்டது.


 இந்தியாவின் முதல் பெண் நிலத்தடி சுரங்க மேலாளர்

இந்துஸ்தான் சின்க் நிறுவனம், இந்தியாவிலேயே முதல்முறையாக பெண் நிலத்தடி சுரங்க மேலாளராக சந்தியா ரசகல்£வையும், நிலத்தடி சுரங்க மேம்பாட்டு மேலாளராக யோகேஸ்வரி ரானேவையும் நியமித்துள்ளது. சுரங்க சட்டம் 1952இன்படி  2019இல் செய்யப்பட்ட திருத்தங்களில், பெண்கள் முறையான சான்றிதழ்களைப் பெறும் பட்சத்தில் எந்தவிதமான சுரங்கத்திலும் (நிலத்திற்கு மேல், நிலத்திற்குக் கீழ்) பணியாற்றலாம் என்றது. இச்சட்டத்தின்படி சந்தியாவும், யோகேஸ்வரியும் முறையான பயிற்சிக்குப் பின் நியமிக்கப்பட்டுள்ளனர்.


 

 தமிழ்நாட்டின் பொருளாதாரம் எவ்வளவு பெரியது?

உலகப் புகழ்பெற்ற பொருளாதார வல்லுநர்களைக் கொண்டு ஆலோசனைக் குழு அமைக்கிறதே தமிழ்நாடு அரசு, அதற்கான தேவை இருக்கிறதா என்ற கேள்வி எழலாம்.

ஒருவகையில் அதற்கான பதில் என்பது, தமிழ்நாட்டின் பொருளாதாரம் என்பது எவ்வளவு பெரியது என்பதை ஒப்பிட்டு அறிவதுதான். அதற்கான குறியீடு மொத்த உள்நாட்டு உற்பத்தியின் மதிப்பு (Gross Domestic Product).

தமிழ்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியையும் வேறு சில நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தியையும் ஒப்பிட்டுப் பார்த்தால் இது புரியலாம்.

இங்குள்ள தொகைகள் அனைத்தும் அமெரிக்க டாலர் மதிப்பைக் குறிப்பவை.


 

 சூரியக் குளியல்

ரயிலில், பேருந்தில் இருக்கைகள் மீது முன்கூட்டியே கைக்குட்டை, துண்டு என்று போட்டுவைத்து இடம் பிடிக்கிற,

முண்டியடித்து உள்ளே வருகிற பயணிகள் உட்கார முடியாமல் போகிற காட்சிகள் இங்கே சர்வ சாதாரணம். மேலைநாடுகளில், கடற்கரைகளில் உடல் ஆரோக்கியத்திற்காகக் கடற்கரையில் சூரியக் குளியல் எடுப்பவர்கள்

இதே போல் செய்வதுண்டு. இத்தாலி நாட்டு சட்டப்படி, கடற்கரையில் இடம் பிடிப்பதற்காக ஏதாவது பொருளை முன்கூட்டியே போட்டு ‘இடத்தை ரிசர்வ்’ செய்துவைத்தால் 240 டாலர் அபராதம் தீட்டப்படும்.


 

 ராணுவ சிப்பாய்களாக பெண்கள்!

இந்திய ராணுவத்தில் முதன்முதலாகப் பெண் சிப்பாய்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். ஓராண்டு கடின பயிற்சிகளுக்குப் பிறகு, இந்த முதல் தொகுதி பெண் ராணுவ வீரர்கள் 83 பேர் பெங்களூரில் உள்ள துரோணாச்சார்யா மைதானத்தில் அணிவகுப்பு நடத்தினர்.

கோவிட் தொற்று காரணமாக எளிமையாக நடைபெற்ற இந்த அணிவகுப்பைப் பார்வையிட்ட சி.எம்.பி மய்யம் மற்றும் பள்ளியின் கமாண்டென்ட், 61 வார பயிற்சியை வெற்றிகரமாக முடித்துப் பணியாற்ற இருக்கும் பெண்களின் பணி சிறக்க வாழ்த்து தெரிவித்தார். முதல் கட்டமாக 83 பெண் ராணுவ சிப்பாய்க¬ளை பணியில் சேர்த்துள்ள இந்திய ராணுவம்,

இன்னும் 1,700 பெண் ராணுவ சிப்பாய்களை பணியில் சேர்க்கத் திட்டமிட்டுள்ளது. தற்போது வரை பெண்கள் ராணுவத்தில் மருத்துவம், சட்டம், கல்வி, பொறியியல் போன்ற துறைகளில் மட்டுமே சேர்க்கப்பட்டு வந்த நிலையில், முதன்முதலாக கள வேலைகளில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *