பகுத்தறிவுச் சரவெடி

நவம்பர் 01-15

ஒருவர்: திருவனந்தபுரத்தில் ஆறாவது ரகசிய கதவைத் திறந்தால் மக்களுக்கு ஆபத்து வருமாம். உண்மையா?

மற்றொருவர்: அது திறக்கா விட்டால் அந்தத் தங்க நகைகளுக்கு ஆபத்து வருமே!
ஒருவர்: ????

– அ.தமிழ்க்குமரன், ஈரோடு


 

அவர்: என்ன ஒருத்தரைப் போலிசு பிடிச்சிட்டுப்போவுது?

இவர்: அவரு இராமபக்தராம்; மனைவிமேல ஏற்பட்ட சந்தேகத்தில பொண்டாட்டிய தீக்குளிக்க வச்சாராம்; அந்தம்மா செத்துப் போச்சு.

– த.தயாளன், மாங்குடி

 

நீதிபதி: ஒருவரைச் சாகடிப்பது சட்டப்படி குற்றம்!

குற்றவாளி: இல்லை யுவர் ஆனர், பகவத் கீதையிலே பரமாத்மா, ஒருவரைக் கொல்லும்போது, அவர் உடல்தான் சாகிறது; ஆத்மா சாவதில்லை என்று சொல்லியிருக்கிறாரே! ஆகவே என்னை விடுதலை செய்யணும்.

நீதிபதி: ?… ?… ?…

– த.தயாளன், மாங்குடி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *