வழிகாட்டும் பெரியார் தொண்டர்கள்

96 விடுதலை சந்தாக்கள் தமிழகத்தில் பல முன்னுதாரணங்களைப் பெரியார் பெருந் தொண்டர்களே படைத்திருக்கிறார்கள். அந்த வரிசையில் இரண்டுபேர் பற்றிய செய்தி இது. ஒருவர் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த எஸ்.எஸ்.மணியம். இன்னொருவர் மதுரை தமிழக எண்ணைப் பலகாரம் அங்காடி நிறுவனர் பே.தேவசகாயம் அவர்களின் துணைவியார் அன்னத்தாயம்மாள் அவர்கள். அய்யா எஸ்.எஸ்.மணியம் அவர்கள் கடந்த அக்டோபர் மாதம் 11 ஆம் நாள் 96 ஆவது பிறந்த நாளைக் கொண்டாடினார். எப்படித் தெரியுமா? நம்முடைய பகுத்தறிவு நாளேடான விடுதலைக்கு ஆண்டு சந்தாக்களை […]

மேலும்....

சிந்தனைத் துளிகள் – கலைவாணர்

மக்களுடைய அன்றாட வாழ்க்கையில், நடத்தையில் அவர்களிடம் நிலவுகிற மூடப்பழக்க வழக்கங்களும், மடைமை எண்ணத்தை அடிப்படையாகக் கொண்ட செய்கைகளும் அறவே நீக்கப்பட்டு புதிய அறிவுக்குப் பொருத்தமான செய்கைகள் இடம் பெறுவதுதான் சீர்திருத்தமாகும். பகுத்தறிவுக்குக் கொஞ்சமும் பொருந்தாத கண்மூடிப் பழக்கங்கள் எப்படியோ நம் சமூகத்தில் புகுந்து, நாட்டையும் நாட்டு மக்களையும் பாழ்படுத்துகின்றன. இத்தகைய பழக்கங்கள் சமூக முன்னேற்றத்திற்குத் தடையாக உள்ளன. எனவே, அவை நீக்கப்பட வேண்டும். தொழிலின் தேர்ச்சியும் முதிர்ச்சியும் பொருளைக் கொண்டுவந்து குவிக்க வேண்டும் என்று கருதும் தருவாயில் […]

மேலும்....

வலைவீச்சு : முகநூல் பேசுகிறது

புகழ்பெற்ற பிரிட்டிஷ் நடிகையும், மனிதநேயவாதியுமான ஆட்ரீ ஹெப்பர்னிடம் ‘அழகுக் குறிப்புகள்’ கேட்டபோது,  ‘அழகு’ என்பதைப் பற்றி எழுதிய கவிதை. இதே கவிதை, அவரின் இறுதிச் சடங்கின்போதும் வாசிக்கப்பட்டது. கவர்ச்சிகரமான இதழ்களுக்கு, கனிவான சொற்களைப் பேசுங்கள், விருப்பம்தரும் கண்களுக்கு, மனிதர்களில் உள்ள நல்லவைகளைக் காணுங்கள், மெலிந்த உடல்வாகிற்கு, உணவைப் பிற மக்களின் பசிக்கெனப் பகிருங்கள், அழகான கூந்தலுக்கு, தினமும் ஒரு குழந்தையை உங்கள் கூந்தலைக் கலைத்து விளையாட அனுமதியுங்கள், ஒயிலான நடைக்கு, ஒருபோதும் தனியே நடக்கலாகாது என்ற அறிவோடு […]

மேலும்....

அயல்மொழிக் கவிதை

எங்கும் எந்த அடையாளமும் என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை கொலையாளியின் கரத்திலோ சட்டைக் கையிலோ எங்குமே சிந்திய குருதியின் அடையாளம் என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை செவ்விதழ் கொண்ட குத்தீட்டிகளையோ சிவப்பு நுனி வாட்களையோ கண்டுபிடிக்க இயலவில்லை தூசியில் பொழிவுகளோ சுவர்களில் கறைகளோ இல்லை, எங்குமே, எங்குமே இரத்தம் தன் இருளினைத் திரை விலக்கவில்லை. பெருமிதத்தில் பிளவாகவோ சடங்கில் பலியாகவோ அல்ல, அது போர்க்களத்தில் சிந்திடவில்லை. ஒரு தியாகியின் விளம்பரப் பட்டிகையை அது உயர்த்தவில்லை. அந்த அனாதை இரத்தம் பெருங்குரலில் […]

மேலும்....

கார்ப்பொரேட்களுக்கு எதிராக அமெரிக்கர்கள்

பொருளாதாரச் சரிவில் இருக்கும் அமெரிக்காவில் கார்பொரேட்களுக்கு எதிரான மக்களின் போராட்டம் தொடங்கி விட்டது. அமெரிக்காவில் வணிகத்தையும் பொருளாதாரத்தையும் நிர்ணயிக்கும் முக்கிய இடமான நியூயார்க்கில் உள்ள வால் ஸ்ட்ரீட் பகுதியில் தினந்தோறும் போராட்டங்க்ள் நடந்து வருகின்றன. தொடர்ந்து 3 மாதம் போராட்ட அனுமதி வாங்கியுள்ளதாகச் சொல்லும் போராட்டக்காரர்கள் அங்கேயே தமது இருப்பிடத்தை அமைத்துக் கொண்டுவிட்டார்கள். ‘எங்களுக்குச் சமத்துவம் வேண்டும் அமெரிக்காவில் உள்ள் எல்லா வளங்களையும் பணத்தையும் வசதியையும் ஒரு சதவீத பணக்காரர்களே அனுபவிக்கிறார்கள். 99 சதவீதம் அப்பாவி அமேரிக்க […]

மேலும்....