பெரியாரை அறிவோமா?

செப்டம்பர் 01-15

1.   பெரியார் அவர்கள் காசிக்குச் சென்று துறவு பூண்டபோது அவரின் வயது?

அ) 24 ஆ) 26 இ) 25 ஈ) 23

2.  மேற்கோள் என்ற சாய்காலில் நிற்காமல் சொந்தமாகக் கருத்துகளைக் கூறுபவர் பெரியார் ஒருவர் மட்டுமே என்று கூறியவர் யார்?

அ) ராஜகோபாலாச்சாரியார் ஆ) நீலகண்ட சாஸ்திரி இ) நீதியரசர் ஏ.ஏஸ்.பி. அய்யர் ஈ) ஏ.எஸ்.கே.

3. காந்தியாரின் ஒத்துழையாமை இயக்கத்தின் நீதிமன்றப் புறக்கணிப்புக் கொள்கையின்படி தந்தை பெரியார் துறந்த தொகை எவ்வளவு?
அ) 12,000 ஆ) 16,000 இ) 19,000 ஈ) 50,000

4.    வைக்கம் போராட்டம் என்பது…….

அ) கோயில் நுழைவுப் போராட்டம் ஆ) கோயிலைச் சுற்றி இருந்த தெருக்களிலே தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்டவர்களுக்கு நடக்க உரிமை வேண்டிப் போராட்டம். இ) தேச விடுதலைப் போராட்டம் ஈ) உப்புச் சத்தியாகிரகம்.

5. சமூக சீர்திருத்தத் துறையில் இடைவிடாத சேவை செய்துவரும் நண்பர் நாயக்கர் அவர்கள் தென் இந்தியாவிலேயே ஓர் இளைஞராவார் என்று 50 வயதுப் பெரியாரை 1928இல் பாராட்டியது யார்?

அ) திரு. வி.க. ஆ) சர்.ஏ. இராமசாமி இ) ரெவரெண்டு பிட்மென் ஈ)எம்.ஆர். ஜெயகர்.

6. வெள்ளிப்பூண் பூட்டிய பழைய அடிமை விலங்கு மாற்றப்பட்டு, தங்கப்பூண் பூட்டிய புதுவிலங்கு பூட்டப்பட்டது. இந்த வாசகத்தை எதைக் குறித்துப் பெரியார் பயன்படுத்தினார்?

அ) பெரியார் காங்கிரசில் இருந்தபோது, 1920இல் வெற்றி பெற்ற நீதிக்கட்சி, ஆங்கிலேயர் ஏற்படுத்திய 1919ஆம் ஆண்டுச் சட்டத்தின் கீழ் ஆட்சியை ஏற்றதைக் குறித்து ஆ) 1947இல் வெள்ளையர் ஆட்சி முடிந்து, பார்ப்பன பனியா ஆட்சி ஏற்படும் என்பதைக் குறிக்க. இ) 1950இல் இந்தியக் குடியரசு அரசியல் சட்டம் வந்தபொழுது ஈ) இவை எவற்றையும் குறிக்கவில்லை.

7. ஒரு மொழியின் சிறப்பையும் அதைப் பேசும் மக்களின் நாகரிகத்தையும் அறிவையும் எதைக்கொண்டு அறிந்து கொள்வது என்கிறார், பெரியார்?

அ) அந்த மொழியில் உள்ள தொன்மை நூல்களைக் கொண்டு ஆ) பெரும்பாலும் அந்த மொழியின் மூலம் அறியக்கிடக்கும் கருத்துகளைக் கொண்டு இ) அந்த மொழியின் எளிமையைக் கொண்டு ஈ) அந்த மொழியின் பாடல்களின் இனிமையைக் கொண்டு.

8. ஒரு நாட்டில் ஒரு குறிப்பிட்ட இரண்டு பிரிவுகள் இருக்கும் வரை, மேல் கீழ் நிலை இருந்துதான் தீரும் எனப் பெரியார் கூறுகிறார். அவை என்ன?

அ) முதலாளி -_ தொழிலாளி ஆ) பாடுபட்டு உண்கிறவன் _ பாடுபடாமல் உண்கிறவன் -இ) ஏழை _ பணக்காரன் ஈ) நிலப்பிரபு _ பண்ணையாள்.

9. இல்வாழ்வில் ஆணுக்குப் பெண் துணை; பெண்ணுக்கு ஆண் துணை எனக்கூறும் பெரியார், துணை என்பதற்கு என்ன விளக்கம் அளிக்கிறார்?

அ) நட்பு ஆ) உதவி இ) சமபங்கு ஈ) மேலே சொன்ன மூன்றும்

10. பெரியாரின் பிரச்சாரத்தின், மூலப்பொருள், வழிமுறை என்ன?

அ) பகுத்தறிவு ஆ) இனப்பற்று இ) நாட்டுப்பற்று ஈ)மத எதிர்ப்பு

 

விடைகள் :

1. இ

2. இ

3. ஈ

4. ஆ

5. இ

6. ஆ

7. ஆ

8. ஆ

9. ஈ

10. அ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *