குரல்

ஆகஸ்ட் 01-15

அணு ஆயுதங்கள் ஒழிக்கப் பட வேண்டுமென்பது உலக மக்களின் விருப்பம். ஆனால் அணு ஆயுதங்களை வைத்தி ருக்கும் எந்த நாடும் இதற்குத் தயாராக இருப்பதாகத் தெரிய வில்லை. இந்த நாடுகள் பல ஆயிரம் கோடி ரூபாய்களை இந்த ஆயுதங்களை நவீனப்படுத்துவதில் செலவழித்து அய்.நா. அவையின் ஆயுத ஒழிப்பு லட்சியத்தையே கேலிக்கூத்தாக்குகின்றன. இந்த பைத்தியக்காரத் தனம் தொடர்ந்தால் இந்த ஆயுதங்கள் எதிர்காலத்தில் பயன்படுத்தப்படுவது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிடும்.

அணு ஆயுதங்களுக்காக செலவிழக்கப்படும் ஒவ்வொரு டாலரும் பள்ளிகள், மருத்துவமனை கள் மற்றும் பல்வேறு சமூக சேவைகளுக்கு செலவழிக்கப்பட வேண்டியது. அணு ஆயுதங்க ளுக்காக செலவழிக்கப்படும் நிதி மனிதர்களின் அடிப்படைத் தேவைகளை நிவர்த்தி செய்வதற்காக செலவழிக்கப்பட வேண்டும்.

டெஸ்மாண்ட் டுடூ,புகழ்பெற்ற சமூக ஆர்வலர் தென்னாப்பிரிக்கா.

பாவேந்தர் பாரதிதாசனையும் விட்டு வைக்கவில்லை இந்த அரசு. அவருடைய ஆத்திசூடியையும் மறைத்தாயிற்று. அவர் திராவிட இயக்க முன்னோடிக் கவிஞர். அ.தி.மு.க. என்கிற ஆளும் கட்சியின் பெயரில் திராவிட என்கிற சொல் இருக்கிறது. ஆனால், கட்சியின் பெயர் அளவில் மட்டுமே திராவிடம் இருக்கிறது. புரட்சிக் கவிஞருக்கே இந்தக் கதியா?

ச. தமிழ்ச்செல்வன்,த.மு.எ.க.ச. மாநில பொதுச் செயலாளர்.

பத்திரிகையாளர் சோ, சமச்சீர் கல்வித் திட்டத்தை மாட்டு வண்டியுடன் ஒப்பிட்டு எழுதி இருக்கிறார். அனைத்துத் துறை வல்லுநர்கள் இணைந்து உருவாக்கியதுதான் சமச்சீர் கல்வி. மெட்ரிகுலேஷன் தேர்வுகளில் சாய்ஸ் நிறைய உண்டு. அதனால் அதைக் கற்பிக்கும் ஆசிரியர்களும், குறிப்பிட்ட பகுதியை மட்டும் படி என்று மாணவர்களுக்கு அறிவுறுத்துகிறார்கள். அதை மட்டுமே படித்து தேர்வு எழுதுகிறான் மாணவன். ஆனால் சமச்சீர் கல்வியில் சாய்ஸ் கிடையாது. முழுப் புத்தகத்தையும் படித்து மெத்த அறிவு பெறுகிறான் மாணவன். இப்போது சொல்லுங்கள், மெட்ரிகுலேஷன் பாடத் திட்டம், மாட்டு வண்டியா? சமச்சீர் கல்வி பாடத் திட்டம், மாட்டு வண்டியா?

வசந்தி தேவி, கல்வியாளர்

பாகிஸ்தானில் தீவிரவாத செயல்களைக் கட்டுப்படுத்த கடுமையான சட்டங்கள் நடைமுறைப்படுத்த வேண்டும். பாகிஸ்தா னுக்குப் பிறகு சுதந்திரம் அடைந்த நாடுகள்கூட வளர்ச்சியில் பாகிஸ்தானை முந்திச் சென்றுவிட்டன.

பாகிஸ்தான்மீது படிந்துள்ள தீவிரவாதம் என்னும் கரும்புள்ளியை அகற்றாவிட்டால் வெளிநாட்டு முதலீட்டை ஈர்க்க முடியாது. வெளிநாட்டு முதலீட்டை ஈர்க்காமல் பாகிஸ் தான் வளர்ச்சியடைய வாய்ப்பில்லை.

ஷாபஸ் ஷரிப், முதல்அமைச்சர், பஞ்சாப், பாகிஸ்தான்

முப்பது ஆண்டுகளுக்கு முன் தொடங்கப் பட்ட அணு உலைகள் படிப்படியாக மூடப்பட வேண்டும். புதிய அணு உலைகள் அவசர கோலத்தில் தொடங்கப்படுவதைக் கைவிட வேண்டும். சூரிய சக்தி, காற்றாலை, கடல் அலை ஆற்றல் உள்ளிட்ட புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வாயில்களுக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

அனைத்திந்திய முற்போக்குப் பேரவை மற்றும் டாக்டர்கள் சங்கத் தீர்மானம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *