செய்தியும் – சிந்தனையும்

பெயர் என்ன செய்யும்? தமிழில் பெயர் வையுங்கள்; பகுத்தறிவாளர் களின் பெயர் வையுங்கள்; அறிவியலாளர்களின் பெயர் வையுங்கள் என்று பல ஆண்டுகளாக பெரியார் தொண்டர்கள் சொல்லி வருகிறார்கள், பெயர்வைத்தும் வருகிறார்கள். இப்படி வைப்பதால் நம்மீது சுமத்தப்பட்ட இந்து மதத்தின் இழிவான பொருளுடைய பெயர்கள் முதலில் நீக்கப்படுகிறது. அசிங்கமான, ஆபாசமான, பெயர்களில் இருந்து விடுபடு கிறோம். ஜாதி அடையாளம் காணாமல் போகிறது. தன்மான உணர்வு பிறக்கிறது. இந்த லாபங்களுடன் இப்போது இன்னொரு லாபமும் சேர்ந்துள்ளது. இயக்கம், கட்சி சாராத […]

மேலும்....

தமிழ்நாட்டின் மக்கள் தொகை

பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள் தொகைக் கணக்கெடுப்பு எடுக்கப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டு (2011)- எடுக்கப்பட்ட கணக்கெடுப்பு விவரங்கள் ஜூலை 19 அன்று வெளியிடப்பட்டுள்ளன. இதன்படி இந்தியாவின் மக்கள் தொகை 121 கோடியே 1 இலட்சத்து 93 ஆயிரத்து 422. இதில் பெண்கள் 62 கோடியே 37 இலட்சம், ஆண்கள் 58 கோடியே 65 இலட்சம். பாலின விகிதாச்சாரம் 1,000 ஆண்களுக்கு 940 பெண்கள் என்ற விகிதத்தில் உள்ளது. தமிழகத்தின் மொத்த மக்கள் தொகை 7 […]

மேலும்....

ஏடாகூடம் ஏதுசாமி

– படமும், கருத்தும் : கர்ணா பத்மநாபசுவாமி கோயிலில் தங்க வைரக் குவியல்! – செய்தி பார்த்தீங்களா நாயர்… ந்கைகளெல்லாம் அரசர்களும், பக்தர்களும் காணிக்கையா கொடுத்ததாம்… நூறு சதவீதம் படிப்பறிவு உள்ள உங்க கேரளாவிலேயே, ஜீரோ சதவீதம் அறிவு பெற்ற பக்தர்களும் வாழ்ந்திருக்காங்க…! பத்மநாப கோவிலில் தங்கப் புதையல் இருப்பதைத் தெரியப்படுத்திய 70 வயது முதியவர் மரணம்! – செய்தி முதியவர்கள் மரணமடைவது இயற்கைதானே? பத்மநாபரின் நகைகளைக் காட்டிக் கொடுத்தால்தான் செத்தார்ன்னு சர்ச்சையைக் கிளப்புறீங்களே…. ஏன். பெரியவர் […]

மேலும்....

நமக்கு வந்த செல் குறுஞ்செய்திகள்

தி.மு.க. ஆட்சியில் துவங்கப்பட்ட மின் திட்டங்கள்: 1)    1,200 மெகாவாட் மின் விரிவாக்கத் திட்டம், வடசென்னை. 2)    1,500 மெகாவாட் வல்லூர் அனல்மின் நிலையம். 3)    1,600 மெகாவாட் உடன்குடி அனல்மின் நிலையம். 4)    1,000 மெகாவாட் தூத்துக்குடி அனல்மின் நிலையம். 5)    1,000 மெகாவாட் கூடன்குளம் அணுமின் நிலையம். வரும் 7 ஆண்டுகளுக்கு தமிழகத்தின் மின் தேவையைப் பூர்த்தி செய்யப்போகும் திட்டங்கள் இவைதான். தி.மு.க. கட்டிய தலைமைச் செயலகம், தி.மு.க. கொண்டுவந்த சமச்சீர் கல்வித் திட்டம் […]

மேலும்....

செய்திக்கூடை

கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு குறித்த ஆய்வு அறிக்கையை பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவர் நீதிபதி எம்.எஸ்.ஜனார்த்தனம் மற்றும் உறுப்பினர்கள் முதல் அமைச்சர் ஜெயலலிதாவிடம் கொடுத்துள்ளனர். இதனை அடுத்து வளமான பிரிவினரை நீக்காமல் இப்போது உள்ளதுபோலவே தமிழகத்தில் 69 சதவிகித இடஒதுக்கீடு தொடரும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. வாகனங்கள் தகவல்களைப் பரிமாறிக் கொள்ளும் வகையில் புதிய மென்பொருளை இத்தாலி போலோனா பல்கலைக்கழகக் குழுவினர் உருவாக்கியுள்ளனர். விண்ணில் செலுத்தப்பட்டுள்ள ஜிசாட்-_12 தகவல் தொடர்பு செயற்கைக் கோளின் செயல்பாடுகளைக் கண்காணிக்கும் […]

மேலும்....