செய்திக்

ஜூலை 16-31
  • பிரிட்டனில் வசிக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அஞ்சலி ஜோசப் (33) என்ற பெண் எழுதிய நாவலுக்கு உலகின் கவுரவமான பெட்டி பிராஸ்க், டெஸ்மாண்ட் எலியட் விருதுகள் கிடைத்துள்ளன.
  • அமெரிக்காவின் மனிதக் கடத்தல் கண்காணிப்புப் பட்டியலிலிருந்து 6 ஆண்டுகளுக்குப் பின் இந்தியா நீக்கப்பட்டுள்ளது.
  • வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் கூறப்படும் உச்ச நீதிமன்ற மேனாள் தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன் மீது விசாரணை நடத்த உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
  • கிரேக்க நாடாளுமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் அந்நாட்டுப் பிரதமர் ஜார்ஜ் பாபென்ரோ வெற்றி பெற்றுள்ளார்.
  • தமிழ்நாட்டில் அங்கீகாரத்துடன் இயங்கும் ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளின் பட்டியல் ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சித்துறை இணையதளத்தில் (www.dtert.tn.nic.in) வெளியிடப்பட்டுள்ளது.
  • உலகிலேயே மிக நீளமான (42. கி.மீ) கடல் பாலம் சீனாவில் திறக்கப்பட்டுள்ளது.
  • தாய்லாந்து நாட்டில் நடைபெற்ற 26ஆவது நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் நாடு கடத்தப்பட்ட முன்னாள் பிரதமரின் கட்சி வெற்றி பெற்றுள்ளது. தாய்லாந்து நாட்டின் முதல் பெண் பிரதமராக இங்லக் ஷினவத்ரா(44) தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
  • லஞ்ச ஒழிப்பு தலைமைக் கண்காணிப்பு ஆணையராக இருந்த பி. ஜே. தாமஸ் நியமனத்தை உச்ச நீதிமன்றம் ரத்து செய்ததையடுத்து, புதிய ஆணையராக ராணுவத் துறைச் செயலாளர் பிரதீப் குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
  • பொறியியல் கல்லூரிகளில் சேருவதற்கான பொதுச் சாளர முறை (கவுன்சிலிங்) ஞாயிற்றுக்கிழமைகளிலும் நடைபெறும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
  • கருப்புப் பணப் பிரச்சினையில் விசாரணை நடத்த ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி பி.பி.ஜீவன் ரெட்டி தலைமையில் 13 பேர் கொண்ட சிறப்பு விசாரணைக் குழுவை உச்ச நீதிமன்றம் அமைத்துள்ளது.
  • துனிஷியா நாட்டை 23 ஆண்டுகளுக்கு மேல் தனது கட்டுப்பாட்டில் வைத்து நாட்டையே கொள்ளையடித்த குற்றத்திற்கு அந்நாட்டின் மேனாள் அதிபர் ஜைன் அல் அபைதின் பென் அலி மற்றும் அவரது மனைவி லெய்லாவுக்கு 35 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
  • உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு சர்க்கரை, புற்று நோயைத் தடுக்கும் ஆற்றல் ஸ்ட்ராபெரி பழங்களில் இருப்பதாக அமெரிக்க சால்க் இன்ஸ்டிடியூட்டின் செல்லுலர் நியூராலஜி ஆய்வகம் (சி. எப். எல்.) தெரிவித்துள்ளது.
  • அண்ணாமலைப் பல்கலைக் கழகமும், 361 டிகிரி மய்யமும் சேர்ந்து இணையதளம் மூலமாகப் படிக்கும் எம்.பி.ஏ. படிப்பை அறிமுகப்படுத்தியுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *