குரல்

பெரியாரின் ஒளியால் கண் திறந்தவன், பெரியாரின் ஒளியால் பிழைப்பு நடத்துகிறவன், அதைப் பரப்பும் பணியில் உள்ளவன் நான். நாம் இங்கு ஒன்று கூடியிருக்கிறோமே, தமிழ் மொழிக்காரர்களாக, ஒரே தமிழ் இனமாக…. இந்த உணர்வை பெரியார்தான் உண்டாக்கினார். சட்டப்படியான உரிமைகளை நமக்குப் பெற்றுத் தந்தவர் அம்பேத்கர் என்றால்… தமிழகத்தில் பெரியார் இல்லை என்றால் தமிழன், மனிதனாகி இருக்க முடியாது. அம்பேத்கர் முதல் முறையாகத் தமிழகத்துக்கு வந்தபோது, அவரை எதிர்த்துப் பல இடங்களில், கடும் எதிர்ப்புகள் இருந்தன. அதைக் கேள்விப்பட்ட […]

மேலும்....

பதிவுகள்

முல்லைப் பெரியாற்றில் திட்டமிட்டபடி புதிய அணையைக் கட்டும் பணியை கேரள அரசு மேற்கொள்ளும் என்று அம்மாநில நீர்வளத்துறை அமைச்சர் பி. ஜே. ஜோசப் ஜூன் 21 அன்று தெரிவித்துள்ளார். ஏழைகள் குறைந்த செலவில் கோதுமை, நெல், தினை போன்ற உணவு தானியங்களை வாங்க வகை செய்யும் உணவுப் பாதுகாப்பு சட்ட மசோதா ஜூன் 22 அன்று நடைபெற்ற தேசிய ஆலோசனைக் கூட்டத்தில் பரிசீலிக்கப்பட்டு மத்திய அரசின் அனுமதிக்கு அனுப்பப்பட்டுள்ளது. லிபிய அதிபர் கடாபியைக் கைது செய்ய சர்வதேச […]

மேலும்....

ராசா வீடா? நவின கோயபல்ஸ்களின் புளுகு அம்பலம்

அய்யய்யோ… பாருங்கள்! இது தமிழ்நாட்டில் கட்டப்பட்டிருக்கும் ஆ.ராசாவின் வீடு… எவ்வளவு மோசமானவர்கள் பாருங்கள்! என்ற தொனியில் மின்னஞ்சல் ஒன்று அனைவர் முகவரிக்கும் ஓலமிட்டு வருகிறது. நீங்களும் கூட அதனைப் பார்த்திருக்கக் கூடும். இந்தப் படங்களைப் பார்த்ததும் ஆ… அடேயப்பா… எவ்வளவு பெரிய சொகுசு பங்களா…? இது ஆ.ராசாவினுடையதா…? ஊடகங்கள் சொன்னதெல்லாம் உண்மையாக இருக்குமோ என்று ஒரு கணம் எண்ணத் தோன்றுகிறதா? இப்படி அளந்துவிட்டிருக்கும் இந்த மின்னஞ்சல் உண்மையானதா? என்பதை யெல்லாம் கொஞ்சமும் சிந்தித்துப் பார்க்காமல், நம் பங்குக்கு […]

மேலும்....

செய்தியும் பார்வையும்

விடாக்கண்டர்கள் ஆந்திர மாநிலத்தைப் பிரித்து தனித் தெலுங்கானா அமைக்க வேண்டும் என்ற போராட்டத்தை சில ஆண்டுகளாக அப்பகுதி இயக்கங்கள் நடத்திவருகின்றன. இக்கோரிக் கையை வலியுறுத்தி தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி என்ற தனிக்கட்சியே உருவானது.முதலில் மத்திய அமைச்சரவையில் சேர்ந்தும் பின்னர் கோரிக்கைக்குப் பலன் கிடைக்காமல் விலகியும் இப்போதும் தொடர்ந்து போராடிக்கொண் டுள்ளது. இதன் தாக்கம் எல்லாக் கட்சிகளிலும் எதிரொலிக்க அகண்ட பாரதக் கனவை நீண்ட நாட்களாகக் கண்டுவரும் பாரதீய ஜனதா கூட தெலுங்கானாவை ஆதரிக்க வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டது. […]

மேலும்....

நெசந்தானுங்க…

எத்தனைக் காலம்தான்… முன்னாள் முதல்வரும் மக்கள் நடிகருமான எம்.ஜி.ஆரை சாமி என்றே அழைத்துக்கொண்டு அவருக்கு ஒரு கோயிலையும் கட்டியிருக்கிறாராம் திருநின்றவூர் நத்தம் மேடு கிராமத்தைச் சேர்ந்த கலைவாணன் என்பவர்! பூர்வீக வீடு, மனைவி நகைகளை எல்லாம் விற்று 15 லட்சத்தில் எம்.ஜி.ஆர். கோயில் கட்டியிருக்கும் கலைவாணனிடம், உங்களுக்கு என்று ஒரு சொந்த வீடு கட்டவில்லையா? என்றால், அதற்கும் என் சாமி (எம். ஜி. ஆர்) வழிகாட்டுவார் என்கிறாராம். (ஜூ. வி – 26.6.11) சரியாகத்தானே சொல்லியிருக்கிறார். 15 […]

மேலும்....