மேடிசன் மோடி… மோகன்’லால்’ காந்தி!

அக்டோபர் 16-31

பிரச்சாரத்திற்குப் போன காலத்திலெல்லாம் தப்புந்தவறுமாக வரலாற்றுச் செய்திகளைச் சொல்லிக் கொண்டுதிரிந்த மோடி, பத்தாண்டுகளாக நுழைய முடியாமலிருந்த அமெரிக்காவுக்குப் போவதற்காகவே பிரதமராகி, சகிக்க முடியாமல் அவர்களும் அனுமதித்துவிட்டார்கள். விசா மறுக்கப்பட்டுவந்த மோடிக்கு, அங்கே ரொம்ப காலமாக சம்மன் மட்டும் தயாராக இருந்தது வேறு கதை! நம் கதை… சாரி… மேடிசன் சதுக்கத்தில் பேசிய மோடியின் கதை என்னவென்றால், காந்திக்குப் புதுப்பெயர் வைத்தது தான். மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி என்று ஒன்னாப்பு படிக்கும் பிள்ளைக்குக் கூட சொல்லிக் கொடுக்கப்பட்டிருக்கும் நாட்டின் பிரதமரோ மோகன்லால் காந்தி என்றார். கமுக்கமாகச் சிரித்தார்கள் அமெரிக்கக் காவலர்கள்! (முன்குறிப்பு: மேடிசனில் மட்டுமல்ல… ராஜஸ்தானில் கடந்த ஆண்டு பேசும்போதும் காந்தியை அவர் மோகன் லால் என்று குறிப்பிட்டதை அப்போதே பத்திரிகைகள் எடுத்துக் காட்டின.) வாட் டு டூ? மோடி கேட்ச்சுடு ரேபிட் ஹாஸ் திரி லெக்ஸ்பா! அட, புரியலையா… அவர் புடிச்சா முயலுக்கு மூணு காலுதான். சப்போஸ், நாலு காலுன்னு முயல் சொன்னா, ஒரு காலை உடைச்சுட்டு இப்போ மூணு தானே என்பார். சோ, மூணு என்று ஒப்புக்கொள்ளுதல்தானே முயலுக்கு நல்லது. அதுமாதிரி காந்தியே வந்து பெயரை மாற்றினாலும் மாற்றிக் கொள்ளக்கூடும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *