பதிவுகள்

ஏப்ரல் 16-30
  • சங்கரராமன் கொலை வழக்கு விசாரணைக்குத் தடை விதிக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் மறுப்புத் தெரிவித்து மார்ச் 23 இல் ஆணையிட்டுள்ளது.
  • தமிழக காவல் துறையில் சட்டம் ஒழுங்கு டிஜிபி லத்திகா சரண் விடுப்பில் சென்றதையடுத்து லஞ்ச ஒழிப்புப் பிரிவு டி.ஜி.பியாக இருந்த போலோநாத் காவல்துறைத் தலைவராக மார்ச் 24இல் பொறுப்பேற்றுள்ளார்.
  • பாலாற்றின் குறுக்கே ஆந்திரா தடுப்பணை கட்ட தமிழகம் எதிர்ப்புத் தெரிவித்து வருவது தொடர்பாக, இரு மாநில உயர் அதிகாரிகளையும் அழைத்து மத்திய நீர்வளத் துறைச் செயலாளர் பேச்சு நடத்த வேண்டும் என்று மார்ச் 28 இல் உச்ச நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.
  • சிரியா நாட்டு மக்களின் தொடர் போராட்டம் காரணமாக அந்நாட்டுப் பிரதமர் மகமது நாஜி ஓட்ரி மார்ச் 29 இல் ராஜினாமா செய்துள்ளார்.
  • மியான்மாவில் மார்ச் 30 இல் இராணுவ ஆட்சி முடிவுக்கு வந்ததையடுத்து, தெய்ன் செய்ன் புதிய அதிபராகக்கொண்ட 2 துணை அதிபர்கள் 58 அமைச்சர்கள் உள்ளிட்ட அமைச்சரவை அன்றே பொறுப்பேற்றுள்ளது.
  • ஜப்பானில் மார்ச் 31 இல் ரிக்டர் அளவுகோலில் 6.2 என்ற அளவில் மீண்டும் பூகம்பம் ஏற்பட்டுள்ளது.
  • தேர்தல் கமிசன் நடத்தும் வாகன சோதனைக்குத் தடைஇல்லை என சென்னை உயர்நீதிமன்றம் ஏப்ரல் 1 இல் ஆணையிட்டுள்ளது.
  • அசாம் சட்டசபைக்கு முதல்கட்டமாக 62 தொகுதிகளில் ஏப்ரல் 4 இல் தேர்தல் நடைபெற்றுள்ளது.
  • ரஷ்யாவின் சோயுஸ் விண்கலம் விண்வெளி வீரர்களுடன் பைகானூர் விண்வெளி நிலையத்திலிருந்து ஏப்ரல் 5 இல் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *