திராவிடத்தால் வளர்ந்தோம்

ஜனவரி 16-31 - 2014

திராவிடத்தால் வாழ்ந்து, திராவிடத்தால் கல்வி கற்று, இப்போது முழுப் பலனையும் அனுபவித்துக் கொண்டு, திராவிடக் கட்சியால் சீரழிந்தோம், திராவிட மாயையை அகற்ற வேண்டும் என ஏற்றிவிட்ட ஏணியை எட்டி உதைப்பது போல் உளறிக்கொண்டு இருக்கும் அரைவேக்காடுகளுக்கு ஒரு சிறிய எடுத்துக்காட்டு.

1911_வாக்கில் நடந்த வர்ணாசிரம (குலக்கல்வி) பள்ளிப் பாடம்:

1.    இவன் தச்சன்_மரவேலை செய்கிறான்
2.    இவன் குயவன்_மண்பாண்டம் செய்கிறான்
3.    இவன் கொல்லன்_இரும்புவேலை செய்கிறான்
4.    இவன் அம்பட்டன்_முகச்சவரம் செய்கிறான்
5.    இவன் வண்ணான்_துணி வெளுக்கிறான்
6.    இவன் வாணியன்_எண்ணெய் ஆட்டுகிறான்
7.    இவன் சேனியன்_துணி நெய்கிறான்
8.    இவன் பறையன்_தப்படிக்கிறான்
9.    இவன் சக்கிலியன் _ செருப்புத் தைக்கிறான்
10.    இவர் அய்யர்_வேதம் ஓதுகிறார்!

2010 முதல் தமிழகப் பள்ளிகளில் நடத்தப்படும் பாடங்கள் பின்வருமாறு:

1.    உழவர் _ பயிர்களை வளர்ப்பவர்
2.    ஆசிரியர் _ பாடம் கற்பிப்பவர்
3.    மீனவர் _ கடலில் மீன்பிடிப்பவர்
4.    வணிகர் _ பொருள்களை வாங்கி விற்பவர்.
5.    மருத்துவர் _ நோயிலிருந்து காப்பவர்
6.    தூய்மைப் பணியாளர் _ துப்புரவு செய்பவர்
7.    சலவைக்காரர்_துணிகளைச் சலவை செய்பவர்
8.    நெசவாளர் _ துணிகளை நெய்து தருபவர்
9.    காவலர் _ சட்டம் ஒழுங்கைக் காப்பவர்
10.    கட்டடக் கலைஞர் _ வீடு கட்டித் தருபவர்

ஆதாரம்: (வளரும் இளமை, 4ஆம் வகுப்பு 2ஆவது பாடம் _ பக்கம் 6)

இந்திய மக்கள் அறிவில்லாமல் இருப்பதற்குப் பார்ப்பனர்களே காரணம் என்று இந்தியத் தாய் புத்தகத்தில் மிஸ் மேயோ எழுதியதையும் நினைவில் கொள்ள வேண்டும். – பொன்.வெங்கடேசன், இராணிப்பேட்டை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *