”அய்யர் மலையில் ஆரியம்’

டிசம்பர் 16-31- 2013

பார்ப்பான்
இன்னமும் பல்லக்கில்
பாழும் தமிழனின்
தோள்களில் அய்யர் – மலை ஏற்றம்.?!

கோவிலுக்குள்
அழுக்குப் பிசுக்கின்
அலாதி நாற்றம்.
சமாளிக்க
சாம்பிராணியும்
ஊதுபத்தியும்
தெய்வீக மணம்.?!

ஓயாமல் உச்சரிக்கப்பட்ட
சமக்கிருத மந்திரங்களில்
ஓரிடத்தில் தவறு!
உச்சரித்தவர்களுக்கு  மட்டுமே
அது புரிகிறது;
அவர்களின் அசட்டுச் சிரிப்பில்
நமக்கும்!

ஒரு வார்த்தை கூட
புரியவில்லை
பூசையில் சமக்கிருதம்…
முடிந்ததும்,
உணவு வருகிறது…
பாழும் வயிற்றுக்குக்  கூட
புரிந்துவிடுகிறது.

பக்திப்பெருக்கில்
பக்தனுக்கு
கண்ணீர் வடிகிறது.
ஓமப் புகையின் உதவியோடு?

பால், தயிர், மோர்,
பேரிச்சம்பழம்,
எலுமிச்சைச் சாறு,
சந்தனம், திராட்சைச் சாறு
இன்னும் சில…

அண்டாக்களில்
நிறைந்து கிடக்கிறது
கருங்கல்லின்மீது சொரியப்பட!

ஈசன் கோவில் பூசையில்
சமக்கிருத மந்திரம்
இங்கு தமிழிலும்
அர்ச்சனை செய்யப்படும்
என்ற பலகையின் சாட்சியுடன்.

கோவிலின்  உள்பிரகாரத்தில்  ஆங்காங்கே  எடிசனின் அறிவு பளிச்சிடுகிறது.
ஆகம விதிகளிலும்
அறிவியலின் ஊடுருவல்!

– உடுமலை வடிவேல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *