புதிய கண்டுபிடிப்புகள்

ஏப்ரல் 16-30
  • ஊட்டச் சத்துக் குறைபாட்டைச் சரி செய்யும் பயோ போர்ட்டிபைடு எனப்படும் புதுமையான சாமை உணவுப் பயிர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
  • சிக்கலான அறுவைச் சிகிச்சைகளின் போது நுண்ணிய நரம்புகளைக் கண்டறியும் ஒளிரும் திரவத்தை அமெரிக்காவின் கலிபோர்னியா சான்டீகோ மருத்துவக் கல்லூரி ஆய்வாளர் குழுவினர் கண்டுபிடித்துள்ளனர்.
  • மண்ணிலும் மலையிலும் ஓடக்கூடிய புதிய நான்கு சக்கர வாகனத்தை சிறீசாய் ராம் பொறியியல் கல்லூரி மெக்கானிக்கல் துறை மாணவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
  • சூரிய ஒளியில் இயங்கும் குளிர்சாதனப் பெட்டியினை ட்ரூ எனர்ஜி நிறுவனத்தினர் வடிவமைத்துள்ளனர்.
  • மதுரை கேந்திரிய வித்யாலயாவில் பன்னிரெண்டாம் வகுப்புப் படிக்கும் மாணவி சத்யப்பிரியா மண்பானை ஏர்கூலரைக் கண்டுபிடித்து மாநிலஅளவிலும் தேசிய அளவிலும் பல பரிசுகளைப் பெற்றுள்ளார்.
  • தண்ணீரை எரிபொருளாகக் கொண்டு காரை இயக்கும் தொழில்நுட்பத்தை இலங்கையைச் சேர்ந்த துஷாரா எடிரிசிங்க கண்டுபிடித்துள்ளார்.
  • மலேரியாவைப் பரப்பும் அனோபிலிஸ் காம்பியா கொசுக்களை மட்டுமே இரையாக உண்ணக் கூடியது கிழக்கு ஆப்பிரிக்க தாவும் சிலந்தி வகையான இவர்சா குலிசிவோரா என்று நியூசிலாந்து நாட்டின் கேன்டர்பிரி பல்கலைக்கழகப் பேராசிரியை பியானா கிராஸ் தலைமையிலான குழுவினர் கண்டுபிடித் துள்ளனர்.
  • தோல் புற்று நோயைக் கண்டறியும் டைனி லேசர் என்ற கருவியினை அமெரிக்காவின் ட்யூக்ஸ் பல்கலைக்கழகத்தில் புற்றுநோய் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வரும் தாமஸ் மேத்யூ குழுவினர் கண்டுபிடித் துள்ளனர்.
  • உலோகத்திற்குப் பதிலாகப் பயன்படுத்தும் புதிய பிளாஸ்டிக் பொருளைக் கண்டுபிடித்த ஜப்பான் நிறுவனம் அதற்கு ரெனி (Reny) என்று பெயர் வைத்துள்ளது.
  • சுற்றுச்சூழலுக்குத் தீங்கு ஏற்படுத்தாமல் தண்ணீரில் இயங்கும் மின்கலத்தினை ஜப்பானிய அறிவியலறிஞர் சுசுமு சுசுகி கண்டுபிடித்துள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *