முகநூல் பேசுகிறது

செப்டம்பர் 16-30

கிபி 2045. ரத்தத்தை விடவும் எண்ணெய் மனித வாழ்க்கைக்கு அத்தியாவசியமான திரவமாகிவிட்டது. ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு இரண்டு லிட்டர் ரத்தம் என்ற வீதத்தில் பாலைவனத்தில் ரத்தம் சிந்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. மதம், கடவுளை அடையும் வழி என்பது மாறி, ஆயுத போராட்ட வழிமுறை என்றாகிவிட்டது. இந்துக்கள் சூலாயிதத்தாலும், இஸ்லாமியர்கள் துப்பாக்கிகளாலும், கிறித்தவர்கள் கத்திகளாலும் மனிதனை கடவுளுக்குப் படைத்து வழிபட்டுக் கொண்டிருக்கிறார்கள். பாகிஸ்தானும் இந்தியாவும் பறிமாறிக்கொண்ட அணுகுண்டுகளின் புண்ணியத்தில் இந்தியத் துணைக்கண்டத்தின் நடுவே ஆழமான அம்மைத்தழும்பு உருவாகியிருந்தது. இருநாடுகளும் வரைபடங்களில் மட்டுமே முழுமையாய் இருந்தன. இலங்கையில் தமிழர்களும், சிங்களர்களும் கட்டாய-சீனம் பயின்று கொண்டிருந்தார்கள். இந்தியாவில் 2030ன் பிற்பகுதியில் முதுமலை காட்டுக்குள் கடைசி தமிழன் தென்பட்டதாக விக்கிபீடியா சொன்னது. ஆப்ரிக்க காடு ஏதோ ஒன்றில், எஞ்சியிருந்த கடைசிக் குடும்பத்தைச் சேர்ந்த அந்த சிறுவன் அழுதுகொண்டிருந்தான். அவனுக்கு இன்று பிறந்தநாள். பிறந்தநாளின் போது நட்சத்திரங்களை பார்த்து வேண்டிக்கொள்வது அப்படியே நடக்கும் என அவன் அன்னை சொன்னதால் வானில் சிகப்பாய் தெரிந்த ஒரு நட்சத்திரத்தைப் பார்த்து தன்னை காப்பாற்றுமாறு வேண்டிக்கொண்டிருந்தான். சிகப்பு நட்சத்திரம் செவ்வாயில் இருந்து வந்து கொண்டிருந்தது. கையெறிகுண்டு அளவே இருக்கும் அணுகுண்டுகளோடு அதில் இருந்தவர்கள் பூமியைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தார்கள்!

டான் அசோக் செப் 8,2012.பிற்பகல்10.18 மணி

ராதாவின் ராமாயணத்திற்காக சென்னை மாகாண சட்டசபை ஒரு புதிய நாடகத்தடைச் சட்டத்தையே கொண்டு வந்தது. அதற்கான விவாதம் நடந்த போது சட்டமன்றத்திற்கும் சென்றார் ராதா. மன்ற உறுப்பினர்கள் எதிர்த்தனர். தனக்காகவே சட்டம் வருவதால் அவ்விவாதத்தைத் தானும் அவசியம் பார்க்க வேண்டும் எனக் கோரினார் ராதா. ஒரு கலைஞனுக்காக தடைச்சட்டம் இயற்றிய பெருமையை அன்று பெற்றவர் சி.சுப்ரமணியம்.

எங்களால் பழைய ராமாயணத்தை பல நூற்றாண்டுகளாகத் தாங்கிக் கொள்ள முடிந்தது. அவர்களால் புதிய ராமாயணத்தை ஐந்து ஆண்டுகள் கூடத் தாங்க முடியாது என்று சனாதனவாதிகளைக் கேலி செய்தார் அண்ணா.

தனது ராமாயண நாடகத்திற்கு எதிர்ப்பு வலுத்ததால் ராதா இம்மியளவும் அசரவில்லை. மாறாக, பத்து அவதாரங்களையும் தோலுரிக்கும் தசாவதாரம் நாடகத்தை அடுத்ததாக நடத்தத் தொடங்கினார்.

ராதாவின் இந்தப் போர்க்குணம் இளைஞர்களைக் கவர்ந்ததில் வியப்பில்லை. காளிமார்க் பரமசிவம் நாடார் எம்.ஆர். ராதா சோடா என்ற பெயரில் ஒரு சோடாவையே அறிமுகப்படுத்தினார் என்றால் அந்தக் காலகட்டத்தில் ராதா இளைஞர்களிடம் பெற்றிருந்த செல்வாக்கை நாம் ஊகித்துக் கொள்ளலாம்.

சந்திரன் வீராசாமி செப் 8,2012 இரவு 9.18 மணி

பெங்களூரில் கைது செய்யப்பட்ட ஷானாஸ் புழல் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். அவர் ஆறு மாத கர்ப்பமாக இருப்பதாக தெரிகிறது. கர்ப்பிணிப் பெண்கள் சிறையில் இருக்கும் வசதிகளோடு வாழ்வது மருத்துவரீதியாகவும், உளவியல்ரீதியாகவும் சரியல்ல. நீதிபதிகள் எப்படி அவரை சிறைக்காவலுக்கு அனுப்பினார்கள் என்றே புரியவில்லை. ஏதேனும் மகளிர் இல்லத்துக்குதான் நியாயமாக அனுப்பியிருக்க வேண்டும். சட்டத்துக்கு மனிதநேயம் சற்றுமில்லை என்பது இதுபோன்ற சந்தர்ப்பங்களில் வெட்டவெளிச்சமாக தெரிகிறது

யுவ கிருஅஷ்ணா செப் 6, 2012 காலை 11.12 மணி

தீபாவளியை பட்டாசு வெடித்து மற்றவர்கள் கொண்டாடுவதற்காக பலர் இன்று தங்களின் இன்னுயிரை நீத்துள்ளனர். இந்து மத முட்டாள்தனங்களில் ஒன்று நரகாசுரன் வதையும் அதற்காக கொண்டாடப்படும் திபாவளி பண்டிகையும்.

ஒரு நரகாசுரனின் உயிர் பறிக்கப்பட்டதை கொண்டாடுவதற்காக பல தமிழர்களின் உயிர் பறிக்கப்பட்டுள்ளது.

இறந்தவர்களின் வீடு இழவு வீடாக சோகத்தில் மூழ்கியிருக்க, நாம் மகிழ்ச்சியாக தீபாவளியை கொண்டாடுவதா?

மனசாட்சி உள்ள தமிழர்களே… இறந்த அந்த உயிர்களுக்கு மரியாதை தரும்வண்ணம், இந்த ஆண்டாவது தீபாவளியை பட்டாசு வெடித்து கொண்டாடாமல் இருங்கள். உங்கள் குழந்தைகளுக்கு எடுத்துச் சொல்லுங்கள், அவர்களை சமூக பொறுப்புள்ள மனிதர்களாக உருவாக்குங்கள்.

திராவிடப்புரட்சி செப் 5, 2012இரவு 7.53 மணி பேஸ்புக்கில் நான் போட்ட முதல் போஸ்ட்:

ஒரு பார்ப்பனப் பெண் குழந்தை பெற்றால், அவருடைய மனம் ஓர் உயர் நீதிமன்ற நீதிபதி பதவி எப்பொழுது காலியாகும் என்பது பற்றி சிந்திக்கிறது. ஆனால், இதற்கு நேர் மாறாக நம்முடைய துப்புரவுத் தொழிலாளர் பெண்மணி குழந்தை பெறும்போது, அரசாங்கத்தில் ஒரு துப்புரவுப் பணி எப்பொழுது காலியாகும் என்று நினைக்கிறார். – அம்பேத்கர்

கவின்மலர் செப்டம்பர் 9, 2012 நள்ளிரவு 12:01 மணி

 

கறுப்பாக இருப்பதனால் தானே வெறுப்பாக பார்க்கிறாய்

தெரிந்து கொள்

சிவப்பாக இருப்பவர்கள்

எல்லாம் சிறப்பானவர்கள் அல்ல…

எத்தனை தமிழர்கள் இருக்கின்றீர்கள்? ஆக.23,2012 இரவு 11.55

முகநூல் பேசுகிறது

முகநூல் பேசுகிறது

முகநூல் பேசுகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *