தகுதி உண்டாக்க தனி ஆணை! தரணி மகாமோசடி!

  தேர்வு எழுத வேண்டுமானால் பள்ளிக்கு இத்தனை சதவிகித நாள்கள் வந்திருக்கவேண்டும் என்பது விதி. ஆனால், ‘நீட்’ தேர்வில் அகில இந்திய அளவில் முதல் மதிப்பெண் பெற்ற பிகார் மாணவி பள்ளிக்குச் செல்லாமலேயே, குறைந்தபட்ச வருகையில்லாமலேயே தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டுள்ளார். பிளஸ் டூ படிக்கும் பிகாரைச் சேர்ந்த அந்த மாணவி, அந்தக் காலகட்டத்தில் – பள்ளிக்குச் செல்லாமல் டில்லியில் தங்கி ‘நீட்’ தேர்வுக்கான பயிற்சியைப் பெற்றுள்ளார் என்பது அடிகோடிட்டுக் கவனிக்கத்தக்கது. இதுகுறித்துத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் […]

மேலும்....

நூல் அறிமுகம்

  தலைப்பு: “அம்மா ஊட்டிய                             நிலாச்சோறு” ஆசிரியர்: எடையூர் ஜெ.பிரகாஷ் வெளியீடு: அபிரா புக்ஸ்(டீச்சர் வீடு), புதுத்தெரு, எடையூர் அஞ்சல். திருத்துறைப்பூண்டி வட்டம், திருவாரூர் மாவட்டம் – 614702. கைபேசி: 8939319329 பக்கம்: 96    விலை: ரூ.80/-     சிறப்பான நறுக்குக் கவிதைகளைக் கொண்ட  நூல். நம் கண் முன்னால் நடைபெறும் சமூக கொடுமைகளை அவலங்களை கவிதைகளால் சாடும் இந்நூலாசிரியர் பல்வேறு இடங்களில் மூடநம்பிக்கைகளை சாடுகிறார். கவுரி லங்கேஷ் கொலை குறித்தப் பதிவில் […]

மேலும்....

பிளாஸ்டிக் பொருட்களால் பேரபாயம்

  ¨                    சராசரியாக ஒவ்வொரு ஆண்டும் உலக அளவில் 8 பில்லியன் டன் பைகளும், பிளாஸ்டிக் பொருட்களும் உற்பத்தி செய்யப்படுகின்றன.   ¨                    ஒரே ஒரு பிளாஸ்டிக் பையோ, பிளாஸ்டிக் பொருளோ மண்ணோடு மக்கிப் போக 1000 ஆண்டுகளுக்கு மேலாகும்.   ¨                    ஆண்டுக்கு 10,00,000_க்கும் மேற்பட்ட உயிரினங்கள் பாலித்தீனை சாப்பிடுவதால் மட்டுமே செத்து மடிகின்றன. இந்த லிஸ்ட்டில் மனிதனும்         இடம் பிடித்துள்ளது நமக்கான ரெட் அலர்ட். ¨                    ஒரு நிமிடத்திற்கு ஒரு மில்லியன் பிளாஸ்டிக் பாட்டில்கள் […]

மேலும்....

சுயமரியாதைச் சுடரொளி மூவலூர் இராமாமிர்தம் அம்மையார்

  தேவதாசி முறை கட்டுப்பாட்டை உடைத்து வெளியே வந்த முதல் பெண் என்பதோடல்லாமல், கடவுளின் பெயரால் ஒரு சமூகம் மட்டும் இழிவு வாழ்க்கையை மேற்கொள்ளவேண்டும் என்ற நியதியைத் தகர்ப்பதே தனது வாழ்நாள் இலட்சியம் என முடிவெடுத்து வாழத் தொடங்கினார் இராமாமிர்தம். அவரை அவரின் உறவினர்கள் மட்டுமின்றி தேவதாசிகளில் பலரும் எதிர்த்தனர். இருப்பினும் மனம் தளராது இக்கொடுமைக்கு எதிராகப் போராடினார். 1925 ஆம் ஆண்டு காஞ்சிபுரத்தில் நடைபெற்ற காங்கிரசுக் கட்சி மாநாட்டில் “வகுப்புரிமை’ தீர்மானத்தை ஆய்வுக்கு எடுத்துக்கொள்ள மறுத்ததால், […]

மேலும்....

மந்திரமும் தந்திரமும்! – கருவை. மு.குழந்தை

என்னுடைய கைப்பேசி மணி ஒலித்தது. “இனிய தமிழ் வணக்கம்!’’ என்று பெயரைக் கூறினேன். “வணக்கம் அய்யா! உங்களுடைய மாணவன் பேசுகிறேன்!’’ என்று பெயரைக் கூறினார். அன்பான உரையாடலின் நிறைவாக “அய்யா! உங்களுடைய அறிவுரைகளால், இன்று நான் ஒரு முழுமையான பகுத்தறிவாளனாக வாழ்கிறேன்!’’ என்றார். என் மனம் பெருமையால் பூரித்துப் புகழ்மகுடம் சூட்டிக் கொண்டது. இவ்வாறு பாடம் கற்பிக்கும் போதே பகுத்தறிவையும் கற்பித்த நான், பார்க்குமிடமெல்லாம் பனை மரங்களாகக் காட்சியளித்த பனையூரில் பணியாற்றியபோது நிகழ்ந்ததே இக்கதை. அந்தப் பள்ளியில் […]

மேலும்....