பிளாஸ்டிக் பொருட்களால் பேரபாயம்

ஜூன் 16-30

¨                    சராசரியாக ஒவ்வொரு ஆண்டும் உலக அளவில் 8 பில்லியன் டன் பைகளும், பிளாஸ்டிக் பொருட்களும் உற்பத்தி செய்யப்படுகின்றன.

 

¨                    ஒரே ஒரு பிளாஸ்டிக் பையோ, பிளாஸ்டிக் பொருளோ மண்ணோடு மக்கிப் போக 1000 ஆண்டுகளுக்கு மேலாகும்.

 

¨                    ஆண்டுக்கு 10,00,000_க்கும் மேற்பட்ட உயிரினங்கள் பாலித்தீனை சாப்பிடுவதால் மட்டுமே செத்து மடிகின்றன. இந்த லிஸ்ட்டில் மனிதனும்         இடம் பிடித்துள்ளது நமக்கான ரெட் அலர்ட்.

¨                    ஒரு நிமிடத்திற்கு ஒரு மில்லியன் பிளாஸ்டிக் பாட்டில்கள் உலக மக்களால் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

¨                    12 நிமிடங்களுக்கு ஒரு பிளாஸ்டிக் பை என்ற அடிப்படையில் உலக மக்கள் பிளாஸ்டிக் பையை பயன்படுத்தி வருகின்றனர்.

¨                    மீன், திமிங்கிலம, சுறா, கடல் பறவை என 1,00,000க்கும் மேற்பட் கடல்வாழ் உயிரினங்கள் பிளாஸ்டிக்கால் அழிந்து வருகின்றன.

¨                    கடந்த 10 ஆண்டுகளாகத்தான் பிளாஸ்டிக் உற்பத்தி தொழில் வேகம் பிடித்துள்ளது. 1990_2000 வரையிலான கடந்த நூற்றாண்டில் உற்பத்தி செய்யப்பட்ட பிளாஸ்டிக்கை காட்டிலும் இது பல மடங்கு அதிகம்.

¨                    8 மில்லியனுக்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் கடலுக்குள் கலந்துள்ளன.

¨                    உலக அளவில் உருவாகும் 2.5 பில்லியன் மெட்ரிக் டன் திடக்கழிவில் 275 மில்லியன் மெட்ரிக் டன் பிளாஸ்டிக் கழிவுகள் கலந்துள்ளன.

¨                    அடுத்த 30 ஆண்டுகளில் பிளாஸ்டிக்கத்தான் அனைத்து உயிரினத்திற்கும் எமன் என்கிறது உலக சுகாதார மய்யம். அதை சூழலியல் ஆர்வலர்களும் ஆராய்ச்சியின் மூலம் உறுதி செய்துள்ளனர்.

¨                    ஆண்டுக்கு 10 சதவிகிதத்திற்கும் கீழ்தான் பயன்படுத்தப்பட்ட பிளாஸ்டிக்குகள் மறுசுழற்சிக்கு பயன்படுத்தப்படுகின்றன.

¨                    சட்னி, சாம்பார், டீ, ஜூஸ் என தமிழகத்தில் மட்டுமே நாள் ஒன்றுக்கு 3000 டன்னுக்கு மேற்பட்ட பாலித்தீன் பைகள் தென் இந்திய மாநிலங்களில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

¨                    சென்னையில் மட்டுமே நாள் ஒன்றுக்கு 40 டன் பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டப்படுகின்றன. அதில் 75 சதவிகிதம் பாலித்தீன் பைகள்தான்.

¨                    2015இல் சென்னை மாநகரை மழை வெள்ளம் சூழ, பாலித்தீன் கழிவுகளும் மிக முக்கிய காரணம் என்கின்றனர் சூழலியல் ஆர்வலர்கள்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *