நமக்கு முழு அறிவு தரும் ஒரே நூல் திருக்குறள்! – பெரியார்

    நேயன் பேரன்பு மிக்க தலைவர் அவர்களே! தோழர்களே!! தாய்மார்களே!! இம்மாநாடு திருவள்ளுவர் பேரால் கூட்டப்பட்டிருப்பதையொட்டி, திருவள்ளுவர் பற்றியும் அவரது குறளைப் பற்றியும் பேசுவது பொருத்தமாக இருக்குமென்று கருதுகிறேன். ஆரியரல்லாத இந்நாட்டு மக்கள் அனைவர்க்கும், சிறப்பாக இந்நாட்டுப் பழங்குடிப் பெருமக்களான திராவிடர்கள் அனைவர்க்கும் வள்ளுவர் அருளிய திருக்குறள் ஒரு பெரிய செல்வமேயாகும். நமது பெருமைக்கும், நெறிக்கும் (மதத்துக்கும்), நாகரிகத்திற்கும், வாழ்க்கை முறைக்கும் எடுத்துக்காட்டாக அதில் பல சங்கதிகளை நாம் காணலாம். திருக்குறளின் பேரால் நம் பெருமையை, […]

மேலும்....

அண்ணாமலைக்கு அரோகரா!

கலைஞர்     “ஓய்! நீல வர்ணம்! என்னிடம் காட்டாதே உன் பெருமையை! எங்கேயாவது ஆழ்வார் வர்க்கம் இருந்தால் அங்கே போய்க் காட்டும். சிருஷ்டி கர்த்தாவிடமா சிறுபிள்ளைத் தனமாக நடந்து கொள்கிறாய். சபாஷ்!’’ “ஓய்! பல தலை! வீண்ஜம்பம் அடிக்காதீர். உமது பெருமையை மற்ற தலைகளிடம் சொல்லிக் களிப்படையும், வைகுண்ட வாசனிடமா வீராப்பு! வெகு நன்று!’’ “ஆத்திரப்பட்டு ஆடாதே தம்பீ! நீ மோகினி உருவம் எடுத்து சிவனோடு கலவி செய்த காரணத்திற்காக உனக்கு மதிப்பு தர முடியாது!’’ […]

மேலும்....

அறிவியலுக்கு அடிப்படை இந்து மதமா? (21)

தீயில் மூழ்கினால் கீழ்ஜாதி  உடல் நீங்கி, உயர்ஜாதி உடல் கிடைக்குமா?   நந்தனார் திருப்புன்கூரில் எழுந்தருளி யிருக்கும் சிவலோக நாதருடைய திருவடிகளை மிகவும் நினைந்து பணி செய்ய விரும்பினார்; ஆத னூரினின்றும் புறப்பட்டு மிக்க காதலினால் திருப்புன் கூரை வந்தடைந்தார்; சிவ பெரு மானுடைய புகழினைத் திருக்கோயில் வாசலில் நின்றுகொண்டு பாடினார்; அப்பெருமானை நேரே கண்டு கும்பிட வேண்டும் என்ற பெருங் காதல்கொண்டு நின்றார். நந்தனாருக்கு அருள் செய்ய விரும்பிய சிவபெருமான் தமது முன்பு இருக்கும் இடபதேவரை […]

மேலும்....

பார்ப்பனியம் சுலபத்தில் சாகாது

      தஞ்சை ஜில்லா திருவையாறு வடமொழிக் கல்லூரியில் மாணவர்களுக்கு அளிக்கும் இலவசச் சாப்பாட்டு விடுதியில் பார்ப்பனர்களுக்கு வேறு உண்ணல் இடமும், பார்ப்பனர் அல்லாதாருக்கு வேறு உண்ணல் இடமும் இருந்து வந்தது. தென் இந்திய ரயில்வே உண்டி நிலையங்களில் இருந்து வந்த மேற்கண்டது போன்ற இடப்பிரிவு பெரியார் முயற்சியின் பயனாய் அகற்றப்பட்டபின் தஞ்சை ஜில்லா போர்டாரும் திருவையாற்றில் நீக்கி இருபிரிவினரும் ஒன்றாய் இருந்து உணவருந்தவேண்டுமென்று கட்டளை இட்டனர். அதன் பின் பார்ப்பனர் கூப்பாடு போட்டனர். போர்டார் […]

மேலும்....

திராவிடத்தை இகழும் தீயப் பேதையர்!

  கற்காலம் மறுபடியும் கண்முன் தோன்றக்                         கனவுலகில் மிதக்கின்றார்; பலரும் இங்கே தற்குறிகள் ஆகிவிட்டார்; நடப்பை ஏனோ                         தவறாகப் புரிந்துகொண்டு தவிக்கின்றார்கள்; நெற்பதர்கள் நெல்மணியாய் ஆவ தில்லை                         நிழலோடு போராட்டம் தேவை தானா? வெற்றுரைகள் விளம்பிடுவோர் அறிஞர் போலும்                         வேடமிட்டே நடிப்பதற்குக் கற்றுக் கொண்டார்!   யாவர்க்கும் வாழ்வியலில் நாட்டம் இல்லை                         யாப்பறியாப் புலவரெலாம் பல்கிப் போனார்; ஏவலராய் எடுபிடியாய் இருப்ப தற்கே                         எல்லாரும் விரும்புகிறார் பொருளைச் சேர்க்க; […]

மேலும்....