விஞ்ஞானமும் சனாதனமும்… தந்தை பெரியார் …

இன்றைய கூட்டம் வெளியில் மைதானத்தில் நடந்து இருக்கவேண்டும். பல காரணங்களால் அனுமதி கிடைக்காததனால் இங்கு ஏற்பாடு செய்து உள்ளார்கள். கன்னடத்தில் பேசவேண்டும் என்று சிலரும், தமிழில் பேசவேண்டும் என்று கோருபவர் பலரும் அவர்கள் ஆசைப்படுகின்றார்கள். இது பெரிதும் தமிழ் மக்கள் அழைப்பின் பேரில் வந்துள்ளதால் தமிழில் பேசுகின்றேன். தலைப்பு “விஞ்ஞானமும் சனாதனமும்” என்று தலைப்பு கொடுத்துள்ளார்கள். இதற்கு தமிழில் ஏற்ற சொல் இல்லை. இதற்கு தமிழில் நான் உணர்ந்தவரை “அறிவும், அறியாமையும்” என்று சொல்லலாம். பகுத்தறிவும் மூடநம்பிக்கையும் […]

மேலும்....

தமிழ்ப் புத்தாண்டு,பொங்கல் , பெரியார் விருது வழங்கும் விழாக்கள்

தந்தை பெரியார் முத்தமிழ் மன்றத்தின் சார்பில், அதன் 30 ஆம் ஆண்டு விழா, தமிழ்ப்புத்தாண்டு, பொங்கல் விழா, ‘பெரியார் விருது’ வழங்கும் விழா ஆகியவை ஒருங்கிணைந்து 17.1.2024 அன்று காலை தொடங்கி நாள் முழுவதும் கலை பண்பாட்டு மீட்டுருவாக்கப் பெருவிழாவாக நடைபெற்றது. திராவிடன் நிதி, குடும்பவிளக்கு நிதி ஒருங்கிணைந்து நடத்திய இவ்விழாவில், சுயமரியாதைக் குடும்பங்களின் சங்கமம் நிகழ்வை திராவிடர் கழக மகளிரணி, மகளிர் பாசறைப் பொறுப்பாளர்கள் வெகு சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். மகளிர் தோழர்கள், பெரியார் நூலக […]

மேலும்....

வரலாற்றுச் சுவடுகள்

வருணாசிரமத்தைப் பற்றி மகாத்மாவின் குழப்பம் தஞ்சையில் மகாத்மா சில பார்ப்பனரல்லாத கனவான்களிடம் பேசிய பிறகு, தான் பார்ப்பனர் – பார்ப்பனரல்லாதார் விஷயமான பூசலைப்பற்றி முன்னையை விட அதிகமாகத் தெரிந்து கொண்டதாக ஒப்புக்கொண்டு அதற்குமேல் வருணாசிரமத்தைப் பற்றிப் பேசியிருக்கிறார்:- அவ்வாறு பேசியிருப்பது, தேசியப் பார்ப்பனரல்லாதார் என்போர் பார்ப்பனரை விடுவதற்கும் தைரியமில்லாமல், பார்ப்பனரல்லாதாரை விடுவதற்கும் தைரியமில்லாமல் இரண்டுபேரையும் ஏமாற்ற நினைத்துக் கொண்டு, அங்கொருகால் இங்கொருகாலாக வைத்துக்கொண்டு இருப்பது போல், மகாத்மாவின் பிரசங்கமும் இரண்டு பேரையும் ஏமாற்ற முயற்சிப்பதாகவே காணப்படுகிறது. அதில் […]

மேலும்....

திராவிடர் இயக்கமும் பிரச்சார உத்திகளும்!

– வி.சி.வில்வம் திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம் சார்பில் “மந்திரமா? தந்திரமா? பயிற்சிப் பட்டறை” வகுப்புகள் ஜனவரி 20, 21 ஆகிய தேதிகளில், திருச்சி, கே.கே.நகரில் அமைந்துள்ள பெரியார் கல்வி நிறுவன வளாகத்தில் நடைபெற்றன . எத்தனை வடிவங்கள்! திராவிடர் இயக்கங்கள் தான், இந்த மக்களுக்குத் தேவையான உயிர் மூச்சுக் கொள்கைகளை எத்தனை, எத்தனை வடிவங்களில் நடத்துகிறது! நூறு ஆண்டுகளைக் கடந்த இந்த இயக்கம் பொதுக் கூட்டம், தெருமுனைக் கூட்டம், மாநாடு, கருத்தரங்கம், பட்டிமன்றம், நாடகம், பாடல், […]

மேலும்....

அறிவைத் தருவது கோயிலா ? பள்ளிக்கூடமா ?

100 வருட கதையா? இரண்டு நிமிடத்தில் நொறுக்கி விட்டான் அந்த சிறுவன் சிறுவன்: நான் படிக்கவில்லையென்றால் எனக்கு வேலை எப்படி கிடைக்கும்? கடவுள் எனக்கு வேலை வாங்கித் தரப்போவதில்லை. செய்தியாளர்: நீ கோயிலுக்குப் போனால் உனக்கு ஆசீர்வாதம் கிடைக்குமே! சிறுவன்: நான் கோயிலுக்குப் போகமாட்டேன். நான் பள்ளிக்கூடத்திற்குப் போவேன். செய்தியாளர்: நீ பெரியவன் ஆன பிறகு என்ன படிக்க ஆசைப்படுகிறாய்?சிறுவன்: IAS (Indian Administrative Service), UPSC தேர்வுகளுக்கு என்னை ஆயத்தப்படுத்திக் கொள்ளப் போகிறேன். செய்தியாளர்: கோயில்கள் […]

மேலும்....