அறிவைத் தருவது கோயிலா ? பள்ளிக்கூடமா ?

2024 கட்டுரைகள் பிப்ரவரி 01-15, 2024

100 வருட கதையா? இரண்டு நிமிடத்தில் நொறுக்கி விட்டான் அந்த சிறுவன்

சிறுவன்: நான் படிக்கவில்லையென்றால் எனக்கு வேலை எப்படி கிடைக்கும்? கடவுள் எனக்கு வேலை வாங்கித் தரப்போவதில்லை.
செய்தியாளர்: நீ கோயிலுக்குப் போனால் உனக்கு ஆசீர்வாதம் கிடைக்குமே!

சிறுவன்: நான் கோயிலுக்குப் போகமாட்டேன். நான் பள்ளிக்கூடத்திற்குப் போவேன்.
செய்தியாளர்: நீ பெரியவன் ஆன பிறகு என்ன படிக்க ஆசைப்படுகிறாய்?சிறுவன்: IAS (Indian Administrative Service),
UPSC தேர்வுகளுக்கு என்னை ஆயத்தப்படுத்திக் கொள்ளப் போகிறேன்.
செய்தியாளர்: கோயில்கள் முக்கியமானதா இல்லை பள்ளிக்கூடங்கள் முக்கியமானதா?
சிறுவன்: பள்ளிக்கூடங்கள் தான் முக்கியமானது.
செய்தியாளர்: தினமும் மக்கள் ஒரு சிறந்த வாழ்க்கை வேண்டுமென்று கடவுளைப் பிரார்த்திக்கிறார்களே?
சிறுவன்: அவர்கள் முட்டாள்கள். நான் ஆசிரியர்களையும், என் பெற்றோர்களையும் பிரார்த்திக்கிறேன்.
செய்தியாளர்: நீ பிரார்த்திக்கவில்லை என்றால் எப்படி UPSC தேர்வுகளில் வெற்றிபெறுவாய்?
சிறுவன்: நான் பள்ளிக்குச் சென்று படிப்பதால் மட்டுமே UPSC தேர்வுகளில் வெற்றிபெற முடியும்.
செய்தியாளர்: உனக்கு என்ன வயதாகிறது?
சிறுவன்: 13
செய்தியாளர்: நீ எப்படி இவ்வளவு புத்திசாலி ஆனாய்?
சிறுவன்: நான் பள்ளிக்கூடத்திற்குச் சென்றதால்.
செய்தியாளர்: நீ பள்ளிக்கூடத்திற்குப் பதில் கோயிலுக்குச் சென்றிருந்தால் என்ன நடந்திருக்கும்?
சிறுவன்: நான் 2 ரூபாய்க்கும், 5 ரூபாய்க்கும் பிச்சை எடுத்திருக்க நேர்ந்திருக்கும். வேறு என்ன நடந்திருக்கும்?
செய்தியாளர்: தாய் கங்கை அழைப்பதாக அனைவரும் கூறுகிறார்கள்…
சிறுவன்: தாய் கங்கை என்ன அவர்களை தொலைப்பேசியில் அழைத்தாரா?
செய்தியாளர்: அப்படியென்றால் நீ கோயிலுக்கே போக மாட்டாயா?
சிறுவன்: மாட்டேன்
செய்தியாளர்: போனால்தான் என்ன?
சிறுவன்: கோயிலுக்குச் சென்று என் நேரத்தை
வீணடிப்பதைவிட, பள்ளிக்கூடத்திற்குச் சென்றால்
புதிதாக ஏதாவது ஒன்றை நான் கற்றுக்கொள்ளமுடியும். எங்கள் கிராமத்தில் யாரும் கோயில்களுக்குப் போவதில்லை. ஒரு கோயிலைக் கூட நீங்கள் இங்குக் காண முடியாது.
செய்தியாளர்: உன் ஜாதி என்ன?
சிறுவன்: நாங்கள் chamaars(தலித்) ஜாதியைச் சேர்ந்தவர்கள்
செய்தியாளர்: நீ அதை மிகப் பெருமையுடன் கூறுகிறாயா?
சிறுவன்: கண்டிப்பாக, பாபாசாகேப் எங்களுக்கு அந்த உரிமையை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார். ராமர் எங்களுக்கு எதையும் தரவில்லை, பாபாசாகேப் அனைத்தையும் தந்திருக்கிறார்.
செய்தியாளர்: நல்ல கல்வி ஒரு மனிதனுக்கு என்ன தந்துவிடும்?
சிறுவன்: நல்ல கல்வி ஒரு மனிதனை நெறிப்படுத்தி அவனுக்கு மகத்தான வாழ்க்கையைக் கட்டமைத்துத் தரும், நல்லது எது தீயது எது, சரி எது தவறு எது
என்று பகுத்து பார்க்கும் பழக்கத்தை ஏற்படுத்தும்,
கடவுளின் பெயரால் நடக்கும் காட்டுமிராண்டித்தனத்திலிருந்து விலகி வாழும் அறிவைத் தரும். 