ஸனாதனம் பற்றி தந்தை பெரியார்

2023 செப்டம்பர் 16-30, 2023 பெட்டி செய்திகள்

“பார்ப்பான் காலைக் கழுவித் தண்ணீரைத்தான் குடிக்க வேண்டும். பார்ப்பான் சாப்பிட்டு மீதியான
எச்சிலைத்தான் சாப்பிடவேண்டும். பார்ப்பானைத்தான் கடவுளாகக் கருதி, கும்பிட வேண்டும் என்று இருப்பதை மாற்றாமல், சும்மா இருந்து கொண்டு வரும் உங்களுக்குக் கடவுள் அருகில் நாங்கள் போனால் மாத்திரம் கோபம் வருகிறதே” என்று கேட்டேன். அவர்களால் பதில் ஒன்றும் சொல்ல முடியவில்லை. பிறகுதான் சந்துக்குச் சந்து பிள்ளையாரைப் போட்டு உடைக்கச் சொன்னேன். இராமன் படத்தைத் தீயிட்டுக் கொளுத்தச் சொன்னேன். இராமாயணத்தை அணுஅணுவாகப் பிரித்து எழுதினேன். பார்ப்பனர்கள் எழுதி வைத்துள்ள கதைகளை வைத்துக்கொண்டே இராமனுடைய, கிருஷ்ணனுடைய ஊழல்களை எடுத்துச் சொல்லிக்கொண்டு வருகிறேன்.

(14.12.1958 அன்று குன்னூரில் (நீலகிரி) தந்தை பெரியார் ஆற்றிய சொற்பொழிவிலிருந்து) – ‘விடுதலை’, 22.1.1959
சனாதன தர்மம் – பார்ப்பன தர்மமே!

இந்து மதத்தைப் பற்றிய பார்ப்பன குருவான சங்கராச்சாரியார் கூறியது என்னவென்றால் _ (27.2.1969 ‘தினமணி’ பத்திரிகையில் உள்ளது).
‘இந்து மதம் பழமையானது உலகம் தோன்றிய காலத்திலேயே தோன்றியது. இந்து மதத்தின் தர்மம் அவரவருக்கு விதித்தபடி நடந்து ஸனாதன தர்மத்தை நிலைநிறுத்த வேண்டியது’ என்று சொன்னார்.

‘அந்தக் காலத்தில் ஏற்பட்ட தர்மங்கள், முறைகள், நடப்புகள் இன்றும் நடைபெற வேண்டும். அந்தப்படி நடக்காவிட்டால் பாவம், கேடு ஏற்படும்.