செயலி

Mycall app  மைகால் ஆப் என்னும் புதிய ஆப்பை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) அறிமுகம் செய்துள்ளது. இதில் தொலைபேசி அழைப்புகளின் தர கண்காணிப்பு,  நெட்வொர்க் பிரச்சனை மற்றும் ஆடியோவில் தாமதம் உள்ளிட்டவை பற்றி வாடிக்கையாளர்கள் தங்களது அனுபவத்தை பகிர்ந்து கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நுகர்வோர் மற்றும் சேவை வழங்குபவர்களிடையே வெளிப்படைத்தன்மை இருக்கும் என்று ட்ராய் கருதுகிறது. – அரு.ராமநாதன்         

மேலும்....

ஆவணப்படம்

  மகளிர் காவல் நிலையத்தில் காவல் அதிகாரியாக இருக்கும் ஒரு பெண்ணின் அன்றாடப் பணிகளை இந்த ஆவணப்படம் பதிவு செய்திருக்கிறது. மகளிர் காவல் நிலையத்தில் குடும்பச் சண்டை காதல் பிரச்சினை, ஈவ்டீசிங், கிரிமினல் குற்றங்கள் என்று ஏராளமான அனுபவங்கள். அதில் ஒரு பெண் கான்ஸ்டபிள் தன்னிடம் துப்பாக்கி இருப்பதால் ஆண்கள் தன்னிடம் வரவே அஞ்சுவார்கள் என்று சொல்கிறார். அந்தப் பெண் அதிகாரி கூறும்போது, பெண்களிடம் தங்கள் உரிமைகள் பற்றிய அதிக விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது. “பெண்கள் காவல் நிலையத்தால் […]

மேலும்....

உண்மை வாசகரின் உருக்கமான கடிதம்!

    மானமிகு தலைவர் கி.வீரமணி அவர்களுக்கு கோவில்பட்டியில் இருந்து எஸ்.ஜெயா எழுதுவது. உங்கள் அனைவருக்கும் தெரியும் நான் ஒரு கிருஸ்தவ பெண்ணாக இருந்து பகுத்தறிவுச் சிந்தனைக்குள் வந்தவள். உங்களுடைய உண்மை இதழைப் படித்து அனேக விஷயங்களைத் தெரிந்துகொண்டேன். நானும் ஒரு சிறு பெண்ணும் உங்களை 5.7.2016 அன்று சந்தித்தோம். ஆனால், அந்தப் பெண் சூர்யா இன்று உயிருடன் இல்லை. அந்தப் பெண் உண்மை இதழை விரும்பிப் படிப்பாள். எங்களுடைய ஆலையில் 300 நபர்கள் பணி செய்கிறோம். […]

மேலும்....

கவிக்கோ அப்துல் ரகுமான் மறைந்தாரே!

‘வானம்பாடி’ இயக்கக் கவிஞர்களில் முக்கியமானவராகத் திகழ்ந்தவர். திராவிட இயக்கத்தோடு எப்போதும் நீங்காத் தொடர்பிலிருந்தவர்; இணைந்து இயங்கியவர். தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, டாக்டர் கலைஞர் ஆகியோர் மீது மாறாத பற்றுடையவர். நம்மீது எப்போதும் மாறாத பாசம் கொண்டவர். தாம் மட்டும் என்றில்லாமல், அடுத்தடுத்த தலைமுறையிலும் ஏராளமான புதுக்கவிஞர்களுக்கு வழிகாட்டியும், ஏராளமான, தரமான தமிழ் மாணவர்களை உருவாக்கியும் தமிழ்ப் பணியாற்றியவர். பாவலர் அறிவுமதி போன்றோர் கவிக்கோவின் மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழில் அவர் படைத்த இலக்கியங்களும், பன்னாட்டு இலக்கியங்களிலிருந்தும், […]

மேலும்....