பெரியார் நடத்திய ஆங்கில ஏடு ரிவோல்ட் (Revolt) சில நினைவுகள்…

    தமிழ்நாட்டைக் கடந்து வெளிமாநிலங்-களிலும், வெளிநாடுகளிலும் சுயமரியாதைக் கொள்கைகளை விதைக்க, ‘ரிவோல்ட்’ (Revolt) இதழ் ஆங்கிலத்தில் ‘குடிஅரசு’ ஏட்டின் கொள்கையினை அடிப்படையாகக் கொண்டு வார ஏடாக கொண்டு வரப்பட்டது. இதன் கொள்கைகளாக தந்தை பெரியார் 11.11.1928 ‘குடிஅரசு’ இதழில்  எழுதியவை. “ரிவோல்ட்’’ என்ற ஆங்கில வாரப் பத்திரிகை நடத்துவதின் கருத்து, இப்போது நாம் பதிப்பாசிரியராயிருந்து நடத்தும் “குடிஅரசு’’ என்னும் தமிழ் வாரப் பத்திரிகையின் கொள்கைகளையே முக்கியமாய்க் கொண்டு நடத்துவதற்காக ஏற்பாடு செய்யப்படுகிறது. ‘ரிவோல்ட்’ என்கின்ற வார்த்தைக்கு நாம் […]

மேலும்....

அம்பேத்கர் பேசுகிறார்

      “இந்து சட்ட முன்வடிவை’’ நாடாளு-மன்றத்தில் 1949ஆம் ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதி சட்ட அமைச்சர் அம்பேத்கர் முன்மொழிந்து பேசும்போது பின்வருமாறு குறிப்பிட்டார். “இந்தச் சட்ட முன்வடிவைப் புரட்சிகரமான நடவடிக்கை எனக் கூற முடியாது. மேலும், இது அடிப்-படையையே மாற்றியமைக்கிற கோட்பாடு என்றும் சொல்ல முடியாது. திருமண உரிமைகள், நீதிமன்ற திருமண ரத்து, தத்து எடுத்தல், வாரிசு நிலை போன்றவற்றில் தலைகீழ் மாற்றங்கள் கொண்டு வரப்படவில்லை. திருமணச் சட்டத்தைப் பொறுத்தவரை எந்த வகையான திணிப்பும் […]

மேலும்....