இணைய உலகம் : சிறுகனூரில் தந்தை பெரியார் மெட்டா வெர்ஸ் உலகம்

முனைவர் வா.நேரு நவீன தொழில் நுட்பத்தின் காரணமாக உலகம் மாறிக்கொண்டே இருக்கிறது. 1980களில் கணினியும், 2005களில் ஸ்மார்ட் போனும், உலகை அடுத்தடுத்த உயரத்திற்குக் கொண்டு சென்றன. தற்போது மெட்டாவெர்ஸ் உலகம் பற்றிய தேடல் தொடங்கிவிட்டது. மெட்டாவெர்ஸ் என்பது மெய் நிகர் உலகு. அதாவது மெய்யாக இருப்பது போல் இருக்கும். ஆனால், மெய்யான உலகம் அல்ல. இந்த மெய் நிகர் அல்லது மாய உலகத்தை உருவாக்குவதற்கு அவர்கள் சில தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தப் போகிறார்கள். மெட்டாவெர்ஸ் உலகத்தில் ஒரு […]

மேலும்....

பெண்ணால் முடியும்! : தமிழகப் பெண்கள் பிரிவில் முதலிடம்!

2020ஆம் ஆண்டு நடைபெற்ற சிவில் சர்வீஸ் தேர்வில் இந்திய அளவில் 108ஆம் இடமும், தமிழ்நாட்டுப் பெண்களில் முதலிடமும் பெற்றுள்ளார் தென்காசியைச் சேர்ந்த சண்முகவள்ளி. இவர் தமது மூன்றாவது முயற்சியில் அடைந்த இந்த வெற்றியைப் பற்றிக் கூறுகையில், “கல்லூரியில் படிக்கிறப்பதான் சிவில் சர்வீஸில் ஆர்வம் வந்துச்சு. தினமும் செய்தித்தாள் வாசிக்கிறது, நியூஸ் எல்லாம் ஃபாலோ பண்றதுனு இருந்தேன். அண்ணா பல்கலைக்கழகத்தில் எட்டு செமஸ்டரிலும் எட்டு கோல்டு மெடல் வாங்கியிருக்கேன். படிப்பு மட்டுமல்ல; பொதுஅறிவிலும் சின்ன வயசுல இருந்தே ரொம்ப […]

மேலும்....

எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (88) மதமாற்றத்தை எதிர்த்த பாரதி!

நேயன் இந்து மதத்திலிருந்து பிற மதங்களுக்கு மாறுவதை பாரதி வன்மையாகக் கண்டித்தார். மற்ற மதங்களை வெறுத்ததோடு, இந்துக்கள் மதம் மாறுவதையும் கண்டித்த பாரதி மதவெறியின் உச்சத்திற்கே சென்று, இந்து மதத்தை உலகம் முழுவதும் பரப்ப வேண்டும் என்றும் கூறினார். “இந்த மாதம் முதல் தேதி, சென்னைத் தலைமைப் பாதிரி எல்லூரில் ஆணும் பெண்ணும், குழந்தைகளுமாக ஏறக்குறைய முந்நூறு பேரைக் கிறிஸ்துவ மதத்தில் சேர்த்துக் கொண்டார் என்று தெரிகிறது. இந்த விஷயம் நமது நாட்டில் பல இடங்களில் அடிக்கடி […]

மேலும்....

சிறுகதை : ராசிபலன்

ஈரோடு அ.தமிழ்க்குமரன் வானத்தில் சூரியன் உதயம் ஆகி சில நிமிடங்கள்தான் ஆச்சு. அதற்குள் ராதிகாவின் புலம்பல் தொடங்கிவிட்டது. இரவு இரண்டு மணி வரை சுற்றுவதும் காலை எட்டு மணி வரை தூங்குவதும்… என்று பேசத் தொடங்-கினாள். “ராதிகா சும்மா இரு; இன்னைக்கு ஞாயிற்றுக்கிழமை; மனுசனை ஒரு நாளைக்கு நிம்மதியா தூங்க விடு!’’ என்று எரிந்து விழுந்தான் சேகர். இவர்களுக்குத் திருமணம் ஆகி ஆறு மாதம் ஆகிறது. திருமணத்திற்கு முன்பு சேகர் விடியும் வரைகூட ஊர் சுற்றுவான். இப்போது […]

மேலும்....

செம்மொழி : தமிழும் பிராகூயி மொழியும்

  சிந்து _ மெகார்கர் நாகரிக மக்கள் மொழி _ பிராகூயி. இது பாகிஸ்தான் பலுசிஸ்தானில் வழங்கிய _ வழங்கிவரும் முந்து தமிழின் வடக்குக் கிளைமொழி.  சில நாள்களுக்கு முன்பு என்னுடைய கல்லூரிக் காலத்தில் (1968 _ 71) நான் படித்து எழுதி வைத்திருந்த ஆய்வுக் குறிப்புகளின் கோப்பு ஒன்றை வீட்டுப் பரணிலிருந்த பெட்டியிலிருந்து கண்டெடுக்க நேர்ந்தது. அத்தொகுப்பில் பல்வேறு அரிய நூல்களில் இருந்து எடுக்கப்பட்ட குறிப்புகளைக் கண்டு எனக்கே மலைப்பாக இருந்தது. இந்திய சுதந்திரத்துக்கு முன்பும், […]

மேலும்....