எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (82) :பாரதியின் ஆரிய இனப்பற்று!

நேயன் ஆர்.எஸ்.எஸின் முதன்மை இலக்கு ஆரிய இனத்தை ஆதிக்க இனமாகவும், உயர்நிலை வர்ணமாகவும் வைத்து, மற்றவர்களை அவர்களுக்கு அடிமைகளாக வைத்திருப்பதாகும். ஆரியர்கள் தவிர மற்றவர்கள் விலங்குகளுக்குச் சமமானவர்கள் என்பதே ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தம். ஆர்.எஸ்.எஸின் சித்தாந்த கர்த்தா கோல்வால்கர், “நாம் (ஆரியர்கள்) நல்லவர்கள், அறிவுத்திறன் கொண்டவர்கள். இயற்கையின் விதிகளையும், ஆன்ம விதிகளையும் அறிந்தவர்கள் நாம்தான். மனிதனுக்கு நன்மை பயக்கக் கூடியவற்றையெல்லாம் கொண்டு வந்தவர்களும் நாம்தான். அப்போது நம்மைத் தவிர மற்றவர்களெல்லாம் இரண்டு கால் பிராணிகளைப் போல் அறிவற்றவர்களாகவே இருந்தனர். […]

மேலும்....

கவிதை : பாடம் புகட்டும்!

ஒன்றியமென் றுரைத்ததுமே இமய உச்சி                உறைந்தாராய் ஆர்ப்பரித்தே குதிக்கின் றார்கள்; பன்னரிய குற்றமிதாம்; காவிக் கூட்டம்                பதைக்கிறது; நகைக்கிறது அறிஞர் கூட்டம் ஒன்றினையே நன்கறிவர்; ஏழாண் டாக                உருப்படியாய் இங்கெதுவும் நடக்க வில்லை ! இன்றைக்கு நம்நாட்டின் நடப்பை நன்றாய்                எல்லாரும் எளிதாக விளங்கிக் கொள்வர்!   ஊடகங்கள் குரல்வளையை நெறித்தார்; நாளும்                உண்மைக்குப் புறம்பாக உளறு கின்றார்! நாடகங்கள் மெய்யென்றே நம்பு வோரும்                நஞ்சனையார் செய்கின்ற கூத்து […]

மேலும்....

பெண் விடுதலை : 90 ஆண்டுகளுக்கு முன் தந்தை பெரியார் குரலும் – ஊடகங்களின் இன்றைய விழிப்பும்!

கவிஞர் கலி.பூங்குன்றன் ‘தமிழ் இந்து’ ஏடு வாரந்தோறும் ‘பெண்’ எனும் தலைப்பில் மகளிர் பற்றி எழுதி வருகிறது. அந்த வகையில் கடந்த 18.7.2021 அன்று வெளிவந்த ஏட்டில் ‘குழந்தைப் பேறு பெண்களின் உரிமையில்லையா?’ என்ற தலைப்பில் விவாதமாக பல தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. “ஆம். வெளியே சென்று சம்பாதிக்கிறபோது பெண் வீட்டு வேலைகளைச் செய்வதில் என்ன தவறு என்பது நியாயமான வாதமாகத் தோன்றலாம். ஆனால், வீட்டு வேலைகள் பெண்களின் விருப்பத் தேர்வா? என்பது குறித்து யாருமே பேசுவதில்லை. வீட்டுக்குள்ளேயே […]

மேலும்....

முகப்புக் கட்டுரை : ஓ.பி.சி. பிரிவினர்க்கு 27% ஒதுக்கீடு உச்சநீதிமன்றத் தீர்ப்பு திராவிடம் பெற்று தந்த உரிமை சாசனம்!

மஞ்சை வசந்தன் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 142ஆவது பிரிவைப் பயன்படுத்தி, மருத்துவக் கல்வி வசதிகள் வளர்ச்சி பெறாத வடகிழக்கு மற்றும் வட மாநிலங்களில் உள்ளவர்கள் மருத்துவர்களாவதற்கு உதவும் வகையில், உச்சநீதிமன்றம், ‘மருத்துவக் கல்வியில் வளர்ச்சி அடைந்த மாநிலங்கள் மத்திய தொகுப்பு’ என்ற ஒன்றை உருவாக்கி, தங்களுக்குள்ள மொத்த மருத்துவப் படிப்புக்கான இடங்களில் _ எம்.பி.பி.எஸ். போன்ற பட்டப் படிப்புக்கான 15 சதவிகிதமும், மேல் பட்டப் படிப்புக்கான (எம்.டி., எம்.எஸ். போன்றவை) 50 சதவிகிதமும் (முதலில் 25 சதவிகிதம், […]

மேலும்....

பெரியார் பேசுகிறார் : பகுத்தறிவுப் பாதைதான் மக்களை முன்னேற்றும்

தந்தை பெரியார் தோழர்களே, தாய்மார்களே, இந்த வாழ்க்கைத் துணை ஒப்பந்த நிகழ்ச்சி முறை நீண்ட நாள் நடப்புக்கு மாறாக நடப்பதினாலும், இம்மாதிரி மாற்றத்துக்கு நானும் காரணமானவன் ஆனபடியால் சிறிது விளக்கிப் பேச எண்ணுகிறேன். நம் நாட்டில் திருமணத்துக்கு வருகின்றவர்களை மகிழ்ச்சி அடைய வைக்கவோ, பெருமை சம்பாதிக்கவோ மேளவாத்தியம், சதிர், பாட்டுக் கச்சேரி முதலியவை ஏற்பாடு செய்து பொருள் விரயமும், நேரப் போக்கையும் உண்டாக்குவார்கள். இவற்றை நான் கண்டிப்பது போலவே சுயமரியாதைத் திருமணத்திலும் பொருள் அதிகம் செலவு செய்து […]

மேலும்....