நமது இலக்கியம் அழிந்த விதம் – தந்தை பெரியார்

ராமாயணம், பாரதம், பாகவதம், கந்தபுராணம், பெரிய புராணம், திருவிளையாடல் புராணம் இவைகள் தமிழில் செய்யப்பட்டிருக்கின்றன என்பதல்லாமல் இவற்றுள் ஒழுக்கமோ, தமிழர் உணர்ச்சியோ ஏதாவது இருக்கிறதாக சொல்ல முடியுமா? நமது சமயம் பண்டிகை உற்சவம், கடவுள், வாழ்வு நாள், கோள் எல்லாம் இவைகளில் அடங்கியவை அல்லாமல் வேறு ஏதாவது ஆதாரம் வைத்திருக்கிறோமா? ஒரு நண்பர் சொன்னார்_ “இந்த நவராத்திரி பண்டிகையும், ஆடிப்பெருக்கு பண்டிகையும் பழைய இலக்கண இலக்கியங்களையும் கலைகளையும் ஒழிப்பதற்கும் பயன்பட்டு வந்திருக்கின்றன” என்று. நம் வீட்டில் உள்ள […]

மேலும்....

தமிழ்ப் பெயர் சூட்டுவோம்! தமிழர் என்று காட்டுவோம்!

— மஞ்சை வசந்தன் — அண்மைக் காலமாக தமிழர் வீடுகளில் பிள்ளைகளுக்குப் பிற மொழிகளில் பெயர் சூட்டப்படுவது மிகவும் வேதனைதரத்தக்கதாய் உள்ளது. குறிப்பாக கடந்த 30 ஆண்டுகளாக இப்போக்கு மிக மிகப் பண்பாட்டுச் சீரழிவை ஏற்படுத்தி வருகிறது. எனவே, இது குறித்து மிகக் கவலையோடும், பொறுப்புணர்ச்சியோடும், தமிழர் நலன் சார்ந்த அமைப்புகள், இயக்கங்கள், அரசியல் கட்சிகள் சிந்தித்து உடனடியாகத் தீர்வு காணவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. உயர்ஜாதிக்காரர்களுக்கு உயர்வான பெயர்களையும் சூத்திரனுக்கு இழிவான பெயர்களையும் இடவேண்டும் என்று சாஸ்திரங்கள் […]

மேலும்....

ஆசிரியர் பதில்கள்

பிரதமர் வேட்பாளரை முன்கூட்டியே அறிவிக்க வேண்டாம்! 1. கே: கீழமை நீதிமன்றங்கள் முதல் உச்சநீதிமன்றம் வரை லட்சக்கணக்கான வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் ஆயிரக்கணக்கான நீதிபதிகளின் பணியிடங்கள் காலியாக நிரப்பப்படாமல் இருப்பதற்கு அரசியல் காரணம் உண்டா? – தேவராஜ், கோயம்புத்தூர். ப : நிச்சயம் உண்டு என்பதற்கு, கொலிஜியத்தில் இடம் பெற்று அண்மையில் 25.12.2023 அன்று பதவி ஓய்வு பெற்ற மூத்த நீதிபதி, கவுல் அவர்கள் பகிரங்கமாகவே அதை, போட்டுடைப்பதுபோல நியமனங்கள்‘Pick and Choose’ என்று ‘Selective’ஆக […]

மேலும்....

நாஸ்திகர்மகாநாடு

— ஈ.வெ.கி. — சென்னையில் நாஸ்திகர் மகாநாடானது சென்ற டிசம்பர் மாதம் 31-ஆம் தேதி கூட்டப்பட்டது. இது நமது நாட்டிற்கே ஒரு புதுமையானதும், மக்களுக்கு ஒருவித புத்துணர்ச்சியை உண்டுபண்ணக் கூடியதுமாகும். நாஸ்திகமானது தற்காலம் இந்நாட்டிற் சிலருக்கு மட்டில் புதுமையெனத் தோன்றுமாயினும் இது தொன்றுதொட்டே இருந்து வந்திருப்பதாக நம்மவர்களின் புராண இதிகாசங்களால் விளக்கப்பட்டிருக்கிறது. உதாரணமாக இராமாயண காலத்திலும் நாஸ்திகம், கதாநாயகனான ராமனுக்கு உபதேசிக்கப்பட்டதாகவும், அவனால் மறுக்கப் பட்டதாகவும், அவன் மறுத்துவிட்டதையறிந்த உபதேசிகள் அதற்கு அவனின் இளமைப் பருவந்தான் காரணமென்றறிந்து […]

மேலும்....

மக்களைப் பணியச் செய்ய வேண்டும்

(யூதர்களின் இரகசிய அறிக்கை) மக்களை அதிகாரத்திற்குக் கீழ்ப்படிந்த-வர்களாக நடக்கச் செய்ய வேண்டுமென்பதால், அவர்களுக்குப் பணிவு குறித்து பாடம் எடுக்க வேண்டும். மேலும் ஆடம்பர வாழ்க்கைக்குத் தேவைப்படும் பொருட்களின் உற்பத்தியை வெகுவாகக் குறைக்க வேண்டும். அதீத ஆடம்பர வாழ்க்கை காரணமாக அவர்களிடம் ஒழுக்கம் என்பது அடியோடு குறைந்துவிட்டது. அதைக் கட்டுப்படுத்துவதன் மூலம் அவர்களுக்கு எளிமை உள்ளிட்ட ஒழுக்க விழுமியங்களைக் கற்பிக்கலாம். சிறுதொழில்கள் உற்பத்திகளை மீண்டும் ஊக்குவிக்க வேண்டும். அதற்கு அர்த்தம் என்னவென்றால், பெரு உற்பத்தித் தொழிற்சாலைகளுக்கு வேட்டு வைக்க […]

மேலும்....