உணவே மருந்து

புளிச்சக்கீரையின் பயன்கள்! தென்னிந்தியாவில் அதிலும் பயன்படுத்தப் படும் கீரைகளில் புளிச்சக்கீரையும் ஒன்று. குறிப்பாக ஆந்திரா மற்றும் தமிழ்நாட்டு மக்கள் புளிச்சக்கீரையை அதிகம் தங்கள் உணவில் விரும்பிச் சேர்க்கிறார்கள். புளிப்புச் சுவை அதிகமாக இருப்பதால் புளிச்சக் கீரை என்று அழைக்கப்படும் இக்கீரையின் புளிப்புத்தன்மை நம் உடலில் ஆற்றலை அதிகரிக்க உதவுகிறது. நம் உடலிலுள்ள கழிவுகளை வெளியேற்றவும், உடல் வளர்ச்சிக்கும் இந்த புளிப்புச் சுவை மிகவும் அவசியம். புளிச்சக்கீரையில் நமது உடலுக்குத் தேவையான வைட்டமின்களும், தாதுச் சத்துகளும் உள்ளன. குறிப்பாக […]

மேலும்....

அய்யாவின் அடிச்சுவட்டில்… இயக்க வரலாறான தன் வரலாறு (291)

அகர்தலா சமூகநீதி மாநாடு கி.வீரமணி நீடாமங்கலம் பகுதியில் திராவிடர் கழகத்தின் வளர்ச்சியில் பெரும்பங்காற்றியவரும், தந்தை பெரியாரின் பெருந்தொண்டருமான பூவனூர் மகாலிங்கம் அவர்கள் 10.10.1998 அன்று இயற்கை எய்தினார் என்னும் செய்தி அறிந்து மிகவும் துயருற்றேன். கழகத்தின் அனைத்து நிகழ்வுகளிலும் தவறாது கலந்து-கொள்பவர். தனது இறுதிக்காலத்தில் “நான் இறந்துவிட்டால் எனது உடலை தி.க. பொறுப்பாளர்களிடம் ஒப்படைத்து சுயமரியாதைக் குறைவின்றி அடக்கம் செய்ய வேண்டும்’’ எனக் கேட்டுக் கொண்டார். கழக மாநாடுகளுக்கு சுவர் எழுத்து எழுதக் கூடியவர். அவரின் சுவர் […]

மேலும்....

தமிழறிஞர்கள்

தமிழவேள் உமாமகேசுவரனார் (7.5.1883 – 9.5.1941) தமிழவேள் வேம்பப்பிள்ளை உமாமகேசுவரனார் என்ற பெயரைக் கேட்ட மாத்திரத்தில் தஞ்சை – கரந்தைத் தமிழ்ச் சங்கமும் தமிழ்க் கல்லூரியும் நினைவுக்கு வந்தே தீரும். தஞ்சை கரந்தட்டான்குடியில் (கரந்தை) பிறந்தவர் இவர் (7.5.1883). அந்தக் காலத்தில் பார்ப்பனர் அல்லாதார் சட்டம் படிப்பது என்பதே அரிதினும் அரிது. இவரோ ஒரு நூற்றாண்டுக்கு முன்பே அதனைச் சாதித்துக் காட்டிய தலைநிமிர் தமிழராவார். அந்தக் காலத்திலேயே பார்-_அட்_-லா படித்த ஏ.டி.பன்னீர்செல்வமும், வழக்குரைஞர் உமாமகேசுவரனாரும் தஞ்சை மாவட்டத்தில் […]

மேலும்....

இலக்கியம் : நாடக வடிவில் இமையம் சிறுகதைகள்!

கி.தளபதிராஜ் சாகித்ய அகாதமி விருதுபெற்ற இமையம் அவர்களின் ஆஃபர், மணலூரின் கதை, வீடும் கதவும், நன்மாறன் கோட்டைக் கதை ஆகிய நான்கு சிறுகதைகளையும், ‘கதையல்ல வாழ்க்கை’ என்ற தலைப்பில் பிரசன்னா ராமசாமி நாடகமாக்கி கடந்த ஏப்ரல் 2ஆம் தேதி சென்னை ஆழ்வார்ப்பேட்டை ‘மேடை’ அரங்கத்தில் அரங்கேற்றினார். திட்டமிட்டபடி இரவு சரியாக ஏழு மணிக்கு இரண்டாவது காட்சி தொடங்கியது.   மேடையில் மூன்று மோடாக்கள் (மூங்கில் ஸ்டூல்) மட்டும் போடப்பட்டிருந்தன. தொடக்கத்தில் இரண்டு பேர் தோன்றி அந்த நாடகக் காட்சி […]

மேலும்....

பகுத்தறிவு : கீதை – மாணவர்கள் கற்க வேண்டிய ஒன்றா?

கவிமாமணி இரா.குடந்தையான் மாணவர்களை மூளைச் சலவை செய்து, மதவுணர்வையூட்டி, பா.ஜ.க. அரசுகள் தற்போது முயன்று மடமையை வளர்த்துக் கொண்டிருக்கின்றன. மத்தியப் பிரதேச அரசு 2011இல் செய்த அந்தத் திருப்பணியைத்தான், இன்று கருநாடக, குஜராத் அரசுகள் செய்ய முன்வந்துள்ளன. பகவத் கீதை நீதி போதனைகளைச் சொல்லும் நூலல்ல. ஆன்மா, கர்மா, வர்ணாசிரமம், உலகத் தோற்றம், படைப்பு பற்றிப் பேசும் தத்துவ நூல்.  மாணவர்களில் அறிவு வளர்ச்சிக்கு கீதை எந்த அளவில் பயன்படும் என்று தெரியவில்லை. ஒரு நூலைப் பாடமாக […]

மேலும்....