தாயினும் சாலச் சிறந்த தமிழ்நாடு முதல்வர் மாண்புமிகு மு.க. ஸ்டாலின்! – மஞ்சை வசந்தன்

தாய்ப்பாசத்திற்கு இணையில்லை என்பர். ஆனால், அதையும் விஞ்சி நிற்கிறது தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தமிழ்நாட்டு மக்கள்மீது கொண்டுள்ள பாசம், பற்று, அக்கறை! இது இயற்கையாய் வந்த உணர்வு. கலைஞர் குருதியில் பிறந்தவர் என்பதால், அவருக்கு இருந்த அந்த உணர்வுகள் பன்மடங்காய்ப் பெருகி, இவருக்குள் எழுச்சி கொண்டு வெளிப்படுகிறது; வினையாற்றுகிறது. இப்படிக் கூறுவது மிகையல்ல, இம்மி அளவு கூட மிகைப்படுத்தப்படாத அப்பட்டமான உண்மை. விருப்பு, வெறுப்பு இன்றி, முதல்வராய் அவர் பொறுப்பேற்ற நாள் முதல் அவரின் செயல்பாடுகளைப் […]

மேலும்....

இளைய சமுதாயமே!எச்சரிக்கை! விழிப்போடு இரு!! – மஞ்சை வசந்தன்

இளைய சமுதாயம்தான் எதிர்கால உலகைக் கட்டமைத்து அடுத்தத் தலைமுறைக்குக் கொடுக்கும் பொறுப்புடையது. இளைய சமுதாயம் என்பதில் ஆண், பெண், கற்றவர்கள், கல்லாதவர்கள் எல்லாம் அடக்கம். நூறு ஆண்டுகளுக்குமுன் 30 வயது வரையில் கூட ஏதும் அறியாதவர்களாக வாழ்ந்தனர். தீய, கெட்ட வழக்கங்கள் அப்போது அதிகம் இல்லை. பெற்றோர், ஆசிரியர்கள், பெரியவர்கள் கூறுவதை ஏற்று நடந்தனர். பாலுறவு, போதை, களவு, பொய், ஏமாற்று என்று அதிகம் இல்லாமல் அப்போதைய இளைய சமுதாயம் இருந்தது. 50 ஆண்டுகளுக்கு முன் கல்வி, […]

மேலும்....

ஆரிய ஊடுருவலை அகற்றி தமிழ்ப் புத்தாண்டு, பொங்கல் விழாக்களைக் கொண்டாடுவோம்!

மஞ்சை வசந்தன் தமிழரின் பண்பாட்டுச் சிறப்புகளை அழிப்பதிலும் திரிப்பதிலும் ஆரியர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். அவ்வகையில் தமிழ்ப் புத்தாண்டு தை முதல் நாள் என்பதை மாற்றி, சித்திரை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு என்று திரித்து, சமஸ்கிருதப் பெயரைத் தமிழ் ஆண்டின் பெயர் என்று திணித்து, தமிழர் பண்பாட்டை அழித்தனர். நன்றியின்பாற்பட்ட பொங்கல் விழாக்களை புராணக் கதைகள் மூலம் மகரசங்கராந்தி போகி என்று மாற்றியும், திரித்தும் மூட விழாக்களாக்க முயற்சி செய்கின்றனர். தமிழ்ப் புத்தாண்டை மாற்றிய மோசடி […]

மேலும்....

தமிழ்ப் பெயர் சூட்டுவோம்! தமிழர் என்று காட்டுவோம்!

— மஞ்சை வசந்தன் — அண்மைக் காலமாக தமிழர் வீடுகளில் பிள்ளைகளுக்குப் பிற மொழிகளில் பெயர் சூட்டப்படுவது மிகவும் வேதனைதரத்தக்கதாய் உள்ளது. குறிப்பாக கடந்த 30 ஆண்டுகளாக இப்போக்கு மிக மிகப் பண்பாட்டுச் சீரழிவை ஏற்படுத்தி வருகிறது. எனவே, இது குறித்து மிகக் கவலையோடும், பொறுப்புணர்ச்சியோடும், தமிழர் நலன் சார்ந்த அமைப்புகள், இயக்கங்கள், அரசியல் கட்சிகள் சிந்தித்து உடனடியாகத் தீர்வு காணவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. உயர்ஜாதிக்காரர்களுக்கு உயர்வான பெயர்களையும் சூத்திரனுக்கு இழிவான பெயர்களையும் இடவேண்டும் என்று சாஸ்திரங்கள் […]

மேலும்....

ஒப்புவமை அற்ற சுயசிந்தனையாளர் பெரியார்!

– மஞ்சை வசந்தன் உலக அளவில் புகழ் பெற்ற சுயசிந்தனையாளர்களுள் தலைசிறந்தவர் தந்தை பெரியார். கல்வி நிலையங்களில் அதிகம் படிக்காதவர். ஆனால், தன் முயற்சியால் அதிகம் படித்தவர். அவர் படித்து அறிந்தவற்றைவிட பகுத்தறிந்தவையே அதிகம்! அவர் எதையும் ஏன்? எப்படி? எதற்காக? என்று சிந்திக்கத் தவறியதில்லை. சிந்தித்து சரியென்று கொள்ளாதவற்றைப் பின்பற்றியதும் இல்லை. அவரது குடும்பச் சூழலே அவருக்கு பலவற்றைக் கற்பித்தன. அவரது வீட்டில் இடைவிடாது நடைபெற்ற சொற்பொழிவுகள், படையல்கள் அவருக்கு, புராண, இதிகாச, வைதீகச் சடங்குகள் […]

மேலும்....