சிறுகதை – நாக்கிழந்தார்

தர்மப் பிரபுவே! சாப்பிட்டு நாலு நாட்களாகின்றன; கண் பஞ்சடைந்தி ருக்கிறது, கைகால்கள் துவண்டு போகின்றன. காது அடைத்துக்கொண்டு போகிறது. மயக்கமாக இருக்கிறது. ஒரு கவளம் கிடைத்தால் உயிர் நிற்கும்.” பஞ்சையின் இப்பரிதாபக் குரலைக் கேட்க, அந்தத் தர்மப் பிரபுவுக்கு நேரம் உண்டா? அவருக்கு எவ்வளவோ ‘தொல்லை, எத்தனையோ அவசரமான ஜோலி. இந்தப் பிச்சைக் கிண்ணி, குறுக்கே நின்றால் அவர் தமது காரியத்தைக் கவனிக்காது இவனுக்கு உபசாரம் செய்யவா தங்குவார்! அதோ பாருங்கள். அவர் எவ்வளவு கவலையுடன் காரில் […]

மேலும்....

சிறுகதை – காடும் மதமும்

– ஆறு. கலைச்செல்வன் பகலவனைச் சந்தித்தான் அவனது நண்பன் கலைவேந்தன். இளைஞர்களான இருவரும் நெருங்கிய நண்பர்கள். கலைவேந்தன் கையில் நாளிதழ் ஒன்று இருந்தது. முகத்தில் சோகமும் வேதனையும் காணப்பட்டது. “நாளிதழில் என்ன முக்கிய செய்தி”, என்று கலைவேந்தனைப் பார்த்துக் கேட்டான் பகலவன். “கடவுள்களின் பெயரால் காடுகளை அழித்து சிலைகளையும், கோயில்களையும் கட்டி வருகிறார்கள். இப்படிக் காடுகளை அழித்ததோடு மட்டுமல்லாமல் அங்கு திருவிழா வேறு நடத்தப்போறாங்களாம். நாளிதழில் செய்தி வந்திருக்கு. இப்படிக் காடுகளை அழித்து, வனவிலங்குகளின் வாழ்வாதாரத்தையும் கேள்விக்குறியாக்கினால் […]

மேலும்....

சங்கிலிச்சாமி – கலைஞர் மு. கருணாநிதி

“சங்கிலியானந்த சாமிக்கு ஜே!’’ “சங்கிலியானந்த சாமிக்கு ஜே! ஜே! ஜே!’’ பக்தர்கள் குதித்தார்கள்; பரவசத்தால் நர்த்தனமாடினார்கள்; பரமானந்த கீதம் பாடினார்கள். “அஷ்டமா சித்துபுரி அய்யனே போற்றி! துஷ்டர் தம் துடுக்கடக்கும் தூயனே போற்றி! கஷ்டங்கள் தீர்த்திடும் எங்கள் கண்கண்ட தெய்வமே போற்றி| போற்றி!!’’ இந்தப் பாடலை சாமியாரின் சிஷ்யன், சம்பந்தம் உரக்கப் பாடினான். சம்பந்தத்தின் முக விகாரங்கள்… தானே வரவழைத்துக் கொண்ட அங்க சேஷ்டைகள்… போற்றிப் பாடலுக்கும் புது மெருகு கொடுத்துப் பக்தர் கூட்டத்தைப் புளகாங்கிதத்தில் ஆழ்த்தின. […]

மேலும்....

சிறுகதை – மருத்துவர் சித்ராதேவி

ஆறு.கலைச்செல்வன் “”அய்யா! எம் பொண்ணு சித்ராதேவி பனிரெண்டாவது பாஸ் பண்ணிட்டா. மேலே படிக்கணும்னு சொல்றா. என்னமோ நீட்டு, குட்டைன்னு ஏதோ பரீட்சை எழுதணுமாம். கொஞ்சம் பணம் தேவைப்படுதுங்க அய்யா!” பண்ணையார் ருவேங்கடத்திடம் பணிவோடு கேட்டார்  அவர் பண்ணையில் வேலை செய்யும் காத்தமுத்து. பண்ணையார் காத்தமுத்துவை ஏற இறங்கப் பார்த்தார். இடுப்பில் துண்டைக் கட்டிக் கொண்டு, கைகட்டி வணங்கி, பணிவோடு காத்தமுத்து கேட்பதைக் கவனித்தார். “காத்தமுத்து! உன் பொண்ணு பொறந்தது முதலே நீ பணம் கேட்டுக்கிட்டுத்தான் இருக்கே. நானும் […]

மேலும்....

கானல் நீர் – வேழவேந்தன்

கொஞ்சம் மூளியானாலும் சிலை கோயிலில் இருக்கக் கூடாதாம்! தாலியிழந்த நான் மூலையில் அடைந்து கிடக்க வேண்டுமாம்! என்ன நீதி இது? -அவள் அப்போது எனக்கு வயது எட்டு. அவனி எது என்று அறியாத சின்னஞ்சிறு சிறுமி நான்! சிட்டைப் போல் பறந்தேன். தென்றலைப் போல் திரிந்தேன். கால்களுக்கு விலங்கில்லை. சிரிப்பதற்குத் தடைபோடுவோர் இல்லை. கைகளில் புத்தகத்துடன் பள்ளி செல்வேன். அடுத்த வீட்டு அமுதன் உடன் வருவான். எதிர் வீட்டு எல்லப்பனை அழைத்துக் கொள்வோம். வழியில் எதிர்ப்படும் நாவல் […]

மேலும்....