விளையாட்டு வீராங்கனை ‘மேரி கோம்’

2023 மற்றவர்கள் ஜனவரி 16-31 ,2023

மேரி கோம் உலக மகளிர் குத்துச்
சண்டைப் போட்டியில் இந்தியாவின் சார்பில் (5)அய்ந்து தங்கப் பதக்கங்களை வென்ற முதல் பெண் வீராங்கனை ஆவார். 2012ஆம் ஆண்டு இலண்டனில் நடைபெற்ற கோடைகால கால்பந்து ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்ளத் தேர்வு செய்யப்பட்ட இந்தியாவின் ஒரே ஒரு வீராங்கனை ஆவார்.
மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த இவர் 2012ஆம் ஆண்டு இலண்டன் கோடை ஒலிம்பிக் போட்டியில் 51 கிலோ எடைப் பிரிவில் போட்டி
யிட்டு நிக்கோலோ ஆடம்ஸை தோற்கடித்து வெண்கலப் பதக்கத்தை வென்றார்.
ஒலிம்பிக் விளையாட்டு வரலாற்றில் பெண்கள் குத்துச்சண்டைப் பிரிவில் பதக்கம் வென்ற ஒரே இந்தியப் பெண் மேரி கோம் ஆவார்.
உலக சாம்பியன்ஷிப் போட்டியில் 2019ஆம் ஆண்டுவரை ஏழு பதக்கங்களை வென்றுள்ளார்.

2010இ-ல் ஆசிய விளையாட்டுப்போட்டியில் 51 கிலோ எடைப் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றார்.
2014 ஆம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டியில் 51 கிலோ எடைப் பிரிவில் தங்கம் வென்று சாதனை படைத்தார்.
2018ஆம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் பெண்களுக்கான
48 கிலோ பிரிவு குத்துச்சண்டை இறுதிப் போட்டியில் வடக்கு அயர்லாந்து வீராங்கனையான கிறிஸ்டினா ஓஹோராவைத் தோற்கடித்தார்.
மேரி கோம் பெற்ற விருதுகள்:
அர்ஜுனா விருது, 2006இல்
பத்மஸ்ரீ விருது (விளையாட்டுக்
காக), 2009ஆம் ஆண்டு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது ஆகியவை.