சுவடுகள்

2022 மற்றவர்கள் ஜூன் 16-30 2022

சமூக நீதிக் காவலர் வி.பி.சிங்
பிறந்த நாள் : 25.6.1931
விசுவநாத் பிரதாப் சிங் (வி.பி. சிங்) வெறும் 11 மாத காலமே பிரதமராக இருந்தவர். ஆனாலும், உண்மையான ஜனநாயகவாதியாக ஆட்சிப் பொறுப்பை நடத்திக் காட்டிய மன்னர் குடும்பத்தைச் சேர்ந்தவர் அவர். அவர் ஒரு சூத்திரத்தை, ஆட்சியின் இலக்கணத்தை உருவாக்கிக் கொடுத்தார். ”80 சதவிகித மக்களை ஜாதியின் பெயரால், சமூகத்தின் மய்ய நீரோட்டத்திலிருந்து ஒதுக்கி வைத்திருப்பதைவிட மிகப்பெரிய திறமைக்கு எதிரான ஒரு செயல் இருக்க முடியுமா?’’ என்ற வினாவை எழுப்பிய பெருமகன் அவர்.
‘இட ஒதுக்கீடு என்பது வேலை வாய்ப்பல்ல; அதிகாரப் பங்கீடு’ என்ற உரிமைக் குரலை முழக்கிய கொள்கையாளர். பிரதமர் பதவிதான் தனக்கு முக்கியம் என்று அந்தச் சமூகநீதி சரித்திரம் நினைத்திருந்தால், பா.ஜ.க.வுடன் சமரசமாகப் போயிருக்கலாம்.
பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு வேலை வாய்ப்பில் 27 விழுக்காடு இட ஒதுக்கீடு அளித்த ஒரே காரணத்தால், பாரதீய ஜனதா தன் ஆதரவை விலக்கி, தன் முகவரியைக் காட்டிக் கொண்டது. திராவிட இயக்கப் பாரம்பரியம் என்று தங்களைச் சொல்லிக் கொள்ளும் அ.தி.மு.க. உள்பட பா.ஜ.க., காங்கிரசோடு சேர்ந்துகொண்டு வி.பி. சிங் ஆட்சியைக் கவிழ்த்தது. (விதிவிலக்கு, காங்கிரஸ் கூட்டணியில் இருந்த ஏ.கே.ஏ.அப்துல்சமது என்னும் பெருமகனார்)
அப்போதுகூட, “சமூகநீதிக்காக நூறு பிரதமர் நாற்காலிகளை இழக்கத் தயார்!’’ என்று சங்கநாதம் செய்தாரே, அவர் அல்லவோ மனிதகுல மாமனிதர்!
திராவிடர் கழகத் தோழர்களிடத்திலும், தலைவரிடத்திலும் அவர் வைத்திருந்த அன்புக்கு ஈடுஇணை எதுவும் கிடையாது. ‘வீரமணியைப் பார்க்கும் பொழுதெல்லாம் சமூகநீதி உணர்வைப் பெறுகிறேன்’ என்று நெகிழ்ச்சி ததும்பக் கூறிய அந்தச் சொற்களை இன்று நினைத்தாலும் நம் கண்களில் நீர் கசியச் செய்யும். ஈழத்திலே, ராஜீவ் அனுப்பிய இந்திய ராணுவம், பல்லாயிரம் தமிழர்களைக் கொன்று குவித்தது. அந்த ராணுவத்தை மீண்டும் இந்தியாவுக்குத் திருப்பி அழைத்த பெருமை, அப்போது பிரதமராக இருந்த வி.பி.சிங்குக்குத்தான் உண்டு. விடுதலைப் புலிகள் இயக்கத்தைப் பயங்கரவாத அமைப்பாக நீங்கள் கருதவில்லையா என்று செய்தியாளர்கள் கேட்டபோது, ‘எந்த ஓர் இயக்கத்துக்கும் முத்திரை குத்தக்கூடிய ரப்பர் ஸ்டாம்ப் எனது சட்டைப் பையில் இல்லை’ என்று பதிலடி தந்தார்.
வாழ்க வி.பி.சிங்!

தமிழறிஞர் மு.சி.பூரணலிங்கனார்
மறைவு: 16.6.1947

திருநெல்வேலிக்கு அருகே உள்ள முந்நீர்பள்ளம் என்னும் கிராமத்தில் சிவசுப்பிரமணியம் – வள்ளியம்மை தம்பதியினருக்கு 1866, மே மாதம் 24ஆம் தேதி பூர்ணலிங்கம் பிறந்தார்.
பட்ட மேற்படிப்புக்காக சென்னை கிறித்துவக் கல்லூரியில் சேர்ந்தார். அதை கிறித்துவக் கல்லூரியில் பணியாற்றியபோது, ‘ஞானபோதினி’ என்னும் அறிவியல் இதழ் ஒன்றை நடத்தினார். இது தவிர, நீதிக்கட்சி நடத்திய ‘ஜஸ்டிஸ்’ எனும் ஆங்கிலப் பத்திரிகையிலும் ‘ஆந்திரப் பிரகாசிகா’ என்னும் தெலுங்குப் பத்திரிகையிலும் பொறுப்பாசிரியராகப் பணியாற்றியுள்ளார். தமிழ் இலக்கியத்தைப் பற்றி விரிவாக ‘றிக்ஷீவீனீமீக்ஷீ ஷீயீ ஜிணீனீவீறீ லிவீtமீக்ஷீணீtuக்ஷீமீ’ என்ற தலைப்பில் 1904இல் பூர்ணலிங்கம் எழுதிய புத்தகம்தான் அவரது முதல் நூல். ‘பத்துத் தமிழ் முனிவர்கள்’, ‘இராவணப் பெரியோன்’, ‘சூரபதுமன் வரலாறு’ உள்ளிட்ட முக்கியமான நூல்களை எழுதியிருக்கிறார். ஆங்கிலத்தில் 32 நூல்களும் தமிழில் 18 நூல்களும் மற்றும் சட்ட நூல்களும் எழுதியுள்ளார்.
‘தமிழ் செம்மொழியே’ என்கிற தலைப்பில் சென்னைப் பல்கலைக்கழகத்தில் பூர்ணலிங்கம் உரையாற்றினார். தமிழ் இலக்கிய வரலாற்றை முதன்முதலில் ஆங்கிலத்தில் எழுதியவர் பூர்ணலிங்கம்தான். இந்த நூல்தான் இன்றுவரை தமிழ் ஆய்வுலகத்துக்கு ஆதார நூலாக விளங்கிவருகிறது. இந்திய வரலாற்றையும் தமிழ்நாட்டு வரலாற்றையும் பண்பாட்டையும் இணைத்து பூர்ணலிங்கம் எழுதிய ‘ஜிணீனீவீறீ மிஸீபீவீணீ’ எனும் ஆங்கில நூல் 1927இல் வெளியானபோது, அறிஞர்களின் மத்தியில் பரபரப்பாகப் பேசப்பட்டது. இந்த நூலில் தமிழ் மொழியின் தொன்மையையும் தமிழரின் உயர்ந்த சிந்தனைகளையும் பண்பாட்டையும் வரலாற்று ஆதாரங்களோடு சுட்டிக்காட்டியுள்ளார். திராவிட நாகரிகமே இந்தியா முழுவதும் பரந்து விளங்கியது என்று இந்நூல் கூறியிருக்கிறது.
1938-39ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் பெரியார், அண்ணா, மறைமலை அடிகள், சோமசுந்தர பாரதியார், தெ.பொ.வேதாசலம், அழகிரிசாமி, கி.ஆ.பெ. விசுவநாதம், ஈழத்து சிவானந்த அடிகள் போன்றோ ரோடு பூர்ணலிங்கமும் தீவிரம் காட்டினார். நாம் மறந்துவிடக் கூடாத முக்கியமான தமிழ் ஆளுமை களுள் ஒருவர்.ஸீ