நாளும் செய்தியும் : ஒரு வரிச்செய்தி

மே 1-15,2022

12.4.2022 முதல் 26.4.2022 வரை

12.4.22                –              பாக். புதிய பிரதமராக ஷாபாஸ் ஷெரீஃப் தேர்வு

12.4.22 –              எரிசக்தி, பருவநிலை தர வரிசையில் தமிழ்நாடு முதலிடம்.

12.4.22 –              மத்திய பல்கலை. பொது நுழைவுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும்  சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்.

12.4.22 –              ராமநவமி ஊர்வலத்தில் வன்முறை: ம.பி.யில் 77 பேர் கைது.

13.4.22 –              ‘சமபந்தி போஜனம்’ இனி ‘சமத்துவ விருந்து’ என அழைக்கப்படும்  கண்காணிப்புக் குழு கூட்டத்தில் முதல்வர்.

14.4.22 –              அம்பேத்கர் பிறந்த தினம் சமத்துவ நாளாகக் கொண்டாடப்படும்  முதலமைச்சர் அறிவிப்பு.

14.4.22 –              கேந்திரிய வித்யாலய பள்ளிகளில் எம்.பி.க்கள் பரிந்துரை ரத்து.

15.4.22 –              ஆளுநர் அளித்த தேநீர் விருந்தை தமிழ்நாடு அரசு, கூட்டணிக் கட்சிகள் புறக்கணிப்பு.

15.4.22 –              ‘நீட்’ தேர்வு தொடர்பான மசோதாவை குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு விரைவில் அனுப்ப வேண்டும்  முதலமைச்சர் ஆளுநருக்குக் கடிதம்.

15.4.22 –              உ.பி. முஸ்லிம் பெண்களை பலாத்காரம் செய்வதாக மிரட்டிய துறவி கைது.

16.4.22 –              காவியை அவமதித்தால் கடுமையான பின் விளைவுகள்: ஜேஎன்யூ மாணவர்களுக்கு ஹிந்து சேனை எச்சரிக்கை.

16.4.22 –              இலங்கை: ரேஷன் முறையில் பெட்ரோல் விற்பனை.

17.4.22 –              உ.பி.யில் 11 வயது சிறுமிக்குப் பாலியல் வன்கொடுமை. இருவருக்கு 21 ஆண்டுகள் சிறை.

17.4.22 –              மதுரை கள்ளழகர் ஆற்றில் இறங்கும் விழாவில் நெரிசலில் சிக்கி 2 பேர் பலி.

17.4.22 –              ராமேஸ்வரத்தில் 108அடி உயர ஹனுமன் சிலை அமைக்கப்படும் – மோடி தகவல்.

18.4.22 –              ஹனுமன் ஜெயந்தியை முன்னிட்டு டெல்லியில் நடந்த ஊர்வலத்தில் கல்வீச்சு, துப்பாக்கிச் சூடு.

18.4.22 –              எல்.அய்.சி.யில் 20% அந்நிய நேரடி முதலீட்டுக்கு சட்டத் திருத்தம் – மத்திய அரசு.

18.4.22 –              கருநாடகம்: ஹூப்ளியில் சமூக ஊடகப் பதிவால் வன்முறை.

18.4.22 – மோடியை அம்பேத்கருடன் ஒப்பிட்டு இளையராஜா பேச்சு.

19.4.22 –              யு.பி.எஸ்.சி. தலைவராக ஆர்.எஸ்.எஸ் தொடர்புடையவர் நியமனம் – ராகுல் காந்தி குற்றச்சாட்டு.

20.4.22                –              குற்றவியல் அடையாள நடைமுறை மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்.

20.4.22 –              இந்திய  வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் இணை பட்டங்களை வழங்கலாம் – யுஜிசி அனுமதி.

20.4.22 –              கிரிப்டோ கரன்சி பயன்பாட்டுக்கு சர்வதேச ஒழுங்குமுறைச் சட்டம் – நிர்மலா சீதாராமன்.

21.4.22                –              கவர்னரின் பாதுகாப்பு வாகனங்கள் மீது கற்கள், கொடிகள் வீசப்படவில்லை – முதலமைச்சர் விளக்கம்.

21.4.22                –              மக்கள் மனங்களில் பிரதமர் மோடி – கே.பாக்யராஜ்

22.4.22 –              தேசிய பங்குச் சந்தை முறைகேடு – சித்ரா ராமகிருஷ்ணா, ஆனந்த் சுப்பிரமணியனுக்கு எதிராக சி.பி.அய். குற்றப் பத்திரிகை தாக்கல்.

22.4.22 –              தேர்தல் நன்கொடை மூலம் பாஜக பெற்ற தொகை ரூ.212 கோடி.

23.4.22 –              பாகிஸ்தானில் மேற்கொள்ளும் உயர்கல்வி செல்லாது: யுஜிசி

23.4.22 –              நிதிஆயோக் துணைத் தலைவர் ராஜீவ்குமார் ராஜிநாமா.

23.4.22 –              ஆண்டுக்கு 6 கிராம சபைக் கூட்டம் – முதலமைச்சர் அறிவிப்பு.

24.4.22 –              ஸ்ரீவிஜயேந்திரரை விமர்சித்த நபரை கைது செய்ய வேண்டும் – பிராமண ஸமாஜம் வேண்டுகோள்.

24.4.22 –              முதலமைச்சர் ஸ்டாலினை மனதாரப் பாராட்டுகிறேன் – உச்சநீதிமன்ற நீதிபதி என்.வி.ரமணா பெருமிதம்.

24.4.22 –              மத உணர்வைத் தூண்டும் வகையில் பேசியதாக புகார்  இந்து மகா சபா மாநில தலைவர் கைது.

25.4.22 –              முஸ்லிம் அரசுகளின் எழுச்சி பற்றிய பாடல்களை நீக்கியது சிபிஎஸ்இ.

25.4.22 –              பிரிவினைவாத சதிக்கு தமிழர்கள் பலியாகக் கூடாது  முதலமைச்சர்.

25.4.22 –              143 பொருள்களுக்கான ஜிஎஸ்டி வரி உயர்கிறது  மாநில அரசுகளிடம் கருத்துக் கேட்பு.

25.4.22 –              நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையான மசோதாக்கள் விவாதிக்கப்படாமலேயே நிறைவேற்றம் – பினோய் விஸ்வம் எம்.பி. புகார்.

26.4.22 –              தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்க அதிகாரம் சட்டப்பேரவையில் மசோதா நிறைவேறியது. அதிமுக வெளிநடப்பு.

26.4.22 –              இமாச்சலில் பொது சிவில் சட்டம் – முதல்வர் ஜெய்ராம் அறிவிப்பு.

26.4.22 –              ராணுவத்துக்கு அதிகம் செலவிடும் நாடுகளில் 3ஆவது இடத்தில் இந்தியா.

26.4.22 –              உலகின் பணக்காரர்கள் பட்டியலில் 5ஆம் இடத்தில் கவுதம் அதானி.ஸீ

 தொகுப்பு: சந்தோஷ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *