உணவே மருந்து : ஆக்சிஜன் அளவை அதிகரிக்கும் உணவுகள்

பிப்ரவரி 16-28,2022

மனிதர்களின் சுவாசத்திற்கு ‘உயிர்வளி’ என்னும் ஆக்சிஜன் மிக முக்கியமான ஒன்று. கரோனா இரண்டாம் அலையின்போது மருத்துவமனைகளில் ஆக்சிஜன் சிலிண்டர் கிடைக்காமல் தொற்றால் பாதிக்கப்பட்ட நிறைய மனிதர்கள் இறந்தனர். அதன் பின் ‘ஆக்சிஜன்’ அளவு என்பது நமது உடலில் அன்றாடம் கண்காணிக்க வேண்டிய நடைமுறையாகத் தொடர்கிறது. இயற்கையாய் நாம் உண்ணும் உணவில் நமக்குத் தேவையான ஆக்சிஜனை எளிதில் பெறலாம். அதற்கான உணவுகளைப் பார்ப்போம்.

எலுமிச்சை

ஒருவரது உடலில் ஆக்சிஜன் போதுமான அளவு இருந்தால், உடல் புத்துணர்ச்சியுடனும், ஆரோக்கியத்துடனும் இருப்பது போன்ற உணர்வைப் பெறுவோம். எலுமிச்சையை அன்றாடம் அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால், உடலில் ஆக்சிஜன் அளவு சிறப்பாக இருக்கும்.

திராட்சை, பேரிக்காய், உலர் திராட்சை, அன்னாசி, ஆப்பிள்

இந்தப் பழங்களிலும் ஆக்சிஜன் அதிகம் உள்ளது. இந்த உணவுகளில் உள்ள பிஎச் (pH) அளவு 8.5 ஆகும். இந்தப் பழங்களில் வைட்டமின் சி, ஏ மற்றும் பி.யுடன் ஆன்டிஆக்சிடன்ட்டுகளும் உள்ளன. இந்த உணவுகள் இரத்தத்தைச் சீராக வைத்து, இரத்த அழுத்தத்தைக் குறைக்கவும், இதய நோயின் அபாயத்தைக் குறைக்கவும் உதவும்.

மாம்பழம், பார்லி, பப்பாளி, தர்பூசணி, சாத்துக்குடி

இந்த உணவுகளும் உடலில் ஆக்சிஜன் அளவை அதிகரிக்கும். இந்த வகை உணவுகளில் பிஎச் (pH) அளவானது 8.5 உள்ளது. இது சிறுநீரகங்களை சுத்தம் செய்ய உதவியாக இருக்கும். இந்தப் பழங்களில் உள்ள வைட்டமின்கள் அதிகமாக உள்ளன. பப்பாளி குடலைச் சுத்தம் செய்து, குடலியக்கத்தை சிறப்பாக வைத்துக் கொள்ளும்.

குடைமிளகாய்

இதில் பிஎச் (pH) அளவு 8.5 உள்ளது. இதில் எண்டோக்ரைன் மண்டலத்திற்குத் தேவையான நொதிகள் மிகுந்த அளவில் உள்ளது. குடைமிளகாயில் வைட்டமின் ஏ மற்றும் ஃப்ரீராடிக்கல்களை எதிர்த்துப் போராடத் தேவையானவை அதிகம் உள்ளது. அதோடு  ஆன்டிபாக்டீரியல் பண்புகளும் அதிகம் உள்ளது.

கடல் உணவுகள் மற்றும் இறைச்சி

இறைச்சிகளில் புரோட்டீன், குறிப்பிட்ட ‘பி’ வைட்டமின்கள், இரும்புச் சத்து போன்றவை அதிகம் உள்ளன. மீன்களில் சூரை, சால்மன் போன்றவற்றில் இரும்புச்சத்தை விட புரோட்டீன் அதிகம் உள்ளது. கோழிக்கறி மற்றும் முட்டையில் இந்த இரண்டு சத்துகளும் மிதமான அளவில் உள்ளன. ஆகவே, இந்த உணவுகளை அடிக்கடி சாப்பிட்டு, உங்கள் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள்.

தானியங்கள்

தானியங்களில் புரோட்டீன், பல்வேறு ‘பி’ வைட்டமின்கள் மற்றும் இரும்புச்சத்து போன்ற இரத்தத்தில் ஆக்சிஜன் அளவை மேம்படுத்தும் சத்துகள் உள்ளன.

பருப்பு வகைகள்

ஆக்சிஜன் நிறைந்த உணவுகளுள் ஒன்று பருப்பு ஆகும். பருப்பு வகைகளான பட்டாணி, உலர்ந்த பீன்ஸ், சோயா பீன்ஸ் போன்றவை உடலில் ஆக்சிஜன் செயல்பாட்டிற்கு உதவும். மேலும் பருப்பு வகைகளில் அன்றாடம் தேவையான புரோட்டீன்கள், பல்வேறு ‘பி’ வைட்டமின்கள் மற்றும் இரும்புச்சத்து போன்றவை அடங்கியுள்ளன.

பழங்களுள் அவகேடோ, பெர்ரிப் பழங்கள், கேரட், கனிந்த வாழைப்பழம், செலரி, பூண்டு, பேரீச்சம் பழம் போன்றவற்றில் ஆக்சிஜன் அதிகம் உள்ளது. இந்தப் பழங்களில் ஆன்டிஆக்சிடன்ட் அதிகம் உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *