குறைந்து வரும் மத நம்பிக்கை

டிசம்பர் 16-31

கிறித்துவ மத நம்பிக்கை அடிப் படையிலான அய்ரோப்பிய நாடு களில், அண்மைக் காலமாக மத நம் பிக்கை இல்லாதவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன. சர்ச்சுகளில் கூட்டம் குறைவா கவே உள்ளது என்றும், பல சர்ச்சுகள் விற்பனைக்கே வந்துவிட்டன என்றும் கடந்த ஆண்டில் செய்திகள் வெளியாயின.

அமெரிக் காவின் சமூகவியல் ஆராய்ச்சி மாணவர்கள் எடுத்த ஓர் ஆய்வில், இன்னும் சில ஆண்டுகளில் ஆஸ்திரேலியா, ஆஸ்திரியா, கனடா, செக் குடியரசு, ஃபின்லாந்து, அயர்லாந்து, நெதர்லாந்து, நியூசிலாந்து, சுவிட்சர்லாந்து  ஆகிய ஒன்பது நாடுகளில் மதங்கள் அடியோடு அழிந்து போகும் என்று தெரிவித்திருந்தனர். இப்போது அறிவுத் தளங்களிலும் மத நம்பிக்கையற்றவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்ற தகவல் வந்துள்ளது. இங்கிலாந்தில் உள்ள பி.பி.சி. (British Broadcasting Corporation) அண்மையில் அக வேற்றுமை ஆய்வு எடுத்துள்ளது. அதில் அங்கு பணிபுரிபவர்களின் மன உணர்வுகள் குறித்து கேள்விகள் கேட்கப்பட்டனவாம். அதில் அவர்களது மத நம்பிக்கை குறித்த கேள்வியும் ஒன்று. இதற்கு 22.5 விழுக்காட்டினர் தங்களை கிறித்துவ மத நம்பிக்கையாளர்கள் என்று கூறியுள்ளனர். இதைவிட அதிகமான விழுக்காட்டினர் தாங்கள் மத நம்பிக்கையற் றவர்கள் என்று தெரிவித்துள்ளனர். அதாவது 23.5 விழுக்காட் டினர் தம்மை நாத்திகர்கள் அல்லது எந்த மதத்தையும் சாராதவர்கள் என்று கூறியுள்ளனராம்.

இங்கிலாந்திலிருந்து வெளியாகும் டெய்லி மெயில் செய்தி இணையதளம் இத்தகவலைத் தந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *