திருவாரூர் – தீ பரவட்டும்

ஜனவரி 01-15

– கலி.பூங்குன்றன்

திருவாரூர் நகரம் எத்தனை எத்தனையோ மாநாடுகளை நடத்தியுள்ளது. ஒவ்வொன்றும் ஒரு வகையில் முக்கியத்துவ முத்திரை பெற்றதுண்டு. அந்த வகையில் கடந்த 17ஆம்  தேதி (17.12.2016) திராவிடர் மகளிர் எழுச்சி மாநாடு நடைபெற்றது.

வெறும் மாநாடு மட்டுமல்ல; பேரணியோடு கூடிய மாநாடு அது. மாநாடு என்றால் ஆண்களும், பெண்களும் கலந்தே இருப்பார்கள்.

ஆனால் மகளிர் எழுச்சி மாநாடு என்ற பெயருக்கேற்ப பெண்கள் பேராதிக்கமாகக் கிளர்ந்து எழுந்தனர். 75 விழுக்காடு

பெண்களே – குடும்பம், குடும்பமாக அணி வகுத்தனர். பெரியார் பிஞ்சுகளின் கைகளில் எல்லாம் கழகக் கொடிகள்! கொடிகள்!! கொள்கை முழக்கங்கள்! முழக்கங்கள்!!

மாநாட்டு மேடையில் கலை நிகழ்ச்சிகள், கருத்தரங்கம் என களைகட்டின. மாநாட்டின் முத்தாய்ப்பாக திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்களின் நிறைவுரை அமைந்தது.

மாநாட்டின் எல்லா வகைக் கட்டுமான பணிகளையும், நிர்மாணித்தவர்கள் பெண்களே! பெண்களே!! இது திராவிடர் கழக மகளிரணியினருக்கு, பாசறை சகோதரிகளுக்கே உரித்தான தனித்தன்மை என்பதை நிரூபித்து விட்டனர்.

மாநாட்டில் மிகப் பெரிய உச்சம் என்பது அதில் நிறைவேற்றப்பட்ட 36 தீர்மானங்களாகும். கழகத் தலைவர்தம் அறிக்கையில் (25.12.2016) குறிப்பிட்டது போல மிகப் பெரிய பிரகடனமாகும். (மாக்னகார்ட்டா).

பெண்ணுரிமை என்று சொல்லுகிறபோது தந்தை பெரியார் சிந்தித்த அளவுக்கு இன்னொருவரை சுட்டிக்காட்டுவது இயலாத ஒன்றே! “பெண் ஏன் அடிமையானாள்?” என்ற நூலைப் படிக்கும் எவரும் -அவ்வளவு எளிதில் ஜீரணிக்க முடியாது.

திருவள்ளுவரைகூட அதில் அவர் விட்டு வைத்ததில்லை.

“தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழு தெழுவாள்

பெய்யெனப் பெய்யும்மழை”

என்ற குறளைப் பற்றிக் கூறும் பொழுது – அது என்ன கணவனைத் தொழுதெழுதல் என்ற வினாவை தவத்திரு. குன்றக்குடி அடிகளார் அவர்களிடமே விவாதித்ததுண்டு.

பெண்களுக்கு எத்தகைய உரிமை தேவை என்று கேட்ட பொழுது – ‘அதிகம் தேவையில்லை; ஆண்களுக்கு என்னென்ன உரிமைகள் உண்டோ, அந்த உரிமைகள் அனைத்தும் பெண்களுக்குக் கிடைத்தால் போதும்’ என்று மிகவும் எளிதாகச் சொன்னார்கள்.

பெண்களுக்காக தந்தை பெரியார் பாடுபட்டதன் அருமையைப் புரிந்து உணர்ந்த காரணத்தால் பெண்கள் மாநாடு கூட்டி “பெரியார்’’ என்ற பட்டத்தை வழங்கிப் பெருமை பெற்றார்கள். (சென்னை 13.11.1938).

1971 ஜனவரியில் சேலத்தில் திராவிடர் கழகம் நடத்திய மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாட்டில் தந்தை பெரியார் பெண்ணுரிமை பற்றி நிறைவேற்றிய தீர்மானம் பூகம்பத்தை உருவாக்கியது.

ஒருவன் மனைவி மற்றவனை விரும்புவது என்பதைக் குற்றமாகக் கருதக் கூடாது என்கிற தீர்மானத்தின் உட்கருத்தைப் புரிந்துகொள்ளாமல் ஊளையிட்டனர். பார்ப்பன ஊடகங்கள் நான்கு கால் பாய்ச்சல் பாய்ந்தன.

அடுத்த மார்ச்சில் தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தல் நடக்கவிருந்த சூழ்நிலையில் தி.மு.க.வுக்கு எதிராகப் பெரும் புயலைக் கிளப்பினர்.

‘இந்து’ ஏட்டின்மீது கழகம் வழக்குத் தொடர்ந்தது; இறுதியில் ‘இந்து’ ஏடு நீதிமன்றத்தில் மன்னிப்புக் கோரியது.

பெரும் பகுதி ஆண்கள் பெண்ணுரிமை என்று வருகிறபோது தங்கள் மனைவிகளை நினைத்தே சிந்திக்கிறார்கள். அந்த அடிமைத்தனம் தங்களுக்கு “ஆகா எத்தகைய வசதி” என்று சுயநல வெறியில் மிதக்கிறார்கள்.

அந்த இடத்தில்தான் தந்தை பெரியார் ஒரு கருத்தைச் சொல்லி ஒவ்வொரு ஆணையும் சிலிர்க்க வைக்கிறார்.

“பெண்ணுரிமை என்கிறபோது, உங்கள் மனைவியை நினைத்துச் சிந்திக்காதீர்கள். உங்கள் அருமை மகளையும் சகோதரியையும் நினைத்துச் சிந்தியுங்கள்” என்று தந்தை பெரியார் சொன்னதில் உள்ள யதார்த்தத்தை நினைத்துப் பார்த்தால் அந்தக் கூற்றில் துள்ளும் மய்ய கருத்தின் ‘மகிமை’ புரியும்.

பெண்கள் என்று வரும்போது ஒட்டு மொத்த சமுதாயத்தோடு இணைத்துப் பார்க்கும் பார்வை பெரியார் அவர்களுடையது.

“பெண் அடிமை என்பது மனித சமூக அழிவு என்பதை நாம் நினைக்காததாலேயே வளர்ச்சி பெற வேண்டிய மனித சமூகம் பகுத்தறிவு இருந்தும், நாள்தோறும் தேய்ந்து கொண்டே வருகிறது” என்கிறார் (“குடிஅரசு” 16.6.1935).

திருவாரூர் திராவிடர் மகளிர் எழுச்சி மாநாட்டின் தீர்மானம் ஒவ்வொன்றும் ஆசாபாசமின்றித் தீர்மானிக்கப்பட்டவை; பெண்கள் பிரச்சினைமீது ஆழமாகச் சிந்திக்கப்பட்டு செதுக்கப்பட்டவையாகும்.

அய்யப்பன் கோயிலுக்கு குறிப்பிட்ட வயதுள்ள பெண்கள் செல்லக் கூடாது என்று மவுடிகத்தனமாக கோயில் நிருவாகம் கூக்குரல் போடுகிறது.

தி减O?耔ளி?瘢铮啴?16輯 தீ橊y?- 迚秷鄂u鐿?薮姽 饨嫭?篜傝鯔舳.

“ஆண்களைப் போலவே பெண்களுக்கு வழிபாடு மற்றும் அர்ச்சகர்கள் உரிமைக்கான சட்டம் கொண்டு வந்து செயல்படுத்த வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளை இம்மாநாடு வலியுறுத்துகிறது’’ – என்பதே அந்தத் தீர்மானம்.

அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை என்பதே இன்னும் செயல்பாட்டுக்கு வரவில்லை – அதற்குள் இந்தத் தீர்மானமா என்று சிலர் நெற்றியை மேலும் கீழும் ஏற்றி இறங்குவது நமக்குப் புரிகிறது.

இது ஒரு தொலைநோக்குத் தீர்மானம் – அதே நேரத்திலே பெண்களுக்கு அந்த வாய்ப்பு மறுக்கப்படுவது என்பதுசரிதானா? “ஆண்களுக்கு உரியது இது. பெண்களுக்கான இடமில்லை” என்ற மறுப்புத் தத்துவம் அதற்குள் குத்தி நிற்கிறதா இல்லையா?

தந்தை பெரியார் இறுதியாக அறிவித்த ஒரு போராட்டம் – அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமைப் பற்றியதாகும்.

முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் ஆட்சிக் காலத்தில் அதற்கான சட்டம் உருவாக்கப்பட்டது. அதனை எதிர்த்துப் பார்ப்பனர்கள் உச்சநீதி மன்றம் சென்ற நேரத்தில் முடக்கப்பட்டது. தொடர்ந்து திராவிடர் கழகம் போராடிக் கொண்டே இருந்தது.

தந்தை பெரியார் நூற்றாண்டையொட்டி அவரின் கடைசி எண்ணத்தை நிறைவேற்றும் வகையில் நீதிபதி மகராஜன் தலைமையில் அமைக்கப்பட்ட குழு அளித்த அறிக்கையில்  (1982) பெண்கள் அர்ச்சகராக எந்த ஆகமத்திலும் தடையில்லை; தற்போது தமிழ்நாட்டில் சில அம்பிகைக் கோயில்களில் பெண்களே பூசித்து வருகிறார்கள் என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதே!

மகாராட்டிரத்தில் 900 ஆண்டுகளுக்குப் பிறகு ருக்மணி அம்மன் கோயிலில் பெண்கள் அர்ச்சகர்களாக அனுமதி அளிக்கப்பட்டுள்ளனர் – உயர்நீதிமன்றம் அதனை அங்கீகரிக்கிறது.

பெண்கள் என்றாலே ஒரு நுகர்வுப் பொருள் என்ற கலாச்சாரம் என்பது தலை தூக்கி நிற்கிறது. நுகர்வுப் பொருள்களை வெகு மக்கள் மத்தியில் திணிப்பதற்கு பெண்களை விளம்பரக் கருவியாகக் கையாளுகிறார்கள்.

உலகில் உள்ள பெரும் முதலாளிகள், அழகுப் போட்டிகளை நடத்தி, அதில் உலக அழகி என்று தேர்வு செய்யப்பட்ட பெண்ணை தங்களின் உற்பத்திப் பொருளை விளம்பரம் செய்வதற்குப் பயன்படுத்துகிறார்கள் என்பதைக் கவனிக்க வேண்டும்.

குறிப்பிட்ட பெண்களைத் தேர்வு செய்து – அவர்களுக்கு முகவெட்டு – வசீகரமாக இருப்பதற்கு தேவையான அறுவை சிகிச்சைச் செய்யப்படுவதெல்லாம் இதன் பின்னணியில் இருக்கிறது என்பது பலருக்கும் தெரியாது.

சுஷ்மிதா சென்னும், அய்ஸ்வர்யாவும் அப்படித்தான் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். சுஷ்மிதா சென்னின் கையில் கொக்கோ கோலாவும், அய்ஸ்வர்யாராயின் கையில் பெப்சியும் கொடுத்து விளம்பரம் செய்ய வைக்கிறார்கள் என்கிற வியாபார ரகசியம் எத்தனைப் பேருக்குத் தெரியும்?

இந்த வெளிச்சத்தில் தான் திருவாரூர் திராவிடர் மகளிர் எழுச்சி மாநாடு பெண்கள் நுகர்வுப் பொருள்கள் அல்ல என்ற தலைப்பில் சிறப்பானதொரு தீர்மானத்தை நிறைவேற்றி யுள்ளது. (தீர்மானம் எண் 21)

பெண்களின் உடல் நலம் சார்ந்த ஒரு தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது.

“மார்பகப் புற்றுநோய் அதிகரித்து வரும் நிலையில், ஆரம்ப சுகாதார நிலையம் உட்பட அனைத்து சுகாதார நிலையங்களிலும், அதனைக் கண்டுபிடிக்கவும், பாதிக்கப்பட்டோருக்கு மருத்துவ உதவி செய்யவுமான வசதிகளைச் செய்து கொடுக்குமாறும் தமிழ்நாடு அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது’’ (தீர்மானம் எண் 31)

இன்றைய தினம் மகளிரை அச்சுறுத்தும் மிக முக்கியமான பிரச்சினை இது.

உலகெங்கும் பெண்களுக்கு ஏற்படும் புற்று நோய்களில் 10 விழுக்காடு மார்பகப் புற்று நோயே!

உலகில் ஆண்டுதோறும் 1.4 கோடி பெண்களும்’ இந்தியாவில் 1.15 லட்சம் பெண்களும் மார்பகப் புற்று நோயால் பாதிக்கப்படுகின்றனர். உலகளவில் 73 லட்சம் பேர்களும். இந்திய அளவில் 53 ஆயிரம் பேர்களும் மார்பகப் புற்று நோயினால் மரணிக்கின்றனர் என்பதைக் கணக்கில் கொண்டால், இந்தத் தீர்மானத்தின் அருமை எத்தகையது என்பது விளங்கும். பெரியார் அறக்கட்டளை சார்பில் புற்றுநோய் பரிசோதனைக்கான நிறுவனம் செயல்பட்டு வருகிறது என்பது  சுட்டிக் காட்டப்பட வேண்டிய ஒன்றே.

மாநாடு என்றால் போராட்ட அறிவிப்பு இல்லாமலா?

“பெண்களை இழிவுபடுத்தும் வேதம், ஸ்மிருதிகள், இதிகாசங்கள், புராணங்களைத் தடை செய்ய வேண்டும் என்று இம்மாநாடு மத்திய – மாநில அரசுகளை வலியுறுத்து கிறது. இது குறித்தவற்றைப் பாடத் திட்டங்களிலிருந்து அறவே நீக்கி வைக்க வேண்டும் என்றும் இம்மாநாடு வலியுறுத்துகிறது. இதற்கென வரும் ஆண்டில் மகளிரே முன்னின்று அத்தகைய பகுதிகளின் நகல்களை எரிக்கும் போராட்டத்தை அறிவிக்க கழகத் தலைவரை இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது” (தீர்மானம் எண் 17)

இதுகுறித்து மாநாட்டின் நிறைவுரையை வழங்கிய கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்கள் வரலாற்றுச் சிறப்பான அறிவிப்பினை வழங்கினார்.

மகளிரின் கோரிக்கை ஏற்கப்படும் என்று; அத்தகுப் போராட்டம் அன்னை மணியம்மையார் அவர்களின் பிறந்த நாளான மார்ச் 10ஆம் தேதி நடைபெறும். அப்பேராட்டம் தமிழ்நாடெங்கும் மகளிர் தலைமையிலேயே நடைபெறும் என்ற ஓர் அறிவிப்பினை தலைவர் அறிவித்த போது பெரும் வரவேற்பு இருந்ததைப் பலத்த கரவொலி மூலம் அறிய முடிந்தது.

வெறும் அறிவிப்போடு அவர் நிறுத்திக் கொள்ளவில்லை; அதற்கான ஆதாரத்தையும், காரணக்காரியத்தோடு விளக்கினார்.

“மாதர் ஆடவரிடத்தில் அழகையும், பருவத்தையும் விரும்பாமலே, ஆண் தன்மையை மாத்திரம் முக்கியமானதாக எண்ணி அவர்களைப் புணருகிறார்கள்”

(அத்தியாயம் 9 சுலோகம் 14)

“மாதர்களுக்கு இந்தச் சுபாவம் பிரமன் சிருஷ்டித்த போதேயுண்டானதென்றறிந்து ஆடவர்கள் அவர்கள் கேடுறாமல்  நடப்பதற்காக மேலான முயற்சி செய்ய வேண்டியது” (அத்தியாயம் 9 சுலோகம் 16)

“படுக்கை, ஆசனம், அலங்காரம், காமம், கோபம், பொய், துரோக சிந்தை இவற்றினை மாதர் பொருட்டே மனுவானவர் கற்பித்தார்” (அத்தியாயம் 9 சுலோகம் 17).

இவை மட்டுமல்ல; இன்னும் ஆபாசமாக – கேவலமாக சித்தரித்திருப்பதுதான் மனுதர்ம சாத்திரம் இதுதான் அர்த்தமுள்ள இந்து மதமா?

இந்தமனு தர்ம சாஸ்திரம் எத்தகையது தெரியுமா?

“மனு எதைச் சொன்னாரோ, அதுமருந்தாம்! பதினெட்டு ஸ்மிருதிகளுக்குள் மனுஸ்மிருதிக்கு விரோதமாய் மற்ற பதினேழு சாஸ்திரங்களும் ஒரே வாக்காய்க் சொல்லியிருந்தாலும் அது ஒப்புக் கொள்ளத்தக்கதன்று;  மனுஸ்மிருதிக்கு விரோதமான ஸ்மிருதி புகழடையாது’’ என்கிறது மனுதர்ம சாஸ்திரம். அப்படிப்பட்ட மனுதர்மம் தான் பெண்களை இவ்வளவுக்கேவலமாக சிறுமைப்படுத்தியுள்ளது – கொச்சைப்படுத்தியுள்ளது; ஆபாசச் சேற்றை பெண்மீது வாரி இறைக்கிறது.

கீதை என்று உலகம் பூராவும் தூக்கிச் சுமந்து பரப்புரை செய்கிறார்களே – இந்திய நாட்டு ஆட்சியாளர்கள்! ஜனாதிபதிகள், பிரதமர்கள் வெளிநாடு செல்லும் பொழுதெல்லாம் மறக்காமல் எடுத்துச் சென்று அந்நாட்டு அதிபர்களுக்கு பாரத நாட்டின் பண்பாட்டுப் பரிசு – பொக்கிஷம் என்று பெருமை பொங்கக் கொடுத்து மகிழ்கிறார்களே; அந்த கீதையின் யோக்கியதை என்ன?

“பெண்களும், வைஸ்யர்களும், சூத்திரர்-களும் பாவ யோனியிலிருந்து பிறந்தவர்கள்” (கீதை அத்தியாயம் 9 சுலோகம் 32)

இந்தக் கயமைகளைக் கொளுத்தாமல் இருந்தால் நாம் மனிதர்கள்தானா என்ற கேள்வி எழவில்லையா? கொளுத்தினால் தானே மனிதத் தன்மையும், சுயமரியாதையும், நமக்கு இருப்பதாகப் பொருள்.

அதனைத்தான் தமிழர் தலைவர் திருவாரூர் மாநாட்டில் அறிவித்தார்.

இதே மனுதர்ம சாத்திரத்தை முன்பும் ஒரு முறை (17.5.1981) எரித்தவர்கள் தாம் நாம்!

அப்பொழுதும் அனைத்து ஊர்களிலும் மகளிரே தலைமை தாங்கினர். இப்பொழுது அன்னை மணியம்மையார் பிறந்தநாளில், மார்ச் 10ஆம் தேதி நடக்க இருக்கும் – எரிப்புப் போரட்டத்திற்கும் அனைத்து மாவட்டங்களிலும் பெண்களே தலைமை வகிப்பார்கள்.

கிளர்ந்து எழுந்தது காண்

கிடைச் சிங்கம்

என்கிற அளவுக்குக் கிளர்ச்சிகளுக்கு

தயாராவோம்!  தயாராவோம்!!”

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *