செய்திக்கூடை

ஜூலை 01-15
  • மத்திய அமைச்சர்கள் தங்களது சொத்துக் கணக்குகளை  ஆகஸ்ட் 31க்குள் அளிக்கும்படி பிரதமர் மன்மோகன்சிங் உத்தரவிட்டுள்ளார்.
  • முல்லைப் பெரியாறு அணை கட்ட பயன்படுத்தப்பட்ட சுண்ணாம்பு, மணல் மாதிரிகளை, மத்திய மண்வள ஆராய்ச்சி நிலைய உத்தரவின்படி தமிழக அதிகாரிகள் சேகரித்து அனுப்பியுள்ளனர்.
  • இலங்கையிடமிருந்து கச்சத் தீவை மீட்க வேண்டும் என்ற தீர்மானம் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
  • வரி ஏய்ப்பு செய்வதை கிரிமினல் குற்றமாகக் கருதி வழக்குத் தொடரலாம் என்று கருப்புப் பணத் தடுப்புக்கான உயர்நிலைக் குழுவின் முதல் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
  • தனியார் பள்ளிகள் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தாலும், மறு உத்தரவு வரும்வரை நீதிபதி ரவிராஜ பாண்டியன் குழு நிர்ணயம் செய்த கட்டணத்தையே வசூலிக்க வேண்டும் என்று முதன்மைக் கல்வி அதிகாரி தெரிவித்துள்ளார்.
  • ஆதரவற்ற குழந்தைகளின் அப்பா பெயராக அலுவலக ஆவணங்களில் தனது பெயரைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி தாமாக முன்வந்து கருத்துத் தெரிவித்துள்ளா.
  • தேசிய கடல்வளத்துறை தொழில் நுட்பக் கழகம் சார்பில் நடத்தப்பட்ட தானியங்கி நீர்மூழ்கி வாகனம் வடிவமைக்கும் போட்டியில் மேற்கு வங்க கராக்பூரைச் சேர்ந்த இந்திய தொழில் நுட்பக் கல்லூரி மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.
  • காசநோயுடன் எயிட்சையும் சேர்த்துக் குணப்படுத்தும் டிரான்சிட்மைசின் என்ற புதிய மருந்தினை சென்னையில் உள்ள மத்திய காசநோய் ஆராய்ச்சி மய்யத்தினர் கண்டுபிடித்துள்ளனர்.
  • தொழிற்சாலைகள், உள்ளாட்சி அமைப்புகள் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திடம் அனுமதி பெற றிநீதீஷீணீநீ.ஸீ.ஸீவீநீ.வீஸீ என்ற இணையதள முகவரியில் விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்து அனுப்பலாம்.
  • இலங்கை அதிபர் மகிந்த ராஜபட்சேவை ஆஜராகும்படி அமெரிக்க நீதிமன்றம் ஒன்று சம்மன் அனுப்பியது. சம்மனை ஏற்கமுடியாது என்றும் அமெரிக்க நீதிமன்றம்முன் தான் ஆஜராக முடியாதென்றும் ராஜபட்சே அறிவித்துள்ளார்.
  • நீதிபதி ரவிராஜ பாண்டியன் ஆணையை ரத்து செய்ய வேண்டும் என்று தனியார் மெட்ரிக் பள்ளிகள் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
  • அய்க்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலராக பான்-_கீ_மூன் இரண்டாவது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
  • தமிழ்நாட்டில் பொறியியல் படிப்புக்கான பொதுச்சாளர முறை (கவுன்சிலிங்) விளையாட்டு வீரர்களுக்கு ஜூன் 30, தொழிற்கல்வி மாணவர்களுக்கு ஜூலை 1-_6, மாற்றுத் திறனாளிகளுக்கு ஜூலை 7, பொதுப்பிரிவு ஜூலை 8 ஆகிய தேதிகளில் சென்னையில் மட்டுமே நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *