தூர்தர்ஷன் துஷ்பிரயோக்

அக்டோபர் 16-31

மகாராஷ்டிர மாநிலம் நாகபுரியில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ். நிறுவப்பட்ட நாள் நிகழ்ச்சியில் அதன் தலைவர் மோகன் பாகவத் ஆற்றிய உரை அரசு ஒளிபரப்பு நிறுவனமான தூர்தர்சனில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதற்கு  நாடெங்கும் கண்டனங்கள் கிளம்பியுள்ளன. கண்டனம் தெரிவித்து டில்லி காங்கிரஸ் சார்பில் அக்டோபர் 5 அன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

மூன்று முறை தடை செய்யப்பட்ட ஆர்.எஸ்.எஸ். இன்றைய தலைவர் மோகன் பாகவத்தின் பேச்சு தூர்தர்ஷனில் நேரலை செய்யப்பட்டது நாட்டின் மதச் சார்பின்மை கொள்கையின்  அடிப்படையையே தகர்த்துள்ளது. நாடெங்கும் மதக் கலவரங்களைப் பரப்பி வரும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் நிகழ்ச்சி நாட்டில் முதல் முறையாக அரசுத் தொலைக்காட்சியில் நேரலை செய்யப்பட்டுள்ளது, அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது.

இதுபோன்று மதச்சார்பின்மைக் கோட்பாட்டைத் தகர்க்கும் மத்தியில் ஆளும பா.ஜ.க. அரசின் செயல்பாடுகளையும், தூர்தர்ஷனை ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் ஊதுகுழலாக மாற்ற முயற்சிப்பதையும் காங்கிரஸ் கட்சி பொறுத்துக் கொள்ளாது. என்றார் டில்லி காங்கிரஸ் தலைவர் அரவிந்தர் சிங். இடதுசாரிகள், முற்போக்காளர்கள், மதச்சார்பற்றோர் முன்னமே எதிர்பார்த்த மோடி அரசின் இந்தப் போக்கு மோடிக்கு வாக்களித்தவர்கள் மத்தியிலேயே வெறுப்பைத் தோற்றுவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *