புதிய கண்டுபிடிப்புகள்

பிப்ரவரி 16-28
  • பயோநெக்டார் எரிபொருளைப் பயன்படுத்தி புகையை வெளியிடாமல் ஆக்சிஜனை வெளியிடும் மெர்சிடிஸ் பென்ஸ் பயோம் என்ற புதிய வாகனம் தாயரிக்கப்பட உள்ளது.
  • தொழிற்சாலைகள் மற்றும் வாகனங்களில் இருந்து வெளியேறும் நச்சுத்தன்மை கொண்ட கரியமில வாயுவைக் கட்டுப்படுத்தி எரிபொருளைச் சேமிக்க ஹெர்பாலயாஸ் பியூல்கேர் சொல்யூசன் நிறுவனம் பியூல் பிளஸ், கியாஸ் பிளஸ் என்ற கருவிகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • எய்ட்ஸ் நோயினைத் தடுக்கும் துருவதா என்ற மாத்திரையை கலிபோர்னியா பல்கலைக்கழக மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
  • கால்களால் பெடல் செய்து சார்ஜ் செய்யும் மின்சாரக் காரினை, ஷாங்காய் ஜியாவோ டோங்க் பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர்.
  • ஹைட்ரஜனை அடிப்படையாகக் கொண்ட செயற்கைப் பெட்ரோலை இங்கிலாந்து நாட்டு விஞ்ஞானிகள் ஸ்டீபன் பென்னிங்டன் தலைமையில் கண்டுபிடித்துள்ளனர்.
  • சுற்றுச்சூழலுக்குத் தீங்கு விளைவிக்காத நவீன ஏர் கூலரை மதுரை கேந்திரிய வித்யாலயா பள்ளி மாணவி சத்யப்பிரியா உருவாக்கி, தேசிய விருதும் பெற்றுள்ளார்.
  • பள்ளிக் குழந்தைகளின் ஒவ்வொரு அசைவையும் குறுஞ் செய்திகளாக செல்பேசியில் பெற்றோருக்கு அனுப்பும் எஸ் க்யூப் எனும் மென்பொருளைக் கண்டுபிடித்துள்ளார் பிரசன்ன பாபு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *