பளீர்

பிப்ரவரி 16-28

சொர்க்கமும் நரகமும்

ஒரு சிலர் ராஜபோக வாழ்க்கை வாழ்வதற்காகவும், மிகப் பலரை அச்சுறுத்துவதற்காகவும், மதவாதிகளால் சொர்க்கம், நரகம் என்ற வார்த்தைகள் அறிமுகப்படுத்தப்பட்டன.  எல்லா மதத்தினரும், மனிதன் தானம்/புண்ணியம் செய்தால் இறந்தபிறகு சொர்க்கத்திற்குப் போவான் என்றும், பாவம் செய்தால் நரகத்திற்குப் போவான் என்றும் கூறுகின்றனர்.  எந்த மதவாதியும் இதுவரை யார் யார் எப்பொழுது சொர்க்கத்திற்கோ, நரகத்திற்கோ சென்று வந்தார்கள் என்ற விபரம் சொல்லவில்லை.  தற்பொழுது விஞ்ஞானிகள் அறிவுப் பூர்வமாக சூரியன், சந்திரன், புதன், வியாழன் போன்ற கிரகங்கள் பூமியிலிருந்து எவ்வளவு தொலைவில் அதாவது எவ்வளவு மைல்/கிலோமீட்டர் தூரத்தில் உள்ளன என்றும், அவைகளின் அளவு எவ்வளவு என்றும், ஒவ்வொன்றின் மண்வளம், வாயு, நீர்வளம், எப்படி உள்ளது, அவற்றில் மனிதன் குடியேற முடியுமா என்றும், ஆராய்ச்சி மூலமாகத் துல்லியமாக அறிவிக்கிறார்கள்.  அதேபோல் எந்த மதவாதியோ, மதநூல் அவதார புருஷர்களோ யாரும் சொர்க்கம் நரகம் பூமியிலிருந்து எத்தனை டிகிரியில் எவ்வளவு தூரத்தில் உள்ளது என்று உத்தேசமாகக்கூடக் கூறவில்லை.  எல்லா மதக்காரர்களும் சொர்க்கம் என்ற ஒன்று உள்ளதாகவும், நரகம் என்ற ஒன்று உள்ளதாகவும் கூறுகின்றனர்.  ஆனால், இந்து மத மூல நூலான மனுதர்ம சாஸ்திரத்தில் 4ஆவது அத்தியாயத்தில் 87ஆவது சுலோகத்தில் 21 நரகங்கள் இருப்பதாகவும் அவற்றின் பெயர்களை, சுலோகம் 88 முதல் 90 வரையுள்ளவைகளில் கூறியுள்ளது. ஆக இந்து மதக் கடவுள்கள், குறிப்பாக படைப்புக் கடவுளான பிரம்மா மனிதர்களைப் படைக்கும் பொழுதே நல்லவர்களையும், பாவிகளையும், முறையே 1:21 என்ற விகிதாச்சாரத்தில் (Ratio) படைத்திருப்பார் போலும்.  எனவேதான், மனு தர்ம சாஸ்திரத்தில் 21 நரகங்கள் என்று கூறப்பட்டுள்ளது.  இந்து என்று தன்னைக் கூறிக்கொள்ளும் ஒவ்வொரு மனிதனும், இதை நம்பித்தான் ஆகவேண்டும்.  இதை நம்பாதவன் மதவாதிகள் கூற்றுப்படி நாத்திகன்.

ஆர்.டி. மூர்த்தி,
திருச்சி – 17.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *