கொசுக்கள் ஏன் சிலரை மட்டும் அதிகமாகக் கடிக்கின்றன?

பிப்ரவரி 16-28

கொசுக்கள் எல்லோரையும் கடித்து இன்புறுகின்றன.  அவற்றில் சில அடிபட்டுத் துன்புறுகின்றன அல்லது ரத்தம் கசிந்து இறக்கின்றன.  ஒரே வீட்டில் இருப்பவர்களில் சிலர் நிறைய கடிபடுகிறார்கள், சிலர் தப்பித்துக் கொள்கிறார்கள். இந்தப் பாரபட்சத்தை ஆராய விஞ்ஞானிகள் தளைப்பட்டு இருக்கிறார்கள்.  அவர்களின் ஆராய்ச்சியின் முடிவு என்ன?

பூச்சிகளுக்கு நுகரும் தன்மை மிகச் சிறந்த அளவில் வளர்ந்திருக்கிறது.  அவை இத்திறமையை உபயோகித்து நெடுந்தூரம் தங்கள் இலக்கை நோக்கிப் பறந்து செல்லும் வல்லமை படைத்தவை.  தற்பொழுது இங்கிலாந்தில் ராத்தம்ச்ட் என்ற ஆராய்ச்சி நிறுவனத்தில் உள்ள விஞ்ஞானிகள் தேனீக்கள், கொசுக்கள் சிலரை மட்டும் ஏன் அதிகம் கடிக்கின்றன என்று ஆராய்ச்சி செய்திருக்கின்றனர்.

இந்த ஆராய்ச்சியில் மனித உடலிலிருந்து 300 லிருந்து 400 வகை ரசாயனப் புகை வெளிவருவதாகக் கண்டுபிடித்துள்ளனர்.  சில மானிடர்களின் உடல்களிலிருந்து வரும் ரசாயனப் புகைக் கூட்டு இந்தப் பூச்சிகளைக் கவருகின்றன, சிலருடைய புகைக்கூட்டு பூச்சிகளுக்கு விரும்பத்தக்கதாக இல்லை.  உதாரணமாக ரசாயனப் புகை என்பது கார்பன்-டை- ஆக்சைடும், லாக்டிக் அமிலமும் கலந்ததாகும். இன்னும் வேறு பொருள்களின் கலவையாகவும் இருக்கலாம்.

இந்த ஆராய்ச்சியில் ஈடுபட விரும்பிய மனிதர்களை இருவகையாகப் (கொசுக்கள் விரும்பும், விரும்பாத) பிரித்து, அவர்களை ஒருவித ஆராய்ச்சிப் பையில் இரண்டு மணிநேரம் கொசுக்களுடன் அடைத்து வைக்கிறார்கள்.  பிறகு குரோமோகிராம் என்ற ரசாயனக் கருவியை உபயோகப்படுத்தி அந்த ரசாயனப் பொருட்களைப் பிரிக்கிறார்கள். பிறகு கொசுக்களின் அலைவாங்கி (antenna)  நுண்ணிய மின்தொடர் இழைகள் (micro electrode)  பொருத்தி அந்த ஆராயப்பட்ட ரசாயனப் புகைகளிடம் உலவவிடுகின்றனர்.  அப்பொழுது கொசுக்களிடமிருந்து வெளிவரும் மின்துடிப்புகளை அளக்கிறார்கள்.  இந்த முறையில் டாக்டர் லோகனும், அவருடைய ஆராய்ச்சிக் குழுவினரும் ஏழு அல்லது எட்டு ரசாயனப் புகைகளைக் கண்டுபிடித்துள்ளனர்.

இந்த ரசாயனப் புகைகளைப் பலவிகிதத்தில் கலந்து கொசுக்களை அந்தக் கலவையில் பறக்க விடுகிறார்கள்.  அவை எந்தக் கலவையை விரும்புகின்றன அல்லது விரும்புவதில்லை என்று கண்டுபிடிக்கிறார்கள்.

இந்த ஆராய்ச்சி முடிவை உபயோகித்து, கொசுக்கடியைத் தடுக்க தோலில் பூசிக்கொள்ளும் மருந்து கண்டுபிடிக்கிறார்கள்.  தற்பொழுது DEET என்ற மருந்து உபயோகித்தால், சில வேண்டாத விளைவு உண்டாகும் சந்தர்ப்பம் இருப்பதால் இன்னும் வேறு மருந்துகள் தயாரிக்க ஆராய்ச்சிகள் நடந்துவருகின்றன.  ஆக ராத்தம்ச்ட் ஆராய்ச்சி நிறுவனத்திலிருந்து வேறு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு வெளிவர இருக்கின்றன.  பொறுத்திருப்போம்.  இப்பொழுது உங்கள் வீட்டில் யாருக்கு அதிகமான கொசுக்கடி கிடைக்கிறது என்று ஆராயுங்கள்.  கொசுக்கள் பெருகாதவாறு இருக்க அரசாங்கம் செய்யும் உபகரணங்களுக்குத் துணையாக இருங்கள்.

நன்றி:  Wallstreet Journal
September, 2010.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *