தொண்டறச் செம்மல் மணியம்மையார் ! – முனைவர் கடவூர் மணிமாறன்

பெரியாரின் அறிவியக்கத் தொண்டுக் கெல்லாம் பின்புலமாய் அடித்தளமாய்த் திகழ்ந்தார் அன்னை! அருங்கொள்கை உரம்பெற்றார்! தமக்குப் பின்னர் அய்யாவும் இவர்தலைமை முடிவைச் சொன்னார்! பெருமைமிகு பெற்றோரை இழந்தோர் தம்மைப் பேணிடவே நாகம்மை இல்லம் கண்டார்; விரிந்தமனம் கொண்டோராய் ஒடுக்கப் பட்டோர் விடுதலைக்குக் களம்நின்றே உழைக்க லானார்! மணியம்மை விளம்பரத்தை விரும்பார் வாழ்வில் மவுனத்தால் அவமானம் இகழ்ச்சி வென்றார் பிணிசூழ்ந்த சமுதாயக் கட்டு மானப் பின்னடைவை முறியடிக்கும் உறுதி பூண்டார்! துணிவோடு கேடுகளை, இழிவைச் சாடித் துணையான அய்யாவை உயிராய்க் […]

மேலும்....

பகுத்தறிவு ஒளி பரப்புவோம் ! – முனைவர் கடவூர் மணிமாறன்

பொய்யினை நம்ப வைப்பார்; புரட்டுகள் வேதம் என்பார்; மெய்யினை உணரா வண்ணம் மிரட்டியே மேலோர் கீழோர் உய்ந்திடக் கடவுள், தெய்வம் உயிரினைக் காக்கும் என்றே எய்திடும் கணைகள் தம்மால் இழிவுகள் சுமக்கச் செய்வார்! மருட்டியே மனுநூல் சொல்லும் மந்திரம் வெல்லும் என்பார்! சுருட்டியே பிழைப்போர் நம்மைச் சூத்திரன் என்றே மூட இருட்டினில் கிடத்தி மேன்மை ஏற்றமும் தடுப்பார்! பொல்லா உருட்டலால் பூதம் பேய்கள் உண்டென நாளும் ஏய்ப்பார்! ஆரிய நஞ்சால் நெஞ்சில் ஆரிருள் படரச் செய்தே வீரியம் […]

மேலும்....

அண்ணாவின் புகழ் வாழ்க!

– முனைவர் கடவூர் மணிமாறன் எண்ணத்தை எழுத்தாக்கிச் செயலில் காட்டி இன, மானத் திராவிடத்தின் புகழை நாட்டிக் கண்ணொத்த மாநிலத்தைத் தமிழ்நா டென்றே கருத்தியலால் மாற்றியவர்! காஞ்சி ஈன்ற அண்ணாவோ மாமேதை! பெரியார் தொண்டர்! அய்யாவின் பாசறையின் மறவர்! வேண்டும் கண்ணியத்தை, கடமையினை, கட்டுப் பாட்டைக் காத்திடவே உழைத்திட்ட அறிவுச் சொற்கோ! தென்னாட்டின் மாண்பினையே நாளும் காத்துத் திசைகாட்டும் கலங்கரையின் விளக்கம் ஆனார்! குன்றிலிட்ட விளக்கெனவே ஒளிர்ந்தார்! “காஞ்சி, குடிஅரசு, திராவிடநா டி”தழில் என்றும் பன்னரிய சிந்தனையை […]

மேலும்....

தமிழர் திருநாள்

முனைவர் கடவூர் மணிமாறன் தமிழர்தம் புத்தாண்டுத் தொடக்கம் ‘தை’யே! தமிழறிஞர் எல்லாரும் கருத்தால் ஒன்றி அமிழ்தனைய சிந்தனையைப் பகிர்ந்தார் அந்நாள்; அறுவடைநாள் பொங்கல்நாள் எல்லாம் சேர்ந்து திமிர்ந்தெழவே உழவரினம் உவகை பொங்கத் திரண்டுள்ள கதிர்விளைச்சல் கண்டு நெஞ்சில் அமிழ்தின்பம் ஊற்றெடுக்கும் இனிய நாளில் அகமகிழ்ந்து கொண்டாடி மகிழ்வோம் நாமே! சித்திரையைப் புத்தாண்டின் தொடக்கம் என்போர் சிறுமதியோர்! வரலாற்றை அறிந்து கொள்ளார்! எத்திக்கும் இந்நாளில் வாழு கின்ற எந்தமிழர் இக்குமுக அறத்தை வேட்பர்! முத்தனைய சமத்துவத்தை விழைவர்; என்றும் […]

மேலும்....

தமிழில் பெயர் சூட்டுவோம்!

— முனைவர் கடவூர் மணிமாறன் — தகைசான்ற புகழார்ந்த தமிழீர்! நந்தம் தன்மானம் இனமானம்  இனிதே காப்பீர்! நகைப்புக்கே இடமின்றி நமது மூச்சாம் நற்றமிழ்க்குக் கேடுசெய்யும் நாட்டம் வேண்டா! பகைவர்க்கே பாய்விரித்தல் தமிழர் பண்போ? பண்பாட்டை நாமிழத்தல் அறிவோ? சால்போ? வகைமறந்து நம்முடைய குழந்தைக் கெல்லாம் வண்டமிழில் பெயர்சூட்ட மறுத்தல் ஏனோ? கனியிருக்கக் காய்கவர்தல் நன்றோ சொல்வீர்! கசப்பினையே சுவைப்போரும் உளரோ? தேனாய் இனிக்கின்ற தமிழிருக்க நம்மைச் சாடும் இழிவான அயற்சொற்கள் ஏற்று நாமும் நனிபுகழைத் தொலைப்பதுவோ? […]

மேலும்....