உங்களுக்குத் தெரியுமா ?

“இந்தி பேசாத பகுதிகளில் வாழும் மக்கள் விரும்புகின்ற வரை ஆங்கில மொழியை அகற்றமாட்டேன்” என்று 1962இல் அனைத்து மொழி பத்திரிகைகள் வாயிலாக நேரு உறுதியளித்தார் என்பதும், ”இந்தி பேசாத மக்கள்மீது இந்தி திணிக்கப்பட்டால் இந்தியா பிளவுபட்டுப்போகும்” என்று லால் பகதூர் சாஸ்திரி 1962இல் ஆந்திராவில் காங்கிரஸ் மாநாட்டில் தெரிவித்தார் என்பதும் உங்களுக்குத் தெரியுமா?

மேலும்....

உங்களுக்குத் தெரியுமா ?

“அன்பும், கருணையும், ஒழுக்கமும் உள்ளது கடவுள்கள் என்று கூறிவிட்டு, அதற்கு முரணாய் கடவுள்கள் யுத்தம் செய்ததாயும், கோடிக்கணக்கான மக்களைக் கொன்று குவித்ததாயும், விபசாரம் செய்ததாயும் புராணம் எழுதிப் பரப்புவது அயோக்கியத் தனம் அல்லவா?” என்று பெரியார் கேட்டார் என்பது உங்களுக்குத் தெரியுமா ?

மேலும்....

உங்களுக்குத் தெரியுமா?

நான் குற்றச் செயல்கள் புரிந்தா சிறைக்குப் போனேன்? ஜாதியை ஒழிப்பதற்காகப் போராடினேன்! மறியல் செய்தேன்! சிறை சென்றேன். ஜாதிக்கு ஆதாரமான சட்டத்தை எரித்தேன்! இதற்காக எனக்கு மூன்றாண்டு சிறை! இதைவிட பெரும்பேறு உண்டா? என்று பெரியார் கேட்டார் என்பது உங்களுக்குத் தெரியுமா? (‘விடுதலை’- 9.11.1957)

மேலும்....

உங்களுக்குத் தெரியுமா ?

“தீக்குறளை சென்றோதோம்” என்ற ஆண்டாளின் திருப்பாவை பாட்டுக்கு_ “திருவள்ளுவரின் தீய திருக்குறளை ஓதமாட்டோம்” என்பதே அர்த்தம் என்று பேசியவர்தான் காஞ்சி சங்கராச்சாரியார் என்பது உங்களுக்குத் தெரியுமா?

மேலும்....