பெயரைக் கேட்டாலே அலறுகிறார்கள்!

வி.சி.வில்வம் பெரியார் என்றதும் நினைவிற்கு வருவது அவரது கொள்கைகளே! எப்படியான கொள்கைகளை அவர் உருவாக்கினார் என்றால், இறந்து 50 ஆண்டுகள் ஆன பிறகும் அவரை ஒரு சாரார் கடுமையாகத் திட்டும் அளவிற்குக் கொள்கைகளை உருவாக்கினார்! உலகில் எத்தனையோ பேர், எவ்வளவோ தத்துவங்களை உருவாக்கி இருக்கிறார்கள். அவை நடைமுறையில் இருக்கலாம், இல்லாமல் போகலாம். ஆனால், அந்தத் தத்துவங்களை உருவாக்கியவர்களை இறந்த பிறகு யாரும் திட்டுவது கிடையாது. சில ஆண்டுகளில் அந்த மனிதரையே மறந்துவிடுவார்கள். இதுதான் உலக வழக்கமாக இருக்கிறது! […]

மேலும்....

ஜாதியை ஒழித்துவிட்டீர்களா? – வி.சி.வில்வம்

ஜாதி ஒழியக் கூடாது என்பவர்களால் அடிக்கடி கேட்கப்படும் கேள்வி இது. ஜாதியால் எந்தப் பயனையும் அடைந்திருக்க மாட்டார்கள்? ஆனால், உணர்ச்சியால் உந்தப்பட்டு, சமூக அமைதிக்குக் கேடு செய்பவர்கள் இவர்கள். ஜாதிப் பெருமையை வாயளவில் பேசினாலும், வாழ்க்கை அளவில் அவர்களாலும் பின்பற்ற முடியாது! எங்கள் ஜாதி, எங்கள் குலப் பெருமை, எங்கள் ஜாதி ஊர்வலம், எங்கள் ஜாதி மாநாடுகள் எனப் பீற்றிக்கொள்ளும் இவர்கள், அனைத்து ஜாதியினர் உதவியின்றி உயிர் வாழ்ந்துவிட முடியுமா? “எங்கள் ஜாதி ஆள்கள் மட்டும் தனியாக […]

மேலும்....

நம்மை நமக்கு அடையாளம் தெரியவேண்டும்! 

வி.சி. வில்வம் “கோபத்தோடு எழுகிறவன் நட்டத்தோடு உட்காருவான்,” என்பது பொன்மொழி. “கோபம் என்பது தற்காலிக பைத்தியம்“, என்பதும் இன்னொரு பொன்மொழி! கோபத்தில் இருக்கும் போது, மனநிலை சரியில்லாதவர்கள் போல நடந்து கொள்வோம் என்பது இதற்குப் பொருள்! கோபத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஏராளமான பொன் மொழிகளும், எண்ணற்ற பழமொழிகளும் காணக் கிடைக்கின்றன. ஒரு மனிதர் திறமைக் குறைவாக கூட வாழ்ந்துவிடலாம். கோபம் இருந்தால் அழிவு பலவகைகளில் ஏற்படும்! கோபம் வரும் போது நிதானம் குறைகிறது, வார்த்தைகளில் கடுமை […]

மேலும்....

கட்டுரை – மனபலமும்! பலவீனமும்!!

– வி.சி.வில்வம் மனபலம் என்பது நமக்கு நாமே உருவாக்கிக் கொள்வது! மன பலகீனம் என்பது பிறர் நமக்கு ஏற்படுத்துவது! பகுத்தறிவும், சிந்திக்கும் திறனும் இருப்பவர்கள் அதிகமான மன பலத்தைப் பெறுவர்! மற்றவர்கள் பிறரால் அடிக்கடி மன பலகீனம் அடைவர்! உதாரணமாக பார‘தீய’ ஜனதா கட்சியின் பிரச்சார முறை இதுதான்! அவர்களுக்கென்று எந்தக் கொள்கையும் இல்லாததே இதற்குக் காரணம். தகவல்களைப் பொய்யாக உருவாக்கி,அதற்குள் பிரமிப்பைச் செலுத்தி, கூடவே மூளைச் சலவை செய்து, ஒரு கூட்டத்தை நம்ப வைத்துவிடுவார்கள். பிறகுஅதுவே […]

மேலும்....

மகளிரின்மகத்தான மனிதநேயப் பணிகள்! – வி.சி. வில்வம்

பெண்கள் அனைத்துத் துறைகளிலும் கொடி கட்டி பறக்கிறார்கள். ஆனால் அது போதுமானதாக இல்லை என்பது தான் உண்மை! கப்பல், விமானம், ராக்கெட் எனப் பெண்கள் உயரப் பறந்தாலும், கோயம்புத்தூரின் பேருந்து ஓட்டுநர் சர்மிளா அவர்களைத் தமிழ்நாடே உச்சிமுகர்ந்து பாராட்டுகிறது. காரணம் ஓட்டுநர் வேலை கடினமானது. அதிலும் பேருந்தை இயக்குவது பல வழிகளில் சிரமமானது. ஆனால் அவற்றையெல்லாம் முழுவதுமாக அறிந்து, நான் சிறப்பாக செய்வேன் என்று, தனது பக்குவமான பதில்களால் நிறைய நேர்காணல்கள் கொடுத்து வருகிறார். நிறைய வருமானம் […]

மேலும்....