தலையங்கம் – காவிமயமாக்கத் துடிக்கும் ஆளுநருக்கு எதிராய் கடும் போராட்டம் எழும்!

தமிழ்நாட்டின் ஆளுநராகப் பணிபுரியும் ஆர்.என். ரவி என்ற ஆர்.எஸ்.எஸ்.காரர் தான் பதவி ஏற்கும் போது எடுத்த அரசமைப்புச் சட்டத்தின் 159ஆவது பிரிவின் (கிக்ஷீtவீநீறீமீ) படியான பதவிப் பிரமாணத்திற்கு முற்றிலும் முரணாக, தமிழ்நாட்டின் தேர்ந்தெடுக்கப்பட்ட மகத்தான மக்களாட்சியான தி.மு.க. ஆட்சிக்கு எதிராக ஒரு போட்டி அரசினை நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமும் நடத்தி, அதிகார துஷ்பிரயோகத்தை அப்பட்டமாகச் செய்து – தமிழ்நாட்டு மக்களின் நலத்திற்கும், நல்வாழ்வுக்கும் விரோதமாக நாளும் செயல்பட்டு வருகிறார்! சண்டித்தனம் செய்வதே – வாடிக்கையா? தமிழ்நாடு […]

மேலும்....

மாநில வரலாற்று ஆய்வு மன்றம் உருவாக்குவது பற்றி முதல்வர் அறிவிக்கவேண்டும்!

பா.ஜ.க., ஒன்றிய அரசின் ஆட்சி அதிகாரத்திற்கு வரும்பொழுதெல்லாம் இந்திய வரலாறு மாற்றி எழுதப்பட்டு வருகிறது. புராணத்திற்கும், வரலாற்றிற்கும் வேறுபாடின்றி புராணக் கட்டுக் கதைகளைக் கொண்டு வரலாற்றுக் குறிப்புகள் வடிவமைக்கப்படுகின்றன. முதன்முதலாக பா.ஜ.க., வாஜ்பேயி அவர்களது தலைமையின்கீழ் ஆட்சி அமைத்த வேளையில், அப்பொழுது மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சராக இருந்த முரளிமனோகர் ஜோஷி, சிந்துவெளி நாகரிகத்தின் அடையாளங்களை மாற்றி அமைத்திடும் பணியில் முயன்று தோல்வி கண்டார். மொகஞ்சதாரோ, ஹரப்பா ஆகிய இடங்களில் நடத்தப்பட்ட அகழாய்வுகளில் கிடைத்த ‘காளை மாடு’ […]

மேலும்....

கலைஞரும் – திராவிட மாடலும்! – கி.வீரமணி, தலைவர், திராவிடர் கழகம்

‘திராவிட மாடல்’ என்றால் என்ன என்பது குறித்து முத்தமிழ் அறிஞர் மானமிகு கலைஞர் அவர்கள் இரத்தினச் சுருக்கமாகக் கூறுகிறார். “திராவிடம் என்பது ஓர் இனம், ஓர் உணர்வு, பெரியார், அண்ணா கண்ட இந்த சகாப்தத்துக்கு முடிவு கிடையாது” என்று இரத்தினச் சுருக்கமாகக் கூறினார். 31.7.2010 அன்று மீஞ்சூரில் நடைபெற்ற அரசு விழாவில்தான் இவ்வாறு கூறினார். ஆரியர் – திராவிடர் என்பது இரு வேறு கலாச்சார அடையாளங்கள்! இவை திராவிட இயக்கம் கற்பித்துக் கூறியதல்ல.முத்தமிழ் அறிஞர் கலைஞர்அவர்கள் ‘முரசொலி’ […]

மேலும்....

உயர்நீதிமன்ற ஆணைப்படி அர்ச்சகர் பயிற்சி பெற்ற அனைத்து ஜாதியினரிலிருந்தும் அர்ச்சகர்களை தமிழ்நாடு அரசு நியமனம் செய்க!

– தலையங்கம் ‘‘பார்ப்பனர்களைப்பற்றியே அதிகம் பேசுகிறீர்களே, இப்போதெல்லாம் அவர்கள் திருந்திவிட்டார்கள்; மாறிவிட்டார்கள்’’ என்று சில அரைவேக்காட்டு, முழுக்கால் சட்டை அணிந்துள்ள, 69 சதவிகித இட ஒதுக்கீட்டால் பணியில் சேர்ந்து, கைநிறைய சம்பளம் வாங்கும், ‘‘சுயநல வாழ்வையே சொகுசு வாழ்க்கையாக’’ அனுபவித்துவரும் விபீடணத் தமிழர்கள் -‘அண்ணாமலை பிராண்டுகள்’ பேசிவருவது கண்கூடு. அவர்களுக்கு சிலர் எதார்த்தமான நடப்புகளைச் சுட்டிக்காட்டிடுவதும், ‘‘திருந்தாத ஜென்மங்களே, நீங்கள் இருந்தென்ன லாபம்?’’ என்று கேள்வி கேட்டு, சொடுக்குவதற்கும், அன்றாட வாழ்க்கையில் ஆயிரமாயிரம் எடுத்துக்காட்டுகள் உள்ளன. ஒன்றே, […]

மேலும்....

தலையங்கம் – சனாதன தோலுரிப்பே வள்ளலார் சன்மார்க்கம்! வடலூர் மக்கள் திரள் ஆளுநருக்குத் தந்த பதிலடி!

‘என்ன, இந்த வயதிலும் இப்படி அலையவேண்டுமா?’ என்று நம்பால் அன்பும் பாசமும் மிக்க தோழர்களும், நண்பர்களும், அன்பர்களும் பரிவோடு கேட்கிறார்கள். அவர்களது கேள்வியில் நியாயம் இருந்தாலும், இந்தச் சமூகத்தில் அன்றாடம் நடைபெறும் அக்கிரமங்கள், அநீதிகள், அவலங்களைப் பார்க்கும்போது, நமக்கு அந்தக் கேள்வியின் நியாயம் முன்னால் நிற்பதில்லை; அந்த அன்றாட சமூகக் கொடுமைகளும், நாம் பெற்றவற்றையும், நமது தலைவர்கள் நமக்கு விட்டுச் சென்ற இலட்சியச் செல்வங்களையும் ஒரு கூட்டம் (பூணூலும் அவாளின் நிபந்தனையற்ற அடிமைகளும்) எப்படியோ மக்கள் ஏமாந்த […]

மேலும்....