இராஜ கோபாலாச்சாரியார் அறிவுரையை மறுத்த தொலைநோக்கு!

இன்றைக்கு இவ்வளவு சிறப்பாக இந்த இயக்கம் நடக்கிறது.     தந்தை பெரியார் அவர்கள் கையெழுத்து போடுவதற்கு நாலணா வாங்கினார்; அவை அத்தனையும் இன்றைக்குப் பொதுமக்களுக்குப் பயன்படுகிறது என்று சொன்னால், எப்படி இந்த வாய்ப்புகள்? தந்தை பெரியார் செய்த ஏற்பாடு! அன்னை மணியம்மையார் அவர்களுக்கு, இயக்கத்திற்குப் பாதுகாப்பான ஒரு ஏற்பாட்டைச் செய்தல்வேண்டும். அதற்குத் ‘திருமணம்‘ என்று பெயர் சொன்னாலும் பரவாயில்லை என்று துணிந்து செய்தார். இதனைக் காரணமாகக் காட்டி தி.மு.க.வினர் (அரசியல் ஆசை காரணமாக) வெளியேறினார்கள். பெரியாருடைய உற்ற […]

மேலும்....

கல்பாத்தியும் தெருவில் நடக்காமையும்

கேரளாவில் உள்ள கல்பாத்தி என்ற இடத்தில் பொது சாலையில் நடந்து சென்றமைக்காக சங்கரன் என்ற இளைஞர், நம்பூதிரிப் பார்ப்பனரால் தாக்கப்பட்டு தீட்டுக்காக அபராதம் விதிக்கப்பட்ட கொடுமை 1926இல் நடைபெற்றது. இதனைப் பற்றி ‘குடிஅரசு’ ஏடு தரும் அரிய தகவல்: மலையாளம் ஜில்லாவைச் சேர்ந்த பாலக்காடு முனிசிபல் எல்லைக்குள் கல்பாத்தி என்கிற பாகம் பிராமணர்கள் முக்கியமாய் வசிக்கும் பாகம். அது பல தெருக்களை உடையது. அத்தெருக்கள் எல்லாம் முனிசிபாலிட்டியாரைச் சேர்ந்தது. அதைப் பழுது பார்த்தல், பராமரித்தல் எல்லாம் முனிசிபல் […]

மேலும்....

சக்கர நாற்காலியில் ஒரு சரித்திரம்

பாகிஸ்தானைச் சேர்ந்தவர் முனிபா மஜாரி. அற்புதமான ஓவியர், சிறந்த பேச்சாளர், தொலைக்காட்சி நிகழ்ச்சி இணைப்பாளர், மாடல் அழகி இத்தனையும் தாண்டி வேறொரு கோணமும் உண்டு. சக்கர நாற்காலியில் வாழ்க்கையைக் கழிக்கும் முதல் மாடல் அழகி இவர். ஐ.நாவுக்கான பாகிஸ்தானின் தேசியத் தூதர். இவருக்கு 18 வயது நிறைந்தவுடனேயே திருமணம் நடைபெற்றது. ஆனால், திருமண வாழ்வு சந்தோஷமானதாக இல்லை. மன வருத்தத்தோடு வாழ்நாள்களைக் கடத்திய முனிபா மஜாரிக்கு வேறொரு விபரீதம் நேர்ந்தது. கணவன் ரஹீம்கானோடு காரில் பயணிக்கும் போது […]

மேலும்....

அறிவியலுக்கு அடிப்படை இந்து மதமா? (10)

சிகரம்   நிலவு இப்படித்தான் உருவானதா? அத்திரிமா முனிவர் மூவாயிரம் ஆண்டுகள் தவம் செய்து வர அவர் உடல் சோமரசமயம் ஆயிற்று. அவர் கண்களிலிருந்து சோமரசம் சிந்த ஆரம்பித்தது. அதைக் கண்ட பிரம்ம தேவர் தேவதாஸ்திரீகளை அழைத்து அந்த சோம ரசத்தை அருந்தி கருவுறுமாறு கூறிட, அவர்களும் அவ்வாறே செய்து கருவுற்றனர். ஆனால், அதன் கனம் தாங்காமல் அவற்றை அவர்கள் கீழே நழுவவிட அவை கீழே விழுந்து உடனே ஒன்றாக இணைய சந்திரன் (சோமன்) உருவானான். பிரம்மா […]

மேலும்....

காவலர் பெரியார் !

“கருப்புச் சட்டைக்காரன்காவலுக்குக் கெட்டிக்காரன்’’விடுகதை சொல்லிக் கொண்டிருந்தாள்குழந்தை. பெரியாரைப் பற்றிகொஞ்சம் சொன்னேன். தமிழன் எப்போதும்நூலிழையில்உயிர் தப்புகிறான்.ஒவ்வொரு முறையும்அந்த நூலிழைபூநூலிழையாக இருக்கிறது. மதம் உன்னையோசிக்க விடாமல் தடுத்தது.அந்த விஷப் பாம்புஉன்னைக் கொத்த வரும்போதெல்லாம்பெரியார்தான்பாதுகாப்பாக இருந்தார். சாதி உன்னைநூற்றாண்டுகளின்இருண்டப் பள்ளத்தில்தள்ளிவிட்டுச் சிரித்தது. உனக்கான வெளிச்சம்திருட்டுப் போகாமல்பெரியார்தான்காவலாக இருந்தார்.ஆணாதிக்கம் உன்னைஅடுப்பங்கரையிலேயேவைத்திருந்தது.மீசை முளைத்தகரப்பான் பூச்சிகளிடமிருந்துஉனக்கான விடுதலைக்குகுரல் கொடுத்தவர் பெரியார். சொல்லி முடித்தவுடன்பாடப்புத்தகத்தை எடுத்துகுழந்தை திருத்தி எழுதினாள்:“கருப்புச் சட்டைக்காரன்காவலுக்குக் கெட்டிக்காரன்பூட்டு இல்லைபெரியார்!’’ நா.முத்துக்குமார்

மேலும்....