சிந்தனைத் துளிகள் – தந்தை பெரியார்

அமைதி உங்களைத் தாமதமாக – ஆனால் நிச்சயமாக வெற்றிப் பாதையில் அழைத்துச் செல்லும். நல்ல குடும்பம் என்பது வரவுக்கு மிஞ்சி செலவு செய்யாமல் இருப்பதே. பகுத்தறிவுக்கும் தன்மானத்திற்கும் முரண்பட்ட எதையும் நீக்க வேண்டும். அறிவாளிக்கு  – இயற்கையை  உணர்ந்தவனுக்குத் துன்பமே வராது. கடவுள் எண்ணம் அறிவையே கொன்றுவிட்டது. பகுத்தறிவைக் கொண்டு ஆய்ந்து, சரி என்று பட்டபடி நடவுங்கள். கல்வி அறிவும், சுயமரியாதை எண்ணமும், பகுத்தறிவுத் தன்மையுமே தாழ்ந்து கிடக்கும் மக்களை உயர்த்தும். அறிவிற்கும், அனுபவத்திற்கும் ஒத்துவராததை (கடவுள்) […]

மேலும்....

பதிவுகள்

மக்கள் நலப்பணியாளர்களை மீண்டும் வேலையில் அமர்த்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு நவம்பர் 29அன்று உச்ச நீதிமன்றம் ஆணையிட்டது. ராஜீவ் காந்தி கொலைவழக்கில்  தூக்குத் தண்டனையை ரத்து செய்யக் கோரி குற்றம் சாட்டப்பட்ட மூவரும் தொடர்ந்த வழக்கில், தமிழக அரசு கருத்துக் கூற  ஒன்றும் இல்லை என்று அரசு சார்பில் கூடுதல் பதில் மனு நவம்பர் 30 அன்று தாக்கல் செய்யப்பட்டது. முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தமிழக அரசின் சார்பில் புதிய மனு டிசம்பர் 1 […]

மேலும்....

வலைவீச்சு : முகநூல் பேசுகிறது

பைக்ல போகும்போது கூட பெண்கள் ஆண்களை முந்திக்கொண்டு போகக்கூடாது என்று சட்டம் இருக்கா என்ன? என் வண்டியில பின்னாடி உட்கார்ந்துக்கிட்டு வந்த நண்பர் கேட்கிறார்: அங்க பாருங்க அவுங்க பெப்ட் வச்சுக்கிட்டு எப்படி உங்களை முந்திக்கிட்டு ஸ்பீடா போறாங்க… நீங்க சிஙிஞீ வித்துட்டு வேலையப் பாருங்க என்று நக்கல் அடிக்கிறார்…… இப்படி பெண்களை தன்னைவிட தகுதி குறைந்தவர்களாகவே பார்க்கும் ஆண் சமூகம் எப்படி அவர்களுக்குச் சமஉரிமை கொடுக்கும்? பரணீதரன் கலியபெருமாள் டிசம்பர் 7, 2011  இரவு 9:24 […]

மேலும்....

இந்தியாவின் வெட்கக்கேடு

வலைப்பூ ‘நச்’ இந்தியாவின் வெட்கக்கேடு தகுதியானவர்களுக்கு வாய்ப்பில்லாமல், இடஒதுக்கீடு நாட்டைக் கெடுத்துவிட்டது? – -கமலக்கண்ணன், தஞ்சாவூர். உண்மைதான். பல நூற்றாண்டுகளாக நாட்டை இடஒதுக்கீடுதான் கெடுத்துவிட்டது.தலையில் பிறந்தவன் பிராமணன். அவனுக்கு அரசின் அதிக சலுகைகளும் சமூகத்தில் உயரிய மரியாதையும், அவன் கொலையே செய்தாலும் தண்டனை கிடையாது. தோளில் பிறந்தவன் சத்திரியன். அவன் எவ்வளவு அயோக்கியனாக இருந்தாலும் அவனும் அவன் பரம்பரையும்தான் மன்னராக வரவேண்டும். அடுத்து வைசியன். அவன் ஊழல், கலப்படம் செய்தாலும் அவன் பரம்பரைதான் வணிகம் செய்யவேண்டும். கடைசியாக […]

மேலும்....

மகாத்மாவின் வாயடைத்த குரு

புதையல் : மகாத்மாவின் வாயடைத்த குரு ஒருமுறை காந்தி கேரளா சென்றிருந்தபோது அம்மண்ணில் தோன்றிய மாமனிதர் நாராயண குருவைச் சந்தித்தார். அப்போது காந்தி, ‘குருவே! நீங்கள் அமர்ந்திருக்கிற இந்த மாந்தோப்பில் எத்தனையோ மாமரங்கள் உள்ளன. ஆனால் ஒவ்வொரு மர இலையும் வெளிர் பச்சை, அடர் பச்சை என்று மாற்றங்களோடு உள்ளதே? சமுதாயத்திலும் ஜாதி ஏற்றத் தாழ்வுகள் இருக்கத்தானே செய்யும்? என்று கேட்டாராம். அதற்கு நாராயண குரு, நிறத்தில் வேறுபாடு இருக்கலாம். ஆனால், எல்லா மரத்தின் இலைகளையும் பிழிந்து […]

மேலும்....