வாழ்வும் வாக்கும் வாய்மை

தொண்டருக்குத் தொண்டராக வாழ்ந்து, தந்தையின் வழியில் அவரின் மனித நேயக் கொள்கைகளை அகிலமெங்கும் எடுத்துச் செல்லும்  தமிழர் தலைவர் வணக்கத்திற்குரிய வேந்தர் டாக்டர் கி.வீரமணி அவர்களுடன் சமீபத்தில் சீனா, தைவான் மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகள் சென்றிருந்த அனுபவத் துளிகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.  சென்னை விமான நிலையத்தில் புறப்பட்டதிலிருந்து வந்து சேரும் வரை சென்ற இடங்களில் எல்லாம் செல்ல வேண்டிய நேரத்திற்கு முன்னதாக  உரிய அனைத்துத் திட்டமிடுதலையும் கேட்டும் ஒருங்கிணைத்தும் செயல்பட வைத்தது எங்களது பயணம் […]

மேலும்....

அய்யாவே மூச்சு….!

பெரியாரை நம்படா நம்பு அவர் பெயரைக் கேட்டாலே வந்திடும் நெஞ்சினில் தெம்பு பெரும்பாறை போலே உன் பாதை மேலே ஒரு கோடி தடைக்கற்கள் கிடந்தாலும் கிடக்கும் நெம்பு நெம்படா நெம்பு தந்தை பெரியாரின் கைத்தடியைக் கொண்டு நெம்பு நெம்படா நெம்பு என்று ஊரெல்லாம் உலகெல்லாம் ஒலித்திடும் மணி எங்கள் வீரமணி…! தலைவர் வீரமணி…! ஓயாமல் உறங்காமல் உழைத்திடும் மணி எங்கள் வீரமணி…! தலைவர் வீரமணி…! கால்சட்டை நாள்கொண்டே கருஞ்சட்டை ஆனார் நம்மைக் கரையேற்றும் மேடைக்கே உரையாற்றப் போனார் […]

மேலும்....

உழைப்பை மதிக்கும் உன்னதத் தலைவர்

எளிமை, கருணை, கனிவு, துணிவு, நேர்மை, தொண்டறம், கட்டுப்பாடு இவற்றின் கலனாக விளங்குபவர் தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள். பெருக்கத்து வேண்டும் பணிதல் என்ற கருத்தின் காட்சியும், மாட்சியும் அவரே! எளிய தொண்டரிடமும் இன்முகங் காட்டி, செவிகொடுத்துப் பழகும் பண்பு அவரது தனிச்சிறப்பு. உழைப்பவர் யார், பிழைப்பவர் யார் என்பதை எடைபோட்டுப் பழகக்கூடிய ஆற்றலும், அறிவு நுட்பமும் உடையவர் என்பதால், தன் முனைப்பாளர்கள் அவரிடம் தலைதூக்க முடியாது. அதேநேரத்தில், இயக்கத்திற்குப் பல்லாற்றானும் பயன்படுபவர் யாராயினும் அவர்களுக்குச் […]

மேலும்....

மனிதப் பண்பாளர்

இந்த ஆண்டின் சமூகநீதிக்கான கி.வீரமணி விருது பெறும் வீ.கலைச்செல்வம் தந்தை பெரியாரின் தொண்டு, மனிதநேயம் மற்றும் அவரின் இலட்சியக் கொள்கைகளை மக்களிடம் சேர்க்க வேண்டும் என்கிற ஒரே பணிதான் தம் தொண்டறம் என வாழ்ந்து வரும் தமிழர் தலைவர் என்று கூறுவதைவிட, என்றும் என் பாசத்துக்குரிய மரியாதைக்குரிய என் இனிய நண்பர் என்றே அவரை அழைக்க விரும்புகிறேன். பெரியாரிடம் கேட்டதை, கற்றதை பலன் ஏதும் எதிர்பார்க்காமல், நன்றி மறவாமல் இன்றுவரை அய்யாவின் வழியில் மட்டும் வாழ்ந்துவரும் ஒரு […]

மேலும்....

ஆசிரியர் பதில்கள்

கேள்வி : இயற்கை நமக்கு எவ்வளவோ நன்மைகளைத் தந்திருக்கிறது. (நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம்). இருந்தும் அவற்றைப் பஞ்ச பூதம் என்று அழைக்கின்றார்களே ஏன்?  – தி.இரமணன், காஞ்சி பதில் : வடமொழியில் – சமஸ்கிருதத்தில் அவ்வாறு அழைக்கப்படுவதை, பேச்சு வழக்காக்கி விட்டனர். அவ்வளவுதான். பஞ்ச – அய்ந்து. பூதங்கள் – என்பது இவைகளைக் குறிக்கும். கேள்வி : தங்களின் 79ஆவது பிறந்த நாளில் தாங்கள் தமிழினத்திற்குக் கூறும் செய்தி என்ன? – வெங்கட. இராசா, […]

மேலும்....