ஆசிரியர் பதில்கள்

சனாதன எதிர்ப்பு இந்துக்களுக்கு எதிரானது அல்ல! 1. கே: ஒரே நாடு ஒரே தேர்தல் கொண்டுவர ஒன்றிய அரசு சட்டம் செய்தால் அதை உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துத் தடுத்து நிறுத்த முடியுமா? – கார்த்திக், வேப்பம்பட்டு. ப: சட்டப் போராட்டத்திற்கு வாய்ப்பு ஏற்படக்கூடும். – பல அரசியல் சட்டத்திருத்தங்களுக்குப் பிறகே இது நடைமுறைப்படுத்த ஏற்பாடு செய்தால் அதில் சட்டப் பிரச்சினைகள் வரக்கூடும். உச்சநீதிமன்றம், நீதிமன்றங்கள் எப்படி இந்த வழக்கில் தீர்ப்பு அளிக்கும் என்பது வழக்கின் தன்மையைப் பொறுத்தே அமையும். 2. […]

மேலும்....

கட்டுரை – தந்தை பெரியாரும் ஜாதி ஒழிப்பும்

– வழக்குரைஞர் பூவை புலிகேசி தந்தை பெரியார் ஒரு பிறவிச் சிந்தனையாளர். ஆனால், தந்தை பெரியார் ஒரு கடவுள் மறுப்பாளர் என்றும் நாத்திகர் என்றும் எதிர்மறை அடையாளமே அதிகம் அடையாளப்படுத்தப்பட்டது. ஆனால், பெரியார் ஓர் அறிவியல் பார்வை கொண்ட மனித சமத்துவ சிந்தனையாளர். அதற்கான களப் போராளி. மனித சமத்துவத்திற்குத் தடையாக இந்திய மண்ணில் குறிப்பாக தமிழ்மண்ணில்  ‘ஜாதி’ என்னும் கொடிய நோய் கடவுள், மதம், வேதம், சாஸ்திரம், புராணம் ஆகியவற்றின் பேரால் நியாயம் என்று கற்பிக்கப்பட்டு […]

மேலும்....

ஸனாதனம் பற்றி தந்தை பெரியார்

“பார்ப்பான் காலைக் கழுவித் தண்ணீரைத்தான் குடிக்க வேண்டும். பார்ப்பான் சாப்பிட்டு மீதியான எச்சிலைத்தான் சாப்பிடவேண்டும். பார்ப்பானைத்தான் கடவுளாகக் கருதி, கும்பிட வேண்டும் என்று இருப்பதை மாற்றாமல், சும்மா இருந்து கொண்டு வரும் உங்களுக்குக் கடவுள் அருகில் நாங்கள் போனால் மாத்திரம் கோபம் வருகிறதே” என்று கேட்டேன். அவர்களால் பதில் ஒன்றும் சொல்ல முடியவில்லை. பிறகுதான் சந்துக்குச் சந்து பிள்ளையாரைப் போட்டு உடைக்கச் சொன்னேன். இராமன் படத்தைத் தீயிட்டுக் கொளுத்தச் சொன்னேன். இராமாயணத்தை அணுஅணுவாகப் பிரித்து எழுதினேன். பார்ப்பனர்கள் […]

மேலும்....

முகப்புக் கட்டுரை – பா.ஜ.க.வின் ஸனாதன முகமூடி நாடாளுமன்றத் தேர்தலுக்காகவே!

மஞ்சை வசந்தன் நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில், INDIA கூட்டணி வலுப்பெற்று, பி.ஜே.பி.யை படுதோல்வியடையச் செய்யும் என்பது உறுதியான நிலையில், எதைப் பிடித்து வாக்கு வாங்கலாம் என்று தவித்த பி.ஜே.பி. கட்சியினர், தமிழ்நாடு அமைச்சர் மாண்புமிகு உதயநிதி அவர்கள் ஸனாதனத்தை ஒழிக்கவேண்டும் என்று பேசியதைத் திரித்து, இந்துக்களுக்கு எதிரான இனப்படுகொலை என்று மாற்றிப் பேசுகின்றனர். உள்துறை அமைச்சர் அமித்ஷாவே அதைப் பேசும் அவலம், அநியாயம் அரங்கேறியுள்ளது. ஒவ்வொரு தேர்தலுக்கும் ஒரு முகமூடியை அணியும் பி.ஜே.பி. இந்தத் தேர்தலுக்கு […]

மேலும்....

பெரியார் பேசுகிறார்!

நான் மனிதனே! – தந்தை பெரியார் நான் சாதாரணமானவன்; என் மனத்தில்பட்டதை எடுத்துச் சொல்லியிருக்கிறேன். இதுதான் உறுதி, இதை நீங்கள் நம்பித்தான் ஆகவேண்டும் என்று சொல்லவில்லை; ஏற்கக்கூடிய கருத்துக்களை உங்கள் அறிவைக் கொண்டு நன்கு ஆய்ந்து ஏற்றுக் கொள்ளுங்கள்; மற்றதைத் தள்ளிவிடுங்கள். எந்தக் காரணத்தைக் கொண்டும் மனிதத் தன்மைக்கு மீறிய எந்தக் குணத்தையும் என்மீது சுமத்தி விடாதீர்கள். நான் தெய்வத் தன்மை பொருந்தியவனாகக் கருதப்பட்டுவிட்டால் மக்கள் என் வார்த்தைகளை ஆராய்ந்து பார்க்கமாட்டார்கள். “நான் சொல்லுவதை நீங்கள் நம்புங்கள்; […]

மேலும்....