நிகழ்வுகள் : மனிதனை மனிதன் சுமப்பதா? மறியல் போர்!

கி.தளபதிராஜ் மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தை அடுத்த திருவாவடுதுறை மட ஆதீனகர்த்தர் பிப்ரவரி 7ஆம் தேதி (2022) பட்டினப்பிரவேசம் மேற்கொள்ள இருப்பதாக விளம்பரப்படுத்தப் பட்டிருந்த நிலையில், மயிலாடுதுறை மாவட்ட தலைவர் ஆ.ச.குணசேகரன், மாவட்டச் செயலாளர் கி.தளபதிராஜ், குடந்தை மாவட்டத் தலைவர் கு.நிம்மதி மற்றும் மயிலாடுதுறை மாவட்ட நகர ஒன்றிய பொறுப்பாளர்கள் கடந்த 2ஆம் தேதி மாலை ஆதீனகர்த்தரை நேரில் சந்தித்து  பட்டினப்-பிரவேசம் எனும் மனிதனை மனிதன் சுமக்கும் மனித உரிமை மீறலை கைவிடக் கோரி வேண்டுகோள் விடுத்தனர். நேரில் […]

மேலும்....

எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (95)

மண்டியிட்டு மன்னிப்புக் கேட்ட மாபெரும் கோழை பாரதி நேயன் இந்து தர்மத்தை ஆங்கிலேயர்கள் அழிக்கிறார்கள் என்று குற்றஞ்சாட்டி ஆஷ் துரையைச் சுட்டுக் கொன்றான் வாஞ்சிநாதன். இக்கொலையில் பாரதிக்கும் தொடர்பு உண்டு என்று ஆங்கிலேயர்கள் அய்யப்படவே, தனக்கும் இக்கொலைக்கும் தொடர்பு இல்லையென்று 8.4.1914இல் இங்கிலாந்து தொழிற்கட்சித் தலைவர் இராம்சே மெக்டொனால்டுக்கு பாரதி கடிதம் எழுதுகிறார். ஆஷ் வழக்கு விசாரணையில் வெளியான மற்றொரு விஷயம், கொலைக்குப் பல மாதங்களுக்கு முன்பு அவர் புதுச்சேரி வந்தார் என்பதாகும். ஆனால், அவரைப் புதுவையில் […]

மேலும்....

சிறுகதை : ம(வி)ந்தை மனிதர்கள்

அய்.கிருத்திகா (பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் நடத்திய போட்டியில் இரண்டாம் பரிசு பெற்ற கதை) புடவை கிழிந்திருந்த இடத்தை கொசுவ மடிப்புக்குள் மறைத்து லாவகமாக இடுப்பில் சொருகி, முந்தானையில் விசிறி மடிப்புகள் செய்து ரவிக்கையில் பின் குத்தி கொத்தாக அள்ளி அதையும் சொருகி செண்பகம் நிமிர்ந்தபோது மணி ஆறாகியிருந்தது. செண்பகம், மூன்று பக்கம் இரண்டிரண்டு செங்கல் வைத்து உருவாக்கிய அடுப்பைப் பற்ற வைத்து டீ தயாரித்து தூக்கில் ஊற்றியபோது கனகவல்லியின் குரல் கேட்டது. “செம்பா, இங்கே கொஞ்சம் வா…” […]

மேலும்....

கவிதை : நற்றமிழாய் வாழ்க நம் முதல்வர்!

முனைவர் கடவூர் மணிமாறன் உழைப்பேநம் மூலதனம் என்பர் ஆன்றோர்!                உண்மையினை நேர்மையினைத் தெருவில் வீசிப் பிழைத்தோரோ பத்தாண்டாய்த் தமிழர் நாட்டைப்                பெருங்குழியில் பள்ளத்தில் அமிழ்த்து விட்டார்! தழைக்கின்ற செடிமலர்ந்த மலரைப் போலத்                தளபதியார் தமிழ்நாட்டின் முதல்வர் ஆனார்! இழைத்திட்ட கேடுகளை நீக்கு தற்கே                இரவுபகல் பாராமல் இயங்கு கின்றார்!   அய்யாவின் அண்ணாவின் கலைஞர் தம்மின்                அடிச்சுவட்டில் அரசியலைத் தொடரு கின்ற மெய்யான தன்மதிப்பாம் இயக்க வீரர்;                மேலான […]

மேலும்....

கல்வி : “ஏவேஷியன் படித்தால் நல்ல வேலை நிச்சயம்’’

எம்.ஞானசேகர், தொழில் ஆலோசகர்   இந்தியாவில் விமானப் போக்குவரத்தும், விமான நிலையங்களும், பயணிகளின் எண்ணிக்கையும் பல மடங்கு அதிகமாகி விட்டன. இந்தியாவில் ஏவியேஷன் துறையில் இரண்டு பிரிவுகள் உள்ளன. கமர்ஷியல் எனப்படும் நாம் பயன்படுத்தும் விமானம், விமானப் போக்குவரத்துப் பிரிவு மற்றும் ராணுவ விமானப் பிரிவு. நாம் பயன்படுத்தும் போக்குவரத்து பயணிகளுக்கான மற்றும் சரக்கு போக்குவரத்து என இரண்டு பிரிவுகளாக உள்ளன. இதையும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு போக்குவரத்து என மேலும் பிரிக்கலாம். ராணுவ விமானப் பிரிவு […]

மேலும்....